Today 4.12.2024 [Karthigai 19] is significant to Srivaishnavas as today starts
the uthsavam of Thirumangai Mannan – culminating on Friday, 13th Dec
2024 – the sarrumurai day of Kaliyan. Kaliyan was born in Thiru
Kuraiyulur, 2 km from Thiruvali-ThiruNagari near Sirkazhi. At the time of
his marriage with Kumudavalli from Annan Koil (another Divya Desam near
Sirkazhi) – one of the ‘wedding’ conditions was to feed 1008
Vaishnavites every day. By divine grace, Kaliyan turned Thirumangai
Azhwar, which gets enacted on day 8 Kuthirai vahana purappadu at
Thiruvallikkeni and as Vedupari uthsavam at Thirumanankollai. He was to
categorically direct us on the greatness of chanting Ashtaksharam of Sriman
Narayana.
நாராயணா
என்னும் நாமம் நல்ல சுற்றத்தைத் தரும். ஐசுவரியத்தைத் தரும். அடியவர்கள் படும் துயரங்களையெல்லாம்
தரைமட்டமாக்கி (நிலந்தரம்), பரமபதத்தைக் கொடுக்கும் (நீள்விசும்பு), அருளோடு கைங்கரியம்
என்னும் ஸ்தானத்தையும் கொடுக்கும், வலிமை கொடுக்கும், மற்றெல்லாம் தரும். பெற்ற தாயை
விட அதிகமான பரிவைத் தரும். நல்லதே தரும் சொல் ‘நாராயணா என்னும் நாமம்’.
கலியன்
என்றால் அவரது குதிரை 'ஆடல்மா' மற்றும் அவரது சிஷ்யர்கள் நினைவுக்கு வரக்கூடும். குதிரை சங்க இலக்கியங்களிலும், மன்னர் காலத்திலும், புராணங்களிலும்
சிறப்பாக கருதப்பட்டு உள்ளது. குதிரை, புரவி தவிர ~ மா, பரி, மான், இவுளி,
கலிமா - இதனது வேறு பெயர்கள். திருமங்கையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி
பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர். சோழ
நாட்டில் உள்ள திருவாலி-திருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குறையலூரில்
பிறந்தவர் 'கலியன்'. சீர்காழியில் இருந்து 13 கி.மீ. தொலைவிலும் திருவெண்காட்டில் இருந்து 6 கி.மீ. தொலைவிலும் உள்ளது திருக்குறையலூர். ஆதியில் இவர் சோழமன்னனுக்கு
படைத்தலைவனாக இருந்தார். ஒருமுறை போர்க்களத்தில் இவருடைய வீரத்தைக் கண்ட அரசன் இவருக்கு
சோழதேசத்தின் "திருமங்கை" நாட்டின் குறுநில மன்னனாக்கினான். அன்று முதல்
இவர் "திருமங்கை மன்னன்" என அழைக்கப்பட்டார். கலியன் அவதரித்த கார்த்திகை மாதம்; கார்த்திகை நன்னாள்.
Thirumangai Azhwar was a vivid versatile personality – a great poet, efficient in horse riding and warfare, exceptional faith on his Lord, travelled very widely the length and breadth of the country and did most mangalasasanam of divyadesangal. Kaliyan has many names - Arulmari, Kaliyan, Parakalan, Arattamukki, Adayarseelam, and Thirumangai Mannan. He was passionate about anything he pursued, be that bewitching damsel Kumudavalli nachiyar, feeding Srivaishnavaites or building temples.
ஸ்ரீ நாலாயிர திவ்யப்ரபந்தத்தில், கலியனது பங்கு அதீதம். பெரிய
திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, பெரிய
திருமடல், சிறிய திருமடல் என 1137 பாசுரங்கள் நமக்கு அளித்துள்ளார். சிறிய திருமடல், பெரிய திருமடல்
எனும் இரண்டு படைப்புகளிலும் தன்னைத் தலைவியாக 'பரகால நாயகியாய்' உருவகித்த நிலையில்
அவர் பாடல்களைப் புனைந்துள்ளார்.
Sure, you would recall ‘Kaliyan Vaibavam enactment’ during Kuthirai vahanam – day 8 of Brahmothsavam at Thiruvallikkeni – whence Emperuman holds the reins of the golden horse; Azhwar Kaliyan comes chasing on his ‘adalma’. At that time, he was a local chieftain’ feeding thousands of Sri Vaishnavaites everyday. He had vowed to feed thousands of persons each day and also needed money to build temples. Thirumangai mannan’s disciples were - Neermel nadappan, Nizhalil odhunguvan, Thaloodhuvan, Tholavazhakkan. Not finding enough resources he and his disciples had to resort to robbery and Sriman Narayanan in his various Leelas chose to play with him, by getting robbed, making him realize his folly and turning him to his trusted devotee. Neelan understanding the significance became Thirumangai Azhwaar and rendered Periya Thirumozhi; in Naalayira Divyaprabandham. Ordained to listen to the Ashtakshra mantra, becomes Thirumangai Azhwar. In the photo of Azhwar on the small horse, one can see him armed with sword and shield.
திருமங்கை மன்னனின் சாற்றுமுறை வைபவம் கார்த்திகையில் கார்த்திகை
நாள். இந்த வருடம் 13.12.2024 அன்று சிறப்பாக கொண்டாட உள்ளோம். திருக்கார்த்திகை Sunday,
15.12.2024 முடிந்து ஸ்ரீ கூரத்தாழ்வான் சாற்றுமுறைவரை
இல்லங்களில் திவ்யப்ரபந்தம் சேவிப்பது இல்லை என்று வழக்கம். இது
அநத்யயன காலம் எனப்படுகிறது. இதோ இங்கே திருமங்கை மன்னனின் அற்புத வரிகள் - திருக்குறுந்தாண்டகத்திலிருந்து
:
நிதியினைப் பவளத்தூணை
நெறிமையால் நினைய வல்லார்*,
கதியினைக் கஞ்சன்
மாளக் கண்டுமுன் அண்டமாளும்*,
மதியினை மாலை வாழ்த்தி
வணங்கியென் மனத்து வந்த*,
விதியினைக் கண்டு
கொண்ட தொண்டனேன் விடுகிலேனே!
எத்தகைய எம்பெருமான் நம் ஸ்ரீமன் நாராயணன். அவன் பெருமைகளை
உணர்ந்தவர்கள் எக்காலும் பிரியகில்லாதவர்கள் ஆவார்கள். மற்றெக்காலத்தும்
உதவ வல்ல நிதி ' வைத்தமாநிதியாம் மதுசூதன்“; என்றென்றும் துணையாய்
சார்பதற்காம் அணியான பவளத்தூண் நம் எம்பெருமான்; கஞ்சனாகிய கம்சனை வதம்
செய்து தம் மக்களை காத்தருளிய, வியாமோஹமுள்ள கருநிற கண்ணபிரானை மட்டுமே நினைத்து அவன்
திருவடி தாள்களையே வாழ்த்தி வணங்கி அந்த எம்பெருமானை ஸேவிக்கப்பெற்ற
தொண்டனேன், அவனை இனி ஒருநாளும் விடமாட்டேன்.
The most
fortunate me, have found my treasure, the one who can provide shelter like a
coral pillar, the Lord who is sole refuge of those who seek him through
worship. The one who destroyed Kamsa, the Lord who rules the Universe
from yore, the adorable one. He is the divinity who has entered
my heart, I worship him ever be conscious of the worthy life in attaining
Him and shall never leave Him.
In the divyaprabandham, he has a huge share with 6 prabandhams
to his credit : Thirumozhi (1084 verses),
Thirukkurunthandagam, Thirunedunthandagam, Thiruvezhukkoorrirukkai, Siriya
thirumadal and Periya thirumadal. Those
were written in different forms revealing his widest spectrum of poetic meters
and his command over the language. Aasu kavi, Vistara kavi, Madhura kavi
and Chithra kavi, he was, thus earning the title of Naalu kavi perumal, which
was recognized by Saivaite Nayanmar Sambandar, who appreciatedly gave his
spear (Vel) as a gift. At Thirunagari and many other divyadesams, one can
have darshan of Kaliyan holding this big spear. He would also be seen
alongside his consort Kumudavalli Naachiyar instrumental in
bringing him into the fold of devotion to the Lord and Bhagavatas.
He visited many places, did great kainkaryam and towards the end
did lot at Thiruvarangam divyadesam. While he was rebuilding the walls of
the Srirangam temple, as a mark of deference to Thondaradipodi
Azhwar, he replanned the mathil leaving out the revered spot where
Thondaradipodigal did pushpa kainkaryam. It was Kaliyan who
initiated the system of rendering Nammazhwar’s prabandhas before the Lord
at Srirangam and for this brought the archai idol of Swami Nammalvar from
Azhwar Thirunagari and take him back after the Utsava with all the temple
honours. The Adhyayanotsavam was developed to its present form of
Irappathu, Pagal pathu by Acharya Nadamuni with the rendering of Nalayira
divyaprabantham fully.
Sensing his final days, Alwar reached Thirukkurungudi, did
kainkayram to Vadivazhagiya Nambi and attained lotus feet of our Emperuman from
there. Among dense fields, his thiruvarasu now stands testimony that ‘the
abode of Lord – Vaikundam’ is calling distance from here.
"நம்மை உய்விக்கும் - நலம் தரும் சொல் - நாராயணா என்னும் நாமமே''
என அறுதியிட்டு உரைத்த திருமங்கை மன்னன் தாள்கள் பணிவோம்.
வாட்கலியன் பரகாலன்
மங்கையர்கோன் வாழியே .. .. ..
Here is a short video and some photos of Kaliyan purappadu from Thiruvali to Thirumanankollai in midnight of 25.3.2024 with hundreds of flame torches (தீவட்டி) – celebrated as Vedupari Uthsavam. : https://youtube.com/shorts/9oqCaxxObEU
அடியேன் ஸ்ரீனிவாச
தாசன் [மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்]
No comments:
Post a Comment