To search this blog

Sunday, December 29, 2024

Manniyaseer Margazhi Kettai ~ Thondaradipodi Azhwar Sarrumurai 2024

 

Thondaradipodi Alwar Sarrumurai 2024  :

தொண்டரடிப்பொடி ஆழ்வார் சாற்றுமுறை

 

The shares of Thiru Arooran Sugars Ltd  are  not traded at all now –the stock price had been volatile a decade ago, but as the Company accumulated huge losses – the shares are not now on song 

 


ஒருவில்லால் ஓங்கு முந்நீர் அனைத்துலகங்களுய்ய*

செருவிலேயரக்கர் கோனைச்செற்ற நம் சேவகனார்*

மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கமென்னா*

கருவிலே திருவிலாதீர் காலத்தைக் கழிக் கின்றீரே.


Very powerful message from this Alwar.  What should one do in this World without whiling away time ~ other than chanting the names of Sriman Narayana, the only Saviour who is worshipped in the famed Thiruvarangam Periyakoil. It is He (in Ramavathar) parted the Ocean with a single bow and relieved the World of its trouble by killing the Rakshas chief in the battle.  Just chant His names all the time. 

 


~ and today  29th Dec 2024   is the right day to know something about this Alwar who was born in Chozhanadu at a place called Mandangudi. 

மண்டங்குடி என்பர் மாமறையோர் மன்னியசீர்

தொண்டரடிப்பொடி தொன்னகரம் - வண்டு

திணர்த்தவயல் தென்னரங்கத்தம்மானைப் பள்ளி

உணர்த்தும் பிரான்  உதித்த ஊர்.   

~ the introductory lines to his prabandham Thirumalai by  Thiruvaranga Perumal Araiyar.  ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் ஸ்வாமி அருளிச் செய்த தனியன்:  

 

தமிழ் ஒரு இனிய மொழி.  நம் ழ்வார்களோ  அந்த அமிழ்தில் திளைத்தவர்கள்.  இங்கே வண்டு  திணர்த்த வயல் என்றதும் வண்டுகள் நிறைந்து இருக்கும் கழனிகள் என போறும் சூழற்க்க ;  திணர்த்தல் என்றால் -  நெருக்கமாதல் ; கனமாகப் படிந்திருத்தல்.  இதன்படியே - வண்டல் மண் கனமாகப் படிந்து அதிலே  வளமான பயிர்கள் விளையும் வயல்கள் சூழ்ந்த திருவரங்கத்தில் எழுந்தருளி இருக்கும் அரங்கநாதப் பெருமானை துயிலெழுப்பப் பாடல்கள் அருளவே (ஒரு சூரியன் போல) ஒளியோடு தோன்றிய, நிலைபெற்ற பெருமை வாய்ந்த, தொண்டரடிப்பொடியாழ்வார் அவதரித்த பழமையான தலம் திருமண்டங்குடி என்று நான்மறையாளர்கள் பகர்வர்.

இன்று மன்னிய சீர் மார்கழியில் கேட்டை திருநக்ஷத்திரம்.   சோழநாட்டில் திருமண்டங்குடி என்ற சிற்றூரில் பராபவ வருடம், மார்கழி மாதம், கேட்டை நட்சத்திரத்தில்  பெருமானின் வைஜயந்தி வனமாலையின் அம்சமாகக் கருதப்படும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்த தினம்,   ஆழ்வார் சாற்றுமுறை இன்று :   முதல் ஆயிரத்தில் திருமாலை 45 பாசுரங்களும் திருப்பள்ளியெழுச்சி 11-ம் பாடியுள்ளார். எளிய தமிழில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பாசுரங்கள் தொண்டரடிப் பொடியுடையவை. இவர் பாடிய  தலங்கள் ~ : திருவரங்கமும்  நாம் பார்க்க முடியாத பரமபதமும்.  

தொண்டரடிப்பொடி என்பது ஒரு வகையான புனைபெயர். வைணவ மரபில் பகவானின் அடியார்களின் திருவடிகளின் தூசுகூட புனிதமானது என்கிற நம்பிக்கையின் அதீத வடிவமாக தொண்டரடிப்பொடி என வைத்துக் கொண்டார்.  இவரது இயற்பெயர் விப்ர நாராயணன்.  திவ்ய பிரபந்தத்தில் பிறிதோர் இடத்தில கூட 'இப் பாததூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே' என்று வருகிறது.  அனுதினமும் காலை எல்லா திவ்ய தேசங்களிலும் எம்பெருமானை பள்ளி எழுப்பும், திருப்பள்ளியெழுச்சி இவரது பாசுரம். 

The great saint by name Vipra Narayanar, born at Thirumandankudi also known as Bhaktanghri renu later came to be hailed as  ‘Thondaradippodi Alvar’ due to his devotion to the devotees of Lord. Thondaradipodi rendered 55 verses in praise of Lord Ranganatha - 10 verses of Thirupalli Yezhuchi and 45 verses of Thiru Maalai. Thirupalliyezhuchi is recited in every temple to wake up the Lord and rendered during kalasanthi in the morning.  Here is a pasuram from his Thirumalai : 

ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவரில்லை

பாரில்நின் பாதமூலம் பற்றிலேன் பரம மூர்த்தி

காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்

ஆருளர்க் களைகணம்மா அரங்கமா நகருளானே. 

Thondaradipodi Azhwar in his emotive address to Lord Ranganatha laments his misfortune of not having born in divyadesams; has no relatives, nothing to claim for and have acquaintance with the place of the Lord.  Oh Lord of dark radiance, I have not even secured your feet – I scream and call your names and there can be none other that the Great Lord of Thiruvarangam ~ Lord Ranganatha who owns the Universe and resides at Srirangam (described as ‘Arangamaanagar’) who can protect me… 

                           Thondaradippodi Aazhwar  immersed in bakthi sung everyday to wake up the Lord.  He sang about Thiruvarangam  and Paramapatham.  Thondaradippodi Alvar was born as Vipra Narayanar  in a small village by name 'Thiru mandangudi' in Prabhava year, Margazhi month, Krishna chaturthi, in Kettai (Jyestha) Nakshatram (star).   This Thirumandangudi is in Chozha nadu near Kumbakonam,  the nearest landmark being Thiruvarooran sugars factory.   

            At this place, Lord Ranganatha is seen in a rare standing posture.  Azhwar dedicated himself to serving the God at Thiruvarangam and sought darshan of the Supreme Lord Ranganatha – who yielded by providing him a special standing darshan.  It would appear that the same Lord Ranganatha of Sri Rangam has just stood up to provide darshan to His devotees here.  Here at Mandangudi, we have Lord Ranganatha in a standing posture alongwith Sridevi and Bhumadevi.  The Uthsavar is Azhagiya Manavalar. There is separate sannadhi for the Thayar also.

 

***தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள்

தொண்டரடிப்பொடி என்னும் அடியனை அளியனென்றருளி 

உன்னடியார்க்கு ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே!!



 

Today being in Anadhyayanam, there was no purappadu at Thiruvallikkeni divaydesam.  Here are some photos from periya mada veethi purappadu on the occasion of Alwar sarrumurai on 9.1.2024

 
adiyen Srinivasa dhasan. 
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
29.12.2024
 
Tailpiece :  ** Thiru Arooran Sugars Ltd was incorporated in 1954, setting up a sugar factory at Vadapathimangalam, Thanjavur with crushing capacity of 1200 tonnes fo cane per day.  In 1990, they expanded their crushing capacity setting up a new mill at Thirumandangudi, Papanasam Taluk, Thanjavur.   Things are not well as the factory accumulated huge losses and in recent times sugarcane farmers have been on protest seeking Govt intervention on disbursal of pending dues totaling several crores.








 

  

No comments:

Post a Comment