To search this blog

Saturday, June 19, 2021

Aani Hastham 2021 - Sri Varadha Rajar - பழுதாகாது ஒன்றறிந்தேன் பாற்கடலான் பாதம்

Today 19.6.2021 is Hastham in the Tamil month of ‘Aani’ – in normal times, there would have been siriya mada veethi  purappadu of Sri Varadharajar.



சிறுவயதில் கேட்டது ! :  அதிகாலை எழுந்தவுடன் - 'ஹரி, ஹரி, ஹரி' என ஸ்ரீமன் நாராயணனை நாமஸ்மரணம் பண்ணி - இவ்வாறு நல்ல வாழ்வையும், வளங்களையும் அனுபவிக்க ஆயுளையும் கொடுத்ததற்கு நன்றி என மனமார தியானம் செய்ய வேண்டும் !  ..   மனிதன் ஒரு நாளை வாழ்வதற்கே இறையருள் வேண்டுமா !  - நோயற்ற, சிறந்த வாழ்வு வாழ்வதற்கு உபாயம் தான் யாது என கேள்வி எழுந்தது ! ‘

முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் இருந்து மற்றோரு ஊருக்கு, நடைப்பயணமாகவோ அல்லது மாடு, குதிரை வண்டிகளில் மட்டுமே பயணம் மேற்கொள்ள முடியும்.  பேருந்து, இரயில், கப்பல், விமானம் என இப்போது வசதிகள் மனிதனை மாற்றிவிட்டன.  அவ்வாறாக - வேற்றூர்க்குப் நடை பயணமாக நடந்து கொண்டிருக்கிறான் ஒருவன். வழியிலே பாழ் மண்டபம். சில  தூண்கள் விழுந்தும் உடைந்தும், மண்டபத்திலே கருங்கற்கள் சில சிதைந்தும், சிதறியும் ஆபத்தான கட்டத்தில்  கிடந்தன.  இப்படியான மண்டபத்தை கண்டால் எவருக்கும் மனக்கிலேசம் வருமல்லவா!   வழிப்போக்கன், 'இதன் உள்ளே நுழைந்து சென்றால் நம்முயிர்க்கு ஆபத்து; மண்டபத்தின் கருங்கற்கள் நம் தலைமீது விழுந்துவிடும்' என சிந்தித்து மண்டபத்தைச் சுற்றி  இருந்த ஒற்றையடிப் பாதையிலே  நடந்து  செல்ல முடிவெடுத்தான்.   "அபாயம் வரும் என்று நம்பி  உபாயம் தேடின  - அவன் மாற்றுப்பாதையில் சிறப்பாக சென்றிருக்கலாம்; அல்லது அவனது நேரம் சரியில்லை எனில், அப்பாதையில் முட்கள், தேள், பாம்பு போன்ற மற்றைய விலங்குகளால் அபாயத்தை சந்தித்து இருக்கலாம்.   எம்பெருமான் துணையுடன் இருப்பவன், அம்மண்டபத்திலேயே சற்று இளைப்பாறி, தனது பயணத்தை நல்லபடி தொடர்ந்து இருக்கலாம்.



எல்லாம் இறை அருள் - நல்ல உபாயம் இறைவனது தாள்களை பற்றுவது; அவனுக்கும், அவரது அடியார்க்கும் உகக்கும்படி கைங்கர்யங்கள் செய்வது.  திருக்குறளில், "தெரிந்து செயல்வகை' என்னும் அதிகாரம் - பொருளதிகாரம் 47ஆவது வைப்பு முறையில் உள்ளது. அரசன் தான் செய்யும் செயல்களை ஆராய்ந்து செய்யும் திறம்.

"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு'' (குறள் - 467)

செய்யத்தக்க செயலை முடிக்கும் உபாயத்தை எண்ணித் தொடங்குக; தொடங்கிய பின் எண்ணக்கடவோம் என்று ஒழிதல் குற்றம்  என்பது மேற்சுட்டிய திருக்குறளின் பொருள்.  "உபாயம் என்பது அவாய் நிலையால் வந்தது. அது கொடுத்தல், இன்சொற் சொல்லல், வேறுபடுத்தல், ஒறுத்தல் ஆகிய நான்கு வகைப்படும். இவற்றை வட நூலார் சாமம் (இன்சொல் கூறல்), பேதம் (வேறுபடுத்தல்), தானம் (கொடுத்தல்), தண்டம் (ஒறுத்தல்) என்பர். அவற்றுள் முன்னைய இரண்டும் ஐவகைய; ஏனைய மூவகைய; அவ்வகைகள் எல்லாம் ஈண்டு உரைப்பிற் பெருகும்'' என்பது பரிமேலழகர் உரை.

ஸ்ரீவைட்டணவர்களுக்கு எது சரியான உபாயம் என இங்கே எடுத்துரைக்கின்றார் நம் திருமழிசை ஆழ்வார் தனது நான்முகன் திருவந்தாதியில் :

பழுதாகாது  ஒன்றறிந்தேன் பாற்கடலான் பாதம்,

வழுவா வகைநினைந்து வைகல் - தொழுவாரை,

கண்டிறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து

விண்திறந்து வீற்றிருப்பார் மிக்கு, 

ஆழ்வார் இயம்புகிறார் :   எந்த வைகையிலும் பழுது இல்லாத ஒரு சிறந்த உபாயத்தை  தெரிந்து கொண்டேன்.  அது என்னவென்றால்  திருப்பாற்கடலிலே சயனித்து இருக்கும், க்ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை தவறாமல் அநுஸந்தித்து எப்போதும் வணங்குமவர்களை கண்டு வணங்கி வாழ்பவர்கள் மிக சிறந்த பாகவத பக்தர்கள்.  ஆத்மாவோடு சேர்ந்த தீவினைகளைத் தொலைத்து பரமபதவாசலைத் திறந்து சிறப்புடனே எழுந்தருளியிருக்கப்பெறுவர்.  எம்பெருமானது திருவடிகளை ஆராதிக்க வேண்டும்; அவனது தாமரை பாதங்களை வணங்கி பூஜிக்கும் பாகவத உத்தமர்களை வணங்கி அவர்களுக்கு ஹேதுவாக கைங்கர்யங்கள் செய்தலே நலம். 

Here are some photos of Sri Varadharajar hamsa vahana purappadu at Thiruvallikkeni on 30/5/2015.  As it was balalayam awaiting samprokshanam for the Eastern gopuram and many sannathies including Sri Parthasarathi Perumal, Varadhar had vahana purappadu from the Western gate.

 

Adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
19.6.2021









  

1 comment: