இன்று 14.1.2023 போகி திருநாள் .. .. நாளை 15.1.2023 பொங்கல் திருநாள்.
“ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ” என ஒரு பழமொழி உண்டு !! நீங்கள் சினிமா பாடல்கள் நன்கு அறிந்தவர் எனின் இந்த பாடல் கேட்டு இருப்பீர்கள் !
ஆவாரம் பூவு ஆறேழு நாளா !!
நீ போகும் பாதையில் காத்திருக்கு.. .. என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
இது இசைஞானி பாடல் அல்ல ! திரு வி. எஸ். நரசிம்மன் இசையமையத்தது. ராஜேஷ், சரிதா நடித்த, கே. பாலச்சந்தர் இயக்கிய - அச்சமில்லை அச்சமில்லை என்ற படம். இந்த ஆவாரம் பூவை பார்த்து உள்ளீர்களா ? ஐகார ஈறு என்றால் என்ன தெரியுமா ??
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஆழ்ந்த நம்பிக்கை. தை மாதம் முதல் நாளைப் பொங்கல் பண்டிகையாகவும், அறுவடைத் திருநாளாகவும் காலங்காலமாக கொண்டாடி வருகிறோம். தை முதல் நாளில் புதுப்பானையை அலங்கரித்து, இஞ்சி, மஞ்சள் கொத்து வைத்து கட்டி புத்தரிசியில், பாலில் வெல்லம் சேர்த்து சக்கரை பொங்கல் செய்து கொண்டாடுவர். பொங்கல் வைத்து சூரிய கடவுளுக்கு நன்றி கூறும் நாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பூக்கள் அழகானவை; பல மலர்கள் நறுமணம் கொண்டவையும் கூட. மழைக்காடுகள் முதல் பாலைவனங்கள் வரை, பூக்கள் பூமியை பூமி பல்வேறு வண்ணங்களால் அலங்கரிக்கின்றன. வெள்ளை, சிவப்பு, கருநீலம், ஊதா, மஞ்சள், வயலட் என பல வண்ணங்களில் பூக்களை காணலாம்.
எம்பெருமானுக்கு எப்போதும் சற்றும் மலர்களில் முக்கியமானவை - தாமரை, அல்லி, தாழம்பூ, மல்லிகை, தவனம், முல்லை, ரோஜா, சம்பங்கி, சாமந்தி இன்ன பிற. மஞ்சள் வண்ண பூ என்றால் நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது : சாமந்தி பூ; மஞ்சள் நிற அழகு ரோஜாக்களும் உண்டு. இவை தவிர பல மேல்நாட்டு மலர்கள் மஞ்சள் நிறத்தில் உண்டு - இவற்றில் பல மணம் இவை. டான்டேலியா எனும் வகை பூக்கள் பூத்து குலுங்கும். சூரியகாந்தி மலர்கள் எண்ணெய்க்காக வளர்க்கப்பட்டாலும், அந்த வயல்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும். ஆஸ்ட்ரோவ் குடும்பத்தின் அன்பான பிரதிநிதி.இது பழுக்காத பூவின் தலையை எப்போதும் சூரியனை நோக்கித் திருப்புவது ஹீலியோசென்ட்ரிஸ்ம் !!
தொல்காப்பியம்
தமிழ் இலக்கண நூல். தொல்காப்பியர் இயற்றிய
இந்நூல் தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான
நூல். தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்று மூன்று அதிகாரங்களைக் கொண்டது. உயிர்மயங்கியல். என்ற இயலில்
93 நூற்பாக்கள் இடம்பெற்றுள்ளன.
ஐகார
ஈறு என்பது :
ஐ இறுதி
வேற்றுமையில் வல்லெழுத்து மிகும் ! .. ..
..
பனை, அரை, ஆவிரை மரப்பெயர்கள் அம்-சாரியை பெற்று வரும். பனை சொல்லில் ஐ கெடும் - பனங்காய், அரையங்கோடு, ஆவிரங்கோடு.
Senna auriculata is a leguminous tree in the subfamily Caesalpinioideae. It is commonly known by its local names matura tea tree, avaram or the English version avaram senna. It is the State flower of Telangana.
ஆவாரை : ஆவிரை அல்லது மேகாரி என்பது ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும். இது சங்க கால மலராகும். ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான். இதனை குளியல் பொடியுடன் சேர்த்து பயன்படுத்தலாம். அல்லது ஆவாரம் பூ தேநீர் குடித்தாலும் இரத்தம் சுத்தமாகி மேனி தங்க நிறம் பெரும்.
ஆவிரை
என்பது இக்காலத்தில் ஆவாரம்பூ என வழங்கப்படுகிறது. தைப்பொங்கல் கொண்டாட்டத்தின்போது
காப்புக் கட்டுவதற்கும், மாட்டுப்பொங்கலன்று மாடுகளுக்கு மாலை கட்டுவதற்கும், வீடுகளுக்குத்
தோரணம் கட்டுவதற்கும் ஆவாரம்பூவை கிராமங்களில் பயன்படுத்துகின்றனர்.
Here is
a photo of Sri Parthasarathi Emperuman adorned with yellow marigold flowers
alongside many other flowers and photo of Aavaram poo and another which I
understand are being tied to Pongal panai along with Ginger, turmeric.
Wishing you all a very Happy Pongal 2023
With regards – S. Sampathkumar
14.1.2023
Very nice description 🙏🙏🙏
ReplyDeleteஉங்கள் விஷய ஞானத்துக்கு பாராட்டுக்கள். எழுத்து வடிவம் மற்றும் சொற்சொடர் அருமை. 🙏🏾
ReplyDelete