Today 31.1.2023 is Thai
Rohini – at Thiruvallikkeni Sri Parthasarathi Emperuman had siriya mada veethi
purappadu.
இன்று 31.1.2023 தை ரோஹிணி - ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் சிறிய மாட வீதி புறப்பாடு கண்டருளினார். நம் திருவல்லிக்கேணி எம்பெருமான் பாரதப்போர் தனிலே பார்த்தனுக்கு சாரதியாய் அம்பு பட்ட காயங்களுடன் சேவை சாதிப்பவர் . .. .. அடியார் படு துயரங்களை சகிக்காமல் காத்து அருளும் சர்வ ரக்ஷகன்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் சிறப்பு காதையே ஸ்ரீமத் பாகவதம். வடமொழியில் வியாசர் எழுதிய பாகவதம் 36,000 சுலோகங்களில் எழுதப்பட்டுள்ளது. ஸ்ரீவேதவ்யாஸர் ஸ்ரீமத்பாகவதத்தை ஸ்ரீசுகர் முனிவருக்கு அருளினார். எப்போதெல்லாம் அசுர இயல்பு கொண்டவர்கள் ஆட்சியாளர்களாக இந்நிலவுலகை ஆக்கிரமித்து மக்களைத் துன்புறுத்துகிறார்களோ, அப்போதெல்லாம் பகவான் ஸ்ரீமன் நாராயணன் அவதாரம்செய்து அவர்களை அழிக்கறார். ஒவ்வொரு அவதாரத்தின் மாண்பும், தீயோரை அழிப்பதைக்காட்டிலும் நல்லோரைக் காப்பதேயாகும்.
எம்பெருமானின் புகழ் பாடுதலே, நாம சங்கீர்த்தனங்களே அகத்து மாசைக் கழுவும் நன்னீராம். இரு காது மடல்களிலிட்டு ஆசைதீரப் பருகினால், அவை ஜீவன்களின் உலக வாசனைகளை அழித்துவிடும். அத்தகைய பகவான் தேவகியின் திருவயிற்றில் தோன்றினார். பிறந்தது வடமதுரைச் சிறையில். வளர்ந்தது நந்தகோகுலத்தில், இடைச் சேரியில். தனது ஒவ்வொரு பருவத்திலும், தனது பிறவியின் மாண்பை விஸ்வரூபங்கள், லீலைகள் வாயிலாக காண்பித்தார். சிலரே புரிந்து கொண்டனர் !! தானும் கன்றுகள் மேய்த்தார். வடமதுரை திரும்பினார். தீயோர் அனைவரையும் அழித்தார். கடலின் நடுவே துவாரகை என்னும் நகரம் அமைத்து அங்கு குடியேறினார். கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே நடந்த மகா பெரிய பாரத போரில், தர்மத்தின் பக்கல் நின்று கௌரவர்களின் தீயொழுக்கத்தால் பூமிக்கு பாரமாக இருந்த அனைவரையும் கொன்றார். தனது சாதுர்ய வழிகாட்டலில் பல அக்ஷௌஹிணி சேனைகளின் உயிரை மாய்த்தார். அர்ஜுனன் வென்றான், தர்மம் வென்றது .. ..
கண்ணனின் புகழ் பாடும் பாசுரங்கள், பாடல்கள் பல்லாயிரம். இதோ இங்கே புரந்தர தாசர் கீர்த்தனை ஒன்று :
தூகிரே ரங்கன தூகிரே கிருஷ்ணன
தூகிரே அச்சுதானந்தன (தூகிரே)
ரங்கனை, கிருஷ்ணனை, அச்சுதனை, அனந்தனை தாலாட்டுங்கள் !!
தூகிரே வரகிரியப்பா திம்மப்பன
தூகிரே காவேரி ரங்கய்யன (தூகிரே)
திருப்பதியில் இருக்கும் பாலாஜியை, காவேரிக்கரையில் இருக்கும் ரங்கனை
தாலாட்டுங்கள் (தூகிரே)
Purandhara dasa, a follower of Madhwacharya lived in 15th century
and composed many keerthanas, widely referred as Pitamaha of Carnatic music in
Kannada and considered incarnation of Saint Naradha.
Born as Srinivasa nayaka, he was a wealthy merchant of gold,
silver and jewellery but gave away all his material riches to become a
Haridasa, a devotional singer who made the difficult Sanskrit tenets of
Bhagavata Purana available to everyone in simple and melodious
songs. He formulated the basic lessons of teaching Carnatic music
by structuring graded exercises known as Svaravalis and Alankaras, he
introduced the raga Mayamalavagowla as the first scale to be learnt by
beginners in the field – a practice that is still followed today.
Purandara Dasa is noted for composing Dasa Sahithya. Here is
keerthana sung by - Krishna Kashyap Murthy https://www.youtube.com/watch?v=_Bp-tWlm9GE
Here are some photos of today’s purappadu at Thiruvallikkeni divyadesam.
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
31.1.2023
No comments:
Post a Comment