ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் பெண்பிள்ளையாய், நந்தவனத்தில், துளசி மலரில் பூமிப்பிராட்டி அம்சமாய் தோன்றிய கோதைப் பிராட்டியின் பக்தி அளவிட முடியாதது. ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த பிரபந்தங்கள் 'திருப்பாவை; நாச்சியார் திருமொழி". தன் இளமை தொடங்கியே 'மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்' என உறுதி பூண்ட பிராட்டியின் பக்தி திருப்பாவை, நாச்சியார் திருமொழி நூல்களாக வடிவெடுத்தது. ஆண்டாள் பாடல்கள் அனைத்திலும் ஒருமித்த கருத்து ஸ்ரீகண்ணனிடம் பக்தியே. அவரது வார்த்தைகள் இலக்கண நயமும், பக்தி மனமும் கொண்டன. திருப்பாவை முப்பது பாடல்களும் ‘சங்கத் தமிழ்மாலை’ என்று போற்றப்படுகின்றன.
Today 15.1.2023 is Pongal celebrations - at Thiruvallikkeni following Bhogi Thirukalyanam of divine couples Sri Parthasarathi Emperuman and Andal today is Sankranthi Urgola uthsavam.
Today’s purappadu of newly wed Divya Thampathis - Sri Andal and Sri Parthasarathi grandly occurs in a special open palanquin [one that had no roof known as kooralam]. Sri Parthasarathi, embellished with many dazzling ornaments adorning the Crown [Sigathadai]; Sri Andal in a beautiful sitting posture sitting opposite to Him in the same pallakku.
“சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என்று போற்றப்படும் ஆண்டாள், கண்ணன் மேல் ஆராக் காதல் கொண்டு, எம்பெருமானையே மணம் செய்ய நோன்பிருந்து, தான் கண்ட கனவை விவரித்துத் தன் தோழிக்குக் கூறும் தூய தமிழ்மாலை “வாரணம் ஆயிரம்”. திருமணக் கோலாகலம் ஆண்டாள் நாச்சியாரின் ஆசை எண்ணங்களில், ஆயிரம் யானைகள் சூழ ஸ்ரீமன் நாரணன் எழுந்து அருள்கின்றான். மங்கல வாத்தியங்களான மத்தளங்கள் கொட்டுகின்றன; வரிசங்குகள் (சங்குகளில் ஒரு வகை - வரிகள் உள்ளவை) முழங்குகின்றன; முத்துக்கள் உடைய மாலைகள் வரிசை வரிசையாய் நீளமாய்த் தொங்குமாறு கட்டப்பட்ட பந்தலின் கீழ், நம்பி மதுசூதனன் வந்து தன் கரம் (கைத்தலம்) பற்றுவதாய் ஆண்டாள் கனா !!
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத*
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்*
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து*என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ! நான்.
அகில
லோக நாயகியான ஆண்டாள் நாச்சியாரின் திருக்கரங்கள் புவனத்துக்கு நல்வழி காட்டும். இதோ
இங்கே ஆண்டாளின் வளையல்கள் அணிந்த திருக்கரங்களின் கீழே -
கோவில் கோபுரமே பணிந்து அருளை பெறுகின்றது .. .. நம்மையும், நம் தேசத்தையும், இந்த
புவனத்தையும் - கோதை பிராட்டி இந்நன்னாளில்
ஆசீர்வதித்து அனுக்கிரஹம் செய்வார் என்பது திண்ணம்.
ஸ்ரீ
ஆண்டாள் திருவடிகளே சரணம் **
ஸ்ரீமன்
நாராயணனே சரணம் **
~ அடியேன் ஸ்ரீனிவாச தாசன் (ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்)
Srinivasan Sampathkumar
15.1.2023
🙏🙏🙏🙏🙏🙏🙏
ReplyDelete