To search this blog

Wednesday, January 25, 2023

Sri Parthasarathi Ekkadu Uthsavam 2023

திருவல்லிக்கேணி திவ்ய தேசத்தில் நடக்கும் ஒரு சிறப்பு உத்சவம் "ஈக்காட்டுத்தாங்கல் திருவூறல் உத்சவம்".  அடையாறு ஆற்றங்கரையில் கிண்டி அருகே உள்ள ஈக்காடு தொழிற்பேட்டைக்கு  ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் பிரதி வருடமும் ஒரு நாள் எழுந்து அருள்கிறார்.

 


 இன்று ஈக்காடு தாங்கல் உத்சவம்  25.1.2023 நள்ளிரவு; அதாவது 26.1.2023 (இந்திய குடியரசு தினம்) அதிகாலை 1.30 மணியளவில் திருவல்லிக்கேணி திருக்கோவிலில்   இருந்து கிளம்பி - தவன உத்சவ பங்களா, வெங்கடரங்கம் தெரு விஜய் அவென்யு, ராதாகிருஷ்ணன் சாலை, திருமயிலை மாதவப்பெருமாள் திருக்கோவில், திருமயிலை கேசவப்பெருமாள் திருக்கோவில், ஆழ்வார்பேட்டை, தி. நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை என பல பகுதிகள் வழியாக ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் எழுந்தருளி, சுமார் 11 மணியளவில் ஈக்காடு மண்டபம் வந்தருளி திருமஞ்சனம் கண்டருள்வார். 


இவ்வழியில் உறைபவராயின்,  வழி மீது விழி வைத்து காத்து இருங்கள் - எம்பெருமானை தர்சிக்கலாம் 

adieyn Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
25.1.2023  

PS :  the timing and route are approx – for exact timing and correct route, only Temple Authorities know them well.  This purappadu covering a long distance, criss-crossing many areas will be taxing for all kainkaryabarars especially Sripatham thangigal .. .. yet, everyone feels happy in being part of this ! 

The first photo at Thirukovil entrance – taken a decade ago in 2012
Second thirumbukal at Besant road – taken in 2020. 

No comments:

Post a Comment