To search this blog

Tuesday, December 24, 2024

Margazhi Hastham 2024 - " தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய!”

Today 24.12.2024 is day 9 of Margazhi masam -  இன்றைய பாசுரம் " தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய!”  



ஆயனரிடமும் சிவகாமியிடமும் விடை பெற்றுக் கொண்ட பிறகு மகேந்திர சக்கரவர்த்தியும் மாமல்லரும், குதிரைகளைத் திருப்பி அதிவேகமாய் விட்டுக்கொண்டு போய், அரண்மனையை அடைந்தார்கள். அவர்களைக் கண்டதும் அரண்மனை வாசலில் காவல்புரிந்து கொண்டிருந்த வீரர்கள், "வாழ்க! வாழ்க சக்கரவர்த்திப் பெருமான் வாழ்க! மாமல்ல மகா வீரர் வாழ்க!" என்று கோஷித்துக் கொண்டு அவர்களுக்கு வணங்கி வழிவிட்டு நின்றார்கள். காவலர்களுடைய வாழ்த்து ஒலியுடன் அங்கே வரிசை வரிசையாக நின்ற குதிரைகளின் கனைப்பு ஒலியும் சேர்ந்தது. அரண்மனை முன் வாசலைத் தாண்டி அவர்கள் உள்ளே நுழைந்ததும் அங்கேயிருந்த விசாலமான நிலா முற்றத்தில் வீரர்கள் பலர் அணி வகுத்து நிற்பது தெரிந்தது.

சிவகாமியின் சபதம்/பரஞ்சோதி யாத்திரை/நிலா முற்றம் – is rooftop terrace for enjoying moonlight.  

நிலாமுற்றம், .

1.   சந்திரசாலைநிலாமாடம்

2.   வீட்டின் மாடியில் நிலவொளியை ரசிப்பதற்காகக் கட்டப்படும் திறந்த மாடம்

முந்தைய காலங்களில்,  மாளிகை வீடுகளில், உப்பரிகை எனும்  இப்போதைய பால்கனி போன்ற அமைப்பை மாடம் என்பர். வீட்டு வாசலிலும், உள்ளேயும் சுவரில் ஒரு ஆழமான பிறையையும் மாடம் என்றே கூறுவர்.  அந்தி நேரத்தில் அந்த மாடத்தில் தான் விளக்கு ஏற்றி வைப்பார்கள். வீட்டினுள் சிறு சிறு அத்தியாவசிய பொருட்களை மாடங்கள் எனும் பிறைகளில் வைப்பார்கள். வீட்டு முற்றத்தில் அமைந்த துளசி செடி வைக்கும் மேடையான அமைப்பை துளசி மாடம் என்பர். கம்ப ராமாயணத்தில் கம்பர் ராமன் மிதிலையில் பிரவேசிக்கும் போது அதை சீதை கன்னிமாடத்தில் நின்று காண்பதை வர்ணித்துள்ளார்.  ஆண்டாள் சொல்லும் மாடம் வேறு !  இது தூமணி மாடம் -  அழிவில்லாத, ஞானத்தை உள்ளடக்கிய  அற்புதமான இடம்.

Sleep is a naturally recurring state of mind and body, characterized by altered consciousness, relatively inhibited sensory activity, reduced muscle activity and inhibition of nearly all voluntary muscles during rapid eye movement (REM) sleep, and reduced interactions with surroundings.  Sleep is an important part of your daily routine—you spend about one-third of your time doing it.  Quality sleep – and getting enough of it at the right times -- is as essential to survival as food and water.   Sleep is important to a number of brain functions, including how nerve cells (neurons) communicate with each other.  

Certainly not any post on sleep, its depravity and ill-effects but more on awakening; not exactly the spiritual awakening, physical one too .. .. getting up early and praying Emperuman Sriman Narayana with Thiruppavai pasurams, the month being special, Margazhi.

இது மார்கழி ! - "திருப்பாவை மாதம்".  கோதை என்றால் தமிழில் மாலை. வடமொழியில் வாக்கைக் கொடுப்பவள் என்று பொருள். ஆண்டாள் பாடல்கள் அனைத்திலும் ஒருமித்த கருத்தான கண்ணனை மணப்பதையே எண்ணிக்கொண்டிருப்பதற்கு சிகரம் வைத்ததுபோன்றது திருப்பாவை. ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல்களும் ‘சங்கத் தமிழ்மாலை’ என்று போற்றப்படுகின்றன.  திருப்பாவை மிகக் கடினமான ‘இயற்றர விணை கொச்சகக் கலிப்பா’ வகையைச் சேர்ந்தது.  ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை - பாவை நோன்பின் அற்புத சிறப்பை விளக்குவது.  கோதைப்பிராட்டி, வீடு வீடாக சென்று அதிகாலையில் தன் தோழியினரை எழுப்புகின்றார்.   இன்றைய பாசுரம் " தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய!”   ஆண்டாள் பாடியது 'தூமணி மாடம்' - ஸ்வாமி நம்மாழ்வார் பாடியது 'துவளில்  மாமணி மாடமோங்கு '  துவள் என்றால் குற்றம், தோஷம் என்று பொருள் கொள்ளலாம்.  துவள் +இல் என்றால் குற்றமற்ற, தோஷமற்ற !!

 

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய

தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்

மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்

மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்

ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?

ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

 

தூய்மையான மணிகள் உள்ளிட்ட அலங்கார பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட மாடங்களைக் கொண்ட அழகிய மாளிகை விளக்குகளால் பிரகாசமாக்கப்பட்டுள்ளது. அழகிய மணம்  வீசும் விலை உயர்ந்த பஞ்சு மெத்தையில் உறக்கிக் கொண்டிருக்கும் பெரிய செல்வந்தரின் மகளே, உன்னுடைய வீட்டின் கதவை வந்து திற. செல்வந்தரின் மனைவியே உங்களின் மகளை எழுப்பி விடுங்கள். நாங்கள்  இறைவனின் திருநாமங்களை பாடிக் கொண்டிருக்கிறோம் இதை கேட்டும் ஏதும் சொல்லாமல் இருக்கிறாளே அவளால் வாய் பேச முடியாதா? அல்லது இறைவனின் துதிகளை பாடுவதை  அவளின் காதுகள் கேட்காதா? ஏதோ மந்திரத்துக்கு ஆட்பட்டவள்  போல் இப்படி தூங்கிக் கொண்டிருக்கிறாளே? ஏமம்  என்பதற்கு -  இரா, இன்பம், உன்மத்தம், கலக்கம், களிப்பு, காவல், சேமம், திரைச்சீலை, புதையல், பொன், மயக்கம், விபூதி, என பற்பல பொருட்கள் உண்டு.  மாயங்கள் பல செய்பவன், மாதவன், வைகுந்தன் என இறைவனின் பலவிதமான நாமங்களை சொல்லி பக்தி செய்ய வேண்டும். சீக்கிரம் எழுந்து வா பெண்ணே. 

Bowing Kothai Piratti Andal – today being Hastham – here are some photos of Sri Varadha Rajar – Purattasi Hastha purappadu on 3.10.2024.   

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
24th  Dec 2024.

  









No comments:

Post a Comment