Sri Thelliya Singar Karthigai Swathi purappadu 2024 - நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் !!
ஞாலம் என்பதற்கு
உலகம் என பொருள். ஞாலுதல் என்பது தொங்குதல் என்றும் பொருள்தரும். உலகம்
எவ்வித பற்றுக்கோடும் இன்றி அண்ட வெளியில் தொங்கிக் கொண்டிருப்பதால் ஞாலம் (உலகம்)
எனப் பெயர் பெற்றது.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தான் செயின்
(அதிகாரம்:காலமறிதல் குறள் எண்:484)
செயலை முடிப்பதற்கு
ஏற்ற காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும்
கைகூடும். எக்காலத்தில் எவ்விடத்தில் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு ஒரு குறிக்கோளைத்
தொடங்கினால் அது எதுவானாலும் தவறாமல் நிறைவேறும். ஒரு செயலைச் செய்வதற்கேற்ற காலத்தை
எண்ணி செய்யும் இடத்தையும் அறிந்து செய்தால் இந்த உலகத்தையே அடைய வேண்டுமென்று விழைந்தாலும்
அதுவும் கைகூடும் - என்பது திருவள்ளுவர் வாய்மொழி.
Like the lapis lazuli gem
it resembles, the blue, cloud-enveloped planet the we recognize immediately
from satellite pictures seems remarkably stable. Continents and oceans,
encircled by an oxygen-rich atmosphere, support familiar life-forms. Yet this
constancy is an illusion produced by the human experience of time. Earth and
its atmosphere are continuously altered. Plate tectonics shift the continents,
raise mountains and move the ocean floor while processes not fully understood
alter the climate. Such constant change has characterized Earth since its
beginning some 4.5 billion years ago. From the outset, heat and gravity shaped
the evolution of the planet. These forces were gradually joined by the global
effects of the emergence of life. Exploring this past offers us the only
possibility of understanding the origin of life and, perhaps, its future.
In its most general
sense, the term "world" refers to the totality of entities, to the whole of
reality or to everything that is. The nature of the world has been
conceptualized differently in different fields. Some conceptions see the world
as unique while others talk of a "plurality of worlds". Some treat
the world as one simple object while others analyze the world as a complex made
up of many parts. In scientific cosmology the world or universe is commonly
defined as "the totality of all space and time; all that is, has been, and
will be". Theories of modality, on the other hand, talk of possible worlds
as complete and consistent ways how things could have been. Phenomenology,
starting from the horizon of co-given objects present in the periphery of every
experience, defines the world as the biggest horizon or the "horizon of
all horizons".
In various contexts, the
term "world" takes a more restricted meaning associated, for example,
with the Earth and all life on it, with humanity as a whole or with an
international or intercontinental scope. In this sense, world history refers to
the history of humanity as a whole or world politics is the discipline of
political science studying issues that transcend nations and continents. Other
examples include terms such as "world religion", "world
language", "world government", "world war",
"world population", "world economy" or "world
championship".
Swami Nammalwar feels
indebted and expresses his gratitude to all those – who fall at and uphold the
feet of those bagavathas who are indebted, surrendered to and holding the feet
of Sriman Narayana. Here is a pasuram from Thiruvaimozhi.
ஸ்வாமி நம்மாழ்வார்
- எம்பெருமானுடைய தோளும் தோள்மாலையுமான அழகிலே தோற்றவர்களான பாகவதர்களுக்கும்
பக்தராயுள்ளவர்கள் எனக்கு ஸ்வாமிகளென்கிறார். நாதன் என்பதற்கு யாசிக்கப்படுபவன் என்றும்
யாசிப்பவன் என்றும் ‘இருவகையாகவும் பொருள் கொள்ள வியாகரண சாஸ்த்ரம் இடந்தரும்.
தெள்ளியசிங்கர் கம்பீரம், அழகு, ஸ்வரூபலாவண்யமயமானவர்.
இதோ
இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின் அற்புத திருவாய்மொழி பாசுரம் :
நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்
போதனைப் பொன்னெடுஞ் சக்கரத்து எந்தை பிரான் தன்னைப்
பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர்
ஓதும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடையார்களே.
தலைவனும், பூமியும்
தெய்வ உலகமும் ஏத்துகிற வாசனை பொருந்திய திருத்துழாய் மலரைத் தரித்தவனும், அழகிய நீண்ட
சக்கரத்தையுடைய எந்தையும், எல்லார்க்கும் உபகாரகனுமான எம்பெருமானுடைய பாதங்களை வணங்குகின்ற
அடியார்களை வணங்குகின்ற அடியார்கள்தாம் சொல்லப்படுகின்ற பிறப்புகளில் எல்லாம் எம்மை
அடிமை கொண்டவர்கள் ஆவார்கள்,’ என்கிறார் - சடகோபன் இந்த பாசுரத்தில்.
Here are some photos of
Emperor of Universe Sri Azhagiyasingar taken during Karthigai Swathi purappadu
at Thiruvallikkeni on 29.11.2024
02.12.2024
No comments:
Post a Comment