To search this blog

Monday, November 16, 2020

Annakoota Uthsavam 2020 ~ Govardhana giri prabhavam .. .. "எழில்விழவில், பழநடைசெய்"

*அந்தமில் வரையால் மழை தடுத்தவன்*

*குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன்*

*காக்கும் இயல்வினன் கண்ணபெருமான்*

எழில்விழவில், பழநடைசெய் : அன்னக்கூட உத்சவம்  2020

 

எழில்விழவில், பழநடைசெய்  ~  ஆழ்வார்கள்தமிழ்அற்புதமானது.  என்னே ஒரு நடை.  அநாதி ஆசாரமாக பல வருடங்களாக நடந்துவரும் சிறந்த உத்சவத்திலே .

ஸ்ரீகிருஷ்ணாவதாரம் ஒரு அற்புதம்.  எம்பெருமான் இடையனாக, பலப்பல கஷ்டங்களுக்கு நடுவே நாளொரு மேனியும் பொழுதொரு  அற்புதலீலைகளுமாய் திருவாய்ப்பாடியிலே வளர்ந்தான்.  யசோதாபிராட்டியும் மற்றைய ஆயரும் கொஞ்சி குலாவி பாலூட்டி சீராட்டி கண்ணனை வளர்த்தனர்.  கண்ணனும் பலராமனும்   “காடுகளூடுபோய்க் கன்றுகள் மேய்த்து மறியோடி” என்கிறபடியே ஒன்றிரண்டு காடுகளன்றிக்கே, காடுகள்தோறும் திரள்திரளான கன்றுகளை மேய்த்து ஒரு மத்தகஜம் உலாவுமா போலே சென்று வந்தான். 


When Lord Krishna was born in a cell in Mathura, it rained and Yamuna river was in spates.  Immediately after His birth, he was taken across the river to Gokul.   Lord Krishna & Balarama grew up  in the villages of Gokul and played across Vrindavan, Govardhan showing in every little gesture His capabilities – yet to His foster Mother Yasodha and others around, little was realized.  The mighty Lord capable of killing so many demons who came one after the other in trying to eliminate Him – exterminated the asuras in various forms, yet played like a normal little mortal, stealing butter and when caught was bound and tied with rope across his waist causing deep marks and scars – He acted as if He was bound by that little rope though he performed bigger valours.  

எம்பெருமான் எத்தகையவன் ? - எவ்வளவு சிறப்பு வாய்ந்தவன் !  - அவாப்த ஸமஸ்தகாமனாய் ஸர்வஜ்ஞனாய் ஸர்வசக்தியுக்தனான  அதீத சக்தியும் சிறப்பும் வாய்ந்த எம்பெருமான் - வெண்ணை களவு, மற்றும் சிறுசிறு தவறுகள் செய்து, அகப்பட்டுக்கொண்டு, பயந்து, யசோதை சிறுங்கயிறால் கட்ட, கட்டுண்டு,  தண்டிக்கப்பட்டவன் போலவும், அந்தக் கட்டில் நின்று தப்புவதற்கு சக்தியற்றவன் போலவும் கட்டை அவிழ்க்கும் உபாயத்தை உணராதவன் போலவும், இருந்தது   என்ன ஆச்சரியம்! என்று அனுபவிக்கிறார்.  

மாயக்கண்ணன் ஜனித்த மதுரா நகரத்துக்கு அருகில் உள்ள கோகுலம், ப்ருந்தாவனம், கோவர்தன்  போன்றவை கண்ணன் விளையாடி திகழ்ந்த இடங்கள்.   திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே, இராப்பத்து உத்சவத்திலே ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளுக்கு 'கோவர்தன கிரி' சாற்றுப்படி.  ஆண்டுகள் ஒரே மாதிரி இருக்க மாட்டா ! ~ சரித்திரத்தில் தேசங்கள்/ நாடுகளுக்கு இடையே போர்களும், பஞ்சமும், பெரும் பிணியும், பெரு வியாதிகளும் மக்களை அல்லல்படுத்தி உள்ளன.  அல்லல் வரும்போது அஞ்சுற வேண்டா! - எம்பெருமானை துதிப்பீர். அவன் நம்மை சிறப்பாக காத்தருள்வான்.  இதோ இங்கே 'கோவர்த்தன கிரி பிரபாவம்'. 


மழைக்கும் மேகத்துக்கும் அதிபதி இந்திரன். அவனே தேவர்களுக்கும் அதிபதியானதால் தேவேந்திரன் என்ற திருநாமத்தைப் பெற்றான். இந்திரனின் பெருங்கருணையால் மாதம் மும்மாரி பெய்து நிலங்களில் பயிர் செழுமையாக விளைந்து, மக்கள் பசிப்பிணியின்றி வாழ்ந்து வந்தனர். இந்த நன்றியை இந்திரனுக்குத் தெரிவிப்பதற்காக மக்கள் ஒவ்வொரு ஆண்டும் முதல் பயிரை அவனுக்கே படைத்தனர். இதனை ‘இந்திர விழா’ என்று கோலாகலமாகக் கொண்டாடினர்.  நான் மட்டுமே அனைத்து உயிரினங்களின் வாழ்வாதாரமாக இருக்கிறேன். என்னையன்றி மக்களுக்கு நன்மைகள் செய்பவர்கள் வேறு யாரும் இல்லை!’ என்ற அகம்பாவம் இந்திரனுக்கு மிக அதிகமாக இருந்தது. இந்தச் செருக்கை அடக்கிட பரந்தாமனானகண்ணபிரான்,  ஒரு விருத்தாந்தம் அருளினார்.  

ஒரு வருஷம் விருந்தாவனவாசிகள் ஒன்றுகூடி பசுக்களை அலங்கரித்து அவற்றிற்குப் புல் கொடுத்தார்கள். பசுக்களுடன் கோவர்த்தன கிரியை வலம் வந்தார்கள். கோபியர்களும் விமரிசையாக ஆடையணிந்து மாட்டு வண்டிகளில் அமர்ந்து கிருஷ்ணரின் லீலைகளைப் பாடியபடி பவனி வந்தார்கள். கோவர்த்தன பூஜையை நடத்தி வைத்த அந்தணர்கள் கோபாலர்களையும் கோபியரையும் ஆசீர்வதித்தார்கள். எல்லாம் சரிவர நடந்தேறிய பின் கிருஷ்ணர் மிகப்பிரமாண்டமான உருவத்தை மேற்கொண்டு கோவர்த்தன கிரிக்கும் தமக்கும் எவ்வித வேறுபாடுமில்லை, ‘இரண்டும் ஒன்றே’ என்பதை அங்கிருந்த மக்களுக்கு உணர்த்தினார். பின்னர், அங்கு அர்ப்பணிக்கப்பட்ட உணவு முழுவதையும் கிருஷ்ணர் உண்டார்.  கோவர்த்தன கிரியும் கிருஷ்ணரும் ஒன்றே என்பது இன்றும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அம்மலையிலிருந்து கற்களை எடுத்துச்சென்று வீடுகளில் வைத்து கிருஷ்ணராக அவற்றை பாவித்து பூஜிக்கிறார்கள். 

கர்வத்தில் தன் மதி இழந்த பலவகையான மேகங்களுக்கு அதிபதியான இந்திரன் ‘ஸாங்வர்த்தக’ என்ற கொடிய மேகத்தை அழைத்தான். இந்த மேகம், பிரபஞ்சம் முழுவதையும் ஒரே மூச்சில் அழித்துவிடும் ஆற்றல் கொண்டது. ஆகவே இந்திரன், விருந்தாவனத்தின் மேல் படர்ந்து அப்பகுதி முழுவதையும் பெரும் வெள்ளத்தில் மூழ்கடிக்கும்படி ‘ஸாங்வர்த்தக’ மேகத்திற்குக் கட்டளையிட்டான். இந்திரனின் கட்டளைப்படி பலவகையான அபாயகரமான மேகங்கள் விருந்தாவனத்தின்மேல் தோன்றி, தம் பலம் முழுவதையும் பிரயோகித்து அழிவை ஏற்படுத்தத் தொடங்கின. ஆயர்பாடி முழுவதும் நாசமாகும்படி பெருங்காற்றுடன் பெருமழையைப் பெய்தன. அப்படி மழை பெய்த ஒரு கணத்தில் பூமியும் ஆகாயமும் திசைகளும்  மழைத்தாரைகள் நிறைந்து ஒன்றாகக் காணப்பட்டன. மின்னல்களும் இடிகளும் கசையடிகளாகத் தாக்க, அந்த அடிக்குப் பயந்தவைபோல், மேகங்கள் திக்குகள் அதிரும்படி கர்ஜித்தன. ஆரம்பத்தில் கூரிய அம்புகள்போல் நீர் தாரை தாரையாகப் பெய்தது. பிறகு தூண் பருமனில் மழையைப் பொழிந்து, விருந்தாவனத்தில் நிலப்பகுதிகளை மேடு பள்ளம் தெரிய வொண்ணாமல் நீரால் நிரப்பின. உலகமே இருள் மயமானது. 


மாடுகளும், கன்றுகளும் கஷ்டப்பட, மனிதர்கள் பெரும்பயத்துடன் கிருஷ்ணனைசரணடைந்து, ‘‘கிருஷ்ணா, நீயே எங்களைக் காப்பாற்ற வேண்டும்’’ என்று தீனக்குரலில் வேண்டினர்.   இடி, மின்னல், மழையோடு பெருங்காற்றும் வீசியதால் ஒவ்வொரு ஜீவராசியும் கடுங்குளிரால் நடுங்கின.  ‘பக்தர்களே! நீங்கள் யாவரும் இந்த மலையின் அடியில் வந்து சேருங்கள். இந்தக் காற்றுக்கும் மழைக்கும் அஞ்ச வேண்டாம். அதை நான் இந்த மலையைத் தூக்கிப் பிடித்துத் தடுத்துவிட்டேன். இதனடியில் உள்ள இடங்களில் அவரவர் விருப்பம்போலச் சுகமாக இருக்கலாம். மலை மேலே விழுந்துவிடுமோ என்று பயப்பட வேண்டாம்!’’ என்று கூறியபடியே மலையைத் தனது விரலாலே கிருஷ்ண பகவான் தாங்கிப்பிடித்துக்கொண்டார்.  தமது இடதுகையின் சுண்டுவிரலின் நுனியில் நிறுத்தியிருந்ததைக் கண்டும், பசி, தாகம், வேறு எந்தவிதமான கவலையுமில்லாமல்  அவர் முகம் ஒளிவிட்டதை எண்ணியும் ஆச்சர்யமடைந்தார்கள், அவ்வூர் மக்கள். . ஏழு தினங்கள் ஓயாமல் மழை பெய்ய, சுவாமியும் அந்த கோவர்த்தனகிரி மலையை குடைபோல ஏந்தி அனைவரையும் காத்தருளினார்.

 




Last year on  day 6  of Manavala Mamunigal Uthsavam on 28.10.2019    –  it was a great dharshan.  Sri Parthasarathi  – sublime beauty,  draped in beautiful silk dress, dressed like a Cowherd King, wearing  a turban,  whip in his hand, the other hand resting, adorning many jewels, including impeccable shining ear rings ~ he was also wearing bangles - what a marvellous treat to His bakthas.  – and it is the day of   ~   Govardhanagiri Gopala.   15.11.2020 was Annakoota Uthsavam at Thiruvallikkeni divyadesam and it was the same glorious sarruppadi – sadly, there was no purappadu and hence hundreds could not have darshan of this thirukkolam.  

                      அன்னக்கூட உத்சவத்தன்று  'கோவர்தனகிரி'  பிரபாவம்   நினைவு கூறப்படுகின்றது. ஸ்ரீபார்த்தசாரதி  பெருமாள் 'ஆயர் குலத்தில்' வந்து உதித்தவராக  கோல் (சாட்டை), தலைப்பாகை,  தண்டம், என அணிந்து மிக அழகாக சேவை சாதித்தார். "சீலை குதம்பை ஒரு காது, ஒரு காது செந்நிற மேல் தோன்றிப்பூ" என கண்ணன் கன்றுகள் மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்ந்ததை பெரியாழ்வார் அனுபவித்த வண்ணம், ஸ்ரீபார்த்தசாரதி தனது காதுகளில் 'ஓலை மற்றும் பூ' போன்ற திருவாபரணங்களை அணிந்து கொண்டு அழகான பட்டு உடுத்தி, கைகளில் வளைகள் அணிந்து சேவை சாதித்தது நம் போன்றோர்க்கு கிடைத்தற்கரியது.   மஹாபாரதத்து  நாயகன்  ஸ்ரீகண்ணபிரான்  வட மதுரையில் பிறந்து, திருவாயர்ப்பாடியில் சிறப்புற வளர்ந்த ஒவ்வொரு பருவத்தையும் பெரியாழ்வார் தமது பெரியாழ்வார் திருமொழியில் அழகாக உரைக்கின்றார்.  மாயக்கண்ணன் கற்றினம் பசு  மாட்டுக்கன்றுகளை மேய்த்து வருவதைக்கண்டு யசோதை மகிழும் பாசுரம் இங்கே : 

சீலைக் குதம்பை ஒருகாது ஒருகாது செந்நிறமேல்  தோன்றிப்பூ*

கோலப்பணைக் கச்சும்  கூறையுடையும் குளிர்முத்தின்  கோடாலமும்*

காலிப் பின்னே வருகின்ற கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர்*

ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானே  மற்றாருமில்லை. 

நங்கைமீர்காள்  அனைவரும் வாருங்கள்   ~   ஒரு காதிலே,  சீலைக்குதம்பை (காது துளையைப் பெருக்குவதற்காக இடும் ஓலை சீலை முதலியவற்றின் சுருள்) என  ஆபரணத்தையும், மற்றொரு காதிலே செங்காந்தள் பூவையும் (அணிந்துகொண்டு);  திருப்பரிவட்டத்தின் உடுப்பையும், அது நழுவாமைக்குச் சாத்தின அழகிய பெரிய கச்சுப்பட்டையையும், குளிர் முத்தாலே தொடுக்கப்பெற்று பிறைபோல் வளைந்திருக்கின்ற ஹாரத்தையும் - உடைகளாய் அணிவித்துக்கொண்டு, கன்றுகளின் பின்னே வருகின்ற கடல் போன்ற நிறத்தனான கண்ணனுடைய  வேஷத்தை வந்து பாருங்கள்;   இந்த பூமண்டலத்திலே பிள்ளையை பெற்றவர்களுள், நானே நல்ல பிள்ளை பெற்றவள்’ என்று சொல்லத்தக்கவள் !  வேறொருத்தியுமில்லை என யசோதை மகிழ்ந்தாளாம்.            



Yasodha is so proud that she calls out to other women asking them to come and see that beautiful Krishna, with  the tucks of his turban covering one ear and a bunch of red glory-lily flowers stuck over the other, wearing a beautiful vesture and a waist cloth over it, hanging a crescent of cool pearls on his chest, the ocean-hued Lord returns with the calves.  She proclaims that none else could have given birth to such a glorious child and so she is very very fortunate ! 

Understand that in Northern part, hundreds of sweet dishes are offered to Lord Krishna on this day.  Here are some photos of Annakoot celebrations at various places like Govardhan, Vrindavan (Sri Ranganji mandir), Ahmedabad collated from various sources.  In various parts, people pray to Lord Govardhan for protecting us from hardships of life. On this day people also bathe  bulls and cow and decorate them with garlands and saffron.  The ones that were dear to Lord Krishna as he grew up are reverred. The preparation of 'Annakoot' is an integral part of the Govardhan Puja.  It is  ‘mountain of food’. Therefore on the auspicious day of Govardhan Puja, devotees offer 56 or 108  varied preparations of food / fruits / sweets as  ‘Bhog’ to Lord Krishna. The idols of Lord Krishna are bathed in milk and adorned with beautiful and dazzling clothes and jewelry.   

Sri Parthasarathi perumal photos are from 2019 Annakoota uthsavam at Thiruvallikkeni. 

 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
15.11.2020 








2 comments:

  1. 🙏🙏 எல்லாமே கோயில் தளிகை தானா?
    அடியேனுக்கு கோவர்த்தன கிரிதாரி போட்டோ WA இல் வந்தது.
    மலையை கூம்புப்பகுதி விரலில் இருப்பதுபோல் திருப்பிப் பிடித்தார் என்றும் படித்திருக்கிறேன். ஆனால் பெரும்பாலான படங்கள் நேராகவே மலையை சித்தரிக்கின்றன.

    ReplyDelete
  2. Sir .. a couple of photos especially those showing annam are from Vrindavan Ranganji mandir. others are from some other temple (one from a temple in Ahmedabad) and as you would know 'desacharam' might differ. Govardhana giri as in Thiruvallikkeni and couple of other places i have had darshan depict the straight hill (may not resemble our umbrella) but the broader portion being lifted and kept on the little finger of Lord Krishna. These are prabhavams and can be different at places. adiyen dhasan

    ReplyDelete