To search this blog

Sunday, November 1, 2020

Battle of Thakkolam ~ some history and sad story of Sri Azhagu Raja Perumal Aalayam

In the history of Tamil Nadu, have read about Cheras, Chozhas, Pandiyas and Pallavas .. ..  Vijayanagara Empire and Chalukyas  .. .. heard of Rashtrakuts !! (this is no post on history though – but a reproduction of sordid state of affairs of a Vaishnavaite temple – source article being Sakthi Vikadan of 2016)

 


Rashtrakuta was a royal dynasty ruling large parts of the Indian subcontinent between the sixth and 10th centuries. The earliest known Rashtrakuta inscription is a 7th-century copper plate grant detailing their rule from Manapura, a city in Central or West India. Other ruling Rashtrakuta clans from the same period mentioned in inscriptions were the kings of Achalapur and the rulers of Kannauj. Several controversies exist regarding the origin of these early Rashtrakutas, their native homeland and their language. The Elichpur clan was a feudatory of the Badami Chalukyas, and during the rule of Dantidurga, it overthrew Chalukya Kirtivarman II and went on to build an empire with the Gulbarga region in modern Karnataka as its base. This clan came to be known as the Rashtrakutas of Manyakheta, rising to power in South India in 753 AD. At the same time the Pala dynasty of Bengal and the Prathihara dynasty of Malwa were gaining force in eastern and northwestern India respectively.

Of the many kings of this dynasty – this post draws reference to Krishna, more because of the place Thakkolam !  Krishna III whose Kannada name was Kannara (r. 939 – 967 C.E.) was the last great warrior and able monarch of the Rashtrakuta Dynasty of Manyakheta. He was a shrewd administrator and skillful military campaigner. He waged many wars to bring back the glory of the Rashtrakutas and played an important role in rebuilding the Rashtrakuta empire. He patronised the famous Kannada poets Sri Ponna, who wrote Shanti purana, Gajankusha, also known as Narayana, who wrote on erotics, and the Apabhramsha poet Pushpadanta who wrote Mahapurana and other works. His queen was a Chedi princess and his daughter Bijjabbe was married to a Western Ganga prince. During his rule he held titles such as Akalavarsha, Maharajadhiraja, Parameshvara, Paramamaheshvara, Shri Prithvivallabha etc. At his peak, he ruled a vast empire stretching from the Narmada river in the north to the Kaveri river delta in the south. A copper grant of 993 issued by the Shilahara king of Thana claims the Rashtrakuta control extended from the Himalayas in the north to Ceylon in the south and from the eastern sea to the western seas. The grant states that when King Krishna III mobilised his armies, the kings of Chola, Bengal, Kannauj, Andhra and Pandya regions used to quiver.

The Battle of Takkolam (948–949) was a military engagement between a contingent of troops led by Rajaditya, crown prince and eldest son of the Chola king Parantaka I (907–955), and another led by the Rashtrakuta king Krishna III (939–967) at Takkolam in southern India. The battle resulted in the death of Rajaditya on the battlefield and the defeat of the Chola garrison at Takkolam. The battle is considered as the climax of the confrontation between the two imperials powers, the Cholas and the Rashtrakutas, for mastery of south India. Chola prince Rajaditya Chola was killed "while seated on his elephant with a well-aimed arrow". From the famous Atakur inscription it is known that Krishna III gave Buthuga II extensive Ratta territories near Banavasi in return for this victory.   With the fall of the Cholas, he was able to extract tribute from the Pandyas and the Chera ruler of Kerala. This victory is narrated in Somadeva's writing Yashatilaka Champu of 959 as well.

There existed a beautiful old temple with ornate stone pillars Sri Azhagu Raja Perumal temple dating back to 7th century or so but in dilapidation now. Uncared for, neglected and usurped like many other temple properties !! Sordid  

'Thirucoral' alias 'Thakkolam' is historically important as the battle-field where the Rashtrakudas and the Cholas fought in 949 A.D. It is about seven miles from PalIur on the Kancheepuram-Arkonam road. Vellore, the district headquarters and Arkonam the taluk headquarters are 45 and 8 miles away respectively. Buses plying frequently between Madras and Vellore pass through this village. In the north-eastern corner of this village is a small temple dedicated to Sri Gangadharar.

Now with a heavy heart read this article that appeared in Sakthi vikadan in 2016 [photos too are from the article]

ஆலயம் தேடுவோம்!

ஆக்கிரமிப்பில் அழகுராஜ பெருமாள் ஆலயம்!

 




கோயில் சொத்துக்களும் நிலங்களும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாவது நாம் எல்லோரும் அறிந்த, வேதனைக்குரிய ஒரு விஷயம்தான். ஆனால், ஓர் ஆலயமே ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கும் அவலமும் இந்தப் புண்ணிய பூமியில் நடந்திருக்கிறது என்பதை அறிய வரும்போது, நமக்கு உண்டான அதிர்ச்சிக்கு அளவே இல்லை. கோயிலுக்கு உள்ளே தெய்வ சந்நிதிகள் இருப்பதற்குப் பதிலாக, மனிதர்கள் அந்த இடங்களைக் கையகப்படுத்தி, வீடு கட்டி வசிக்கும் அவலத்தை என்னவென்று சொல்வது!

புராண பிரசித்தியும் வரலாற்றுப் பிரசித்தியும் பெற்ற திருவூறல் என்கிற தக்கோலம் திருத்தலத்தில்தான், இப்படி ஓர் அநியாயம் நடந்திருக்கிறது. ஏழு சிவாலயங்கள் அமைந்திருக்கும் காரணத்தால் 'சப்த சிவ க்ஷேத்திரம்’ என்று போற்றப்பெறும் தக்கோலம் திருத்தலத் தில் அமைந்திருக்கும் அழகுராஜ பெருமாள் ஆலயம்தான் சிலரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. நேரில் சென்று பார்த்தபோது, சக்தி விகடன் 'நாரதர் உலா' பகுதியிலும் இடம்பெறவேண்டிய ஆலயமாயிற்றே இது எனத் தோன்றவே, உடனடியாக நாரதரின் கவனத்துக்கு விஷயத்தைக் கொண்டு சென்றுவிட்டோம்!

ஒரு காலத்தில், இந்தக் கோயில் எழிலார்ந்த அழகுடன் திகழ்ந்திருக்க வேண்டும் என்பதை அதன் தோற்றத்தைப் பார்க்கும்போதே நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இன்றைக்குச் சிதிலம் அடைந்த ராஜகோபுரத்தையும், அரைகுறையாகக் காட்சி தரும் மண்டபம் மற்றும் கருவறைகளையும் காணும்போது, நெஞ்சம் பதைக்கிறது. 'நமக்கெல்லாம் அருள்புரிவதற்காக பெருமாள் தானுகந்து கொண்ட திருக்கோயில் இப்படி ஆக்கிரமிப்புக்கு உள்ளானதற்குக் காரணம் என்ன என்று ஆராய்வதை விடவும், இனியாகிலும் அந்த ஆக்கிரமிப்புகளைச் சட்ட ரீதியாக அகற்றி, சிதிலம் அடைந் திருக்கும் ஆலயத்தைச் சீரமைக்க திருப்பணிகள் மேற்கொண்டு, விரைவில் அக்கோயில் கும்பாபிஷேகம் காண வழி செய்வதுதான் நமக்கான கடமையும், அழகுராஜ பெருமாளுக்கான நன்றிக்கடனும் ஆகும்!  

கோயில் என்பது பொதுச்சொத்து. ஊர் மக்களின் நலனுக்காகவே அக்காலத்தில் மன்னர் பெருமக்கள் இதுபோன்ற பெரிய பெரிய கோயில்களை நிர்மாணித்து, அவற்றில் பூஜை புனஸ்காரங்களும், விழாக்களும் நடைபெற நிவந்தங்களை எழுதி வைத்தார்கள். இப்போது இதை உணர்ந்துகொண்ட தக்கோலம் ஊர்மக்கள், அழகுராஜ பெருமாள் கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பெருமாளுக்கு ஆலயத் திருப்பணிகள் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அழகுராஜ பெருமாள் இந்தத் தலத்தில் ஆலயம் கொண்ட புராண நிகழ்ச்சி என்ன?

திருவூறல் தல புராணம் என்ற புராணத்தில், நைமிசாரண்யத்தில் தவம் இயற்றிக்கொண்டிருந்த முனிவர்களுக்கு வியாசரின் சீடரான சூத முனிவர் கூறியதாக இடம் பெற் றிருக்கிறது அந்தப் புராண வரலாறு. அமிர்தம் வேண்டி பாற்கடல் கடைந்தபோது, ஆலகால விஷம் தோன்றியது. அதன் கடுமை அசுரர்களையும் தேவர்களையும் பாதித்ததோடு நிற்கவில்லை; மகாவிஷ்ணுவையும் பாதிக்கவே செய்தது. விஷத்தின் கடுமையால், விஷ்ணு மூர்த்தி யின் மேனி கருநிறமாக மாறிவிட்டது. பெருமாள் மீண்டும் பொன்மேனி பெறவேண்டும் என்பதற் காக, 'பொன்னார் மேனியனும் புலித்தோலை அரைக்கசைத்த’வனுமாகிய சிவபெருமானைப் பிரார்த்தித்து, திருவூறல் என்னும் இந்தத் தக்கோலம் திருத்தலத்தில் தவமும் பூஜைகளும் செய்து வரலானார். விஷ்ணுவின் தவத்தால் மகிழ்ந்த மகேஸ்வரன் அவருக்குக் காட்சி கொடுத்து, ''நாராயண மூர்த்தியே, உம்முடைய மேனி கருநிறம் அடைந்தது நம் இருவருடைய திருவுள்ளத்தின்படியே நிகழ்ந்ததாகும்.ஒதுக்கப்பட்ட திதிகளான அஷ்டமிக்கும் நவமிக் கும் உம்முடைய அவதாரமானது சிறப்பு சேர்த்ததுபோல், அனைவராலும் ஒதுக்கப்படும் நிறமான கருமை நிறமும் இனி உம்மால் ஏற்றம் பெறும். இந்தக் கருத்த நிறமே உமக்கு மேலான அழகினையும் தரும். கோடி மன்மதர்களின் அழகும் உம் ஒருவருடைய அழகுக்கு ஈடாகாது. நீர் இத்தலத்திலேயே அழகுராஜ பெருமாள் என்ற திருப்பெயருடன் மங்களலட்சுமி தாயாருடன் வீற்றிருந்து, பக்தர்களுக்கு சகல மங்கலங்களையும் அருள்வீராக!''  என்று கூறி அருளினார். ஸ்ரீஅழகுராஜ பெருமாள் இங்கு கோயில் கொண்ட வரலாறு இதுதான்.  

எண்ணற்ற மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பெற்றதும், மானியங்கள் வழங்கப்பட்டது மான அழகுராஜ பெருமாள் கோயில் எப்போது சிதைந்தது, எப்படிச் சிதைந்தது என்பதெல்லாம் அந்தப் பெருமாளுக்குத்தான் வெளிச்சம்! ஆனால், ஆலயம் சிதையத் தொடங்கியபோதே அப்போதிருந்த மக்கள், சுதாரித்துக்கொண்டு ஆலயத்தைச் சீர்படுத்த திருப்பணிகள் செய்யாமல் விட்டதன் விளைவுதான், காலப்போக்கில் யாருமே கவனிப்பாரின்றி கோயிலே இன்றைக்கு ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

அழகுராஜ பெருமாளின் திருவுள்ளப்படி இப்போது ஊர்மக்கள் இணைந்து ஒரு திருப்பணிக் கமிட்டி ஆரம்பித்து, ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கோயிலை மீட்டு, திருப்பணிகளை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் ஒருவரான புருஷோத்தமன் என்பவரைச் சந்தித்தோம்.

''எனக்குத் தெரிஞ்சு கோயில் பல வருஷமாவே இந்த நிலையிலதான் இருக்கு. யாருமே இது பற்றி அக்கறை எடுத்து, திருப்பணி செய்ய முன்வராத நிலையிலதான், கோயிலுக்கு உள்ளேயே சிலர் வீடுகள் கட்டிக் குடியேறும் அளவுக்குக் கொண்டு வந்துவிட்டிருக்கு. கோயில் குளமும் கூட ஆக்கிரமிக்கப்பட்டிருக்கு. அழகுராஜ பெருமாள், தாயார் மூல விக்கிரஹங்களை யாரோ உடைச்சிட்டாங்க. ராமர் மற்றும் சீதை விக்கிரஹங்கள் மற்றும் உற்ஸவ விக்கிரஹங்களை சிவன் கோயில்லயும், ஆஞ்சநேயர் கோயில்லயுமா வெச்சிருக்கோம். இப்பத்தான் ஊர்மக்களோட ஒத்துழைப்புடன் ஒரு கமிட்டி அமைச்சிருக்கோம்.  

ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமத் அப்பன் பரகால ராமாநுஜர் எம்பார் ஜீயர் சுவாமிகள் இந்தக் கோயிலுக்கு வந்து பார்வையிட்டு, திருப்பணிகள் செய்வதற்கு உத்தரவு கொடுத்திருக்கார். ஸ்ரீமத் ராமாநுஜரின் 1000வது ஜயந்தி கொண்டாடும் இந்த நேரத்துல, எப்படியாவது இந்தக் கோயில் திருப்பணிகளை முடித்து, சம்ப்ரோக்ஷணம் செய்ய நினைச்சிருக்கோம். எங்களோட முயற்சிகள் நல்லபடியாக நிறைவேற அந்தப் பெருமாள்தான் அனுக்கிரகம் செய்யவேண்டும்'' என்றார்.  

முதலில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவேண்டும்; பின்னர் கோயில் திருப்பணிகளைத் தொடங்கவேண்டும்; உடைக்கப்பட்ட மூல விக்கிரஹங்களுக்குப் பதிலாக புதிய விக்கிரஹங்கள் செய்யப்பட வேண்டும்; இன்னும் ராஜ கோபுரம், மண்டபம், கருவறைகள் கட்டுவது என ஏராளமான திருப்பணிகள், கமிட்டியினர் முன்பாகக் காத்துக் கொண்டிருக்கின்றன.  

அரசுத் தரப்பில் விரைவிலேயே உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, உடனடியாக திருப்பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்பதுதான் ஊர் மக்களின் பிரார்த்தனை!  

அவர்களின் பிரார்த்தனை வெகு சீக்கிரம் பலிக்கவேண்டும். அழகுராஜ பெருமாளின் திருக்கோயில் திருப்பணிகளுக்கு நிதியுதவி உள்ளிட்ட நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வது நம்முடைய கடமையும் ஆகும். அப்படிச் செய்வ தால், அழகுராஜ பெருமாளின் அருளுடன், ஆயிர மாயிரம் பக்தர்களுக்குப் பெருமாளின் திருவருள் கிடைக்கச் செய்த புண்ணியமும் நமக்கும் நம் சந்ததியர்க்கும் கிடைக்கும் என்பது உறுதி.

திருத்தலக் குறிப்புகள்:

எங்கிருக்கிறது?: சென்னை பூவிருந்தவல்லி அரக்கோணம் சாலையில் அமைந்திருக்கிறது.

எப்படிச் செல்வது?: சென்னையில் இருந்து பேரம்பாக்கம் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. பேரம்பாக்கத்தில் இறங்கி, ஆட்டோ அல்லது அரக்கோணம் செல்லும் பேருந்து மூலம் தக்கோலம் தலத்தை அடையலாம்.

 

https://www.vikatan.com/spiritual/temples/114918-thakolam-azagu-perumal-temple-encroachings

https://www.facebook.com/permalink.php?story_fbid=1359947687506825&id=775750842593182

Read further : உலக தமிழர் விழிப்புணர்வு குழுமம்  facebook post   2.11.2019.  

கோயில் நிலங்கள் கொள்ளையடிப்பதை பார்த்துள்ளோம், சிலைகள் திருடு போவதை கேட்டுள்ளோம். ஒரு கோயிலே கபளீகரம் ஆனதை பார்த்துள்ளோமா?  தெரு ஓர பிள்ளையார் கோயிலோ, சாலையோர மாரியம்மன் கோயிலோ இல்லை. ஒரு மிகப்பெரிய வைணவ ஆலயம்.  அதுவும் சென்னைக்கு அருகாமையில் 50-60 கிலோ மீட்டர் தொலைவில்.

சற்றே வியப்பு. வரலாற்று சிறப்பு வாய்ந்த தக்கோலம் ஊர் தான் அது. இங்கே ஜலனாதீஸ்வரர் சிவாலயம் இருப்பது மட்டுமே பலருக்கு தெரியும். மீதம் 7 சிவாலயம் பல பேருக்கு தெரியாது. சரி தக்கோலம் சைவ கோயில் உள்ள ஊர் தானே.  என்ன புது பிட்டா போடுரீங்க.  கொஞ்சம் கண்ணீர் கதை தான். அந்த கதையின் நாயகன் மங்கள லட்சுமி சமேத அழகிய கரிய வரதர் (அழகு ராஜ பெருமாள்). பாடல் பெற்ற சைவ கோயிலை விட மிகப்பெரிய வைணவ ஆலயம்.

இந்த அழகு ராஜ பெருமாளுக்கு அழகிய ஐந்து நிலை கோபுரம் ஏதோ மிச்ச சொச்ச எச்சமாக நோய் வாய்ப்பட்டு இருந்தாலும், அடிபட்ட சிங்கம் போல் கம்பீரம் குறையாமல் காட்சி அளிக்கிறது. மூலவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை.  உற்சவர் ஜலனாதீஸ்வரர் கோயிலில் அடைக்கலம் புகுந்து விட்டார்.  கிட்டத்தட்ட தெரிந்தே 100 ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரர்.  சரி கோயில் கபளீகரம்னு தானே ஆராமிச்சோம்.  என்ன தான் ஆச்சி? என்ற கேள்விக்கு இப்படியெல்லாம் கூட ஆகுமா என்ற வியப்புக்குறியே விடையாய் கிடைக்கிறது.  வழக்கம் போல் ஆலய தரிசனம் தொடர் ஓட்டுவோம். இருப்பது ராஜ கோபுரம் மட்டுமே, சுற்று மதில்கள் மாயமாகி பல வருடம் ஆகிற்று.

உள்ளே நுழைந்தால் (வெளியூர் ஆட்கள் அவ்வளவு சீக்கிரம் நுழைய முடியாது என்றே சொல்லலாம்) அழகிய வெளிச்சுற்று  பிரகாரம் என்று வாய் எடுப்பதற்கு வாய்ப்பு அங்கேயே மறுக்கப்படுகிறது.  கிட்டத்தட்ட 60 வீடுகள். அழகிய திருக்குளம், தெருக்குளமாக உருக்குலைந்து போய் உள்ளது.  அழகிய மண்டபம் அலங்கோலமாய் காட்சி அளிக்கிறது. எந்த மன்னன் ரசித்து, ருசித்து கட்டினானோ தெரியவில்லை.   கருவறை குமுத பட்டை முழுவதும் முத்து முத்தாய் கல்வெட்டுகள் சிதறி கிடக்கின்றன.  

பிழைப்பற்றவனுக்கு பொன்னேரியில் திருவிழாவாம். என்ன செய்வது சில வரலாற்று ரசனை வருத்தெடுக்கும் போது, இது போல் கிறுக்கு புத்தி போகத்தான் செய்கிறது. ஊர் மக்கள் சிலரை அனுகி, நிலைமை பற்றி விசாரிக்கும் போது சில கண்ணீர் கதைகள் குவிய துவங்கியது.

சார்.  40-50 வருஷத்துக்கு முன்னாடி... Flashback இது ஒரு அழகான வடகலை அக்ரஹாரம். இவர் உண்மையிலேயே பெயருக்கு ஏற்றார் போல் அழகு ராஜா தான். தின்பதற்கும் (பிரசாதம்), திருவிழாவிற்கும்  எந்நேரமும் குறைவில்லை.  சிறுக சிறுக கோயில் நிலங்கள் கை விட்டு போயிடுச்சு, சரியா பூஜை செய்ய முடில. கோயிலை நம்பி இருந்த நயனக்காரர், வண்ணார், பண்டாரம் சிறுக சிறுக வெளியேறிட்டாங்க.  கோஷ்டி கோஷ்டியா இருந்த அந்தணர்கள், ஆங்காங்கே வயிற்று பிழைப்புக்கு புலம் பெயர்ந்துட்டாங்க.  சின்னதா ஒரு குடிசை உள்ளே புகுந்தது. அந்த விஷ செடி இன்னைக்கு 60 மாடி வீடு முளைத்த வெட்டி எரிய பட வேண்டிய விருட்சமா(மரமாக) மாறிடுச்சு. எப்படியோ சிலர் முயற்சித்து பெருமாளை (சிவாலயத்தில் உள்ள உற்சவர்) புரட்டாசி மாதம் ஒரு சனிக்கிழமை அவர் சொந்த இடத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். 

வெறி கொண்ட ஆக்கிரமிப்பாளர்கள் இரும்பு பைப் கொண்டு தாக்க தொடங்கி உள்ளனர். தோளிலே பெருமாள். பெருமாளை தங்குவதா? அடி கொடுத்தால் வாங்குவதா?  தப்பித்தோம் பிழைத்தோம் என்று சுற்றி பார்த்து விட்டு திரும்பி விட்டார் பெருமாள்.  மாலிக்கப்பூர் படையெடுப்பின் போது கூட இவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை. எல்லாம் கடந்த 40-50 வருட திருட்டு ஆட்சியில் சுரண்ட பட்டு இருக்கிறது. 

எப்படியோ வேலூர் கலெக்டர் வரை விஷயம் கசிய, கடந்த ஞாயிறு அன்று நான்கு காவலர்கள் உதவியுடன் பெருமாள் ஏலனப்பட்டு சுதர்சன யாகம் செய்து கொண்டார்.  முன்னோர்கள் அடேய் பாத்துகோடா நம்ம ஊர் பொக்கிஷம் என்று விட்டு சென்றதை, எப்படி விஷமமாய் ஒவ்வொரு ஊரிலும் விட்டுவிட்டோம்.  

அல்ப பணத்திற்கா? டாம்பீக அரசியலுக்கா?

  

1 comment:

  1. இன்னும் விரிவாக வேண்டும் .

    ReplyDelete