திருவல்லிக்கேணி
பாரதி சாலை ஒர பழைய புத்தக கடைகள் - புத்தகப்பிரியர்களுக்கு பொக்கிஷம். இன்று மாலை, ஒரு பழைய இதழ் - முக்கியமாக அதன் அட்டைப்படம்
என்னை கவர்ந்தது !
டோலக் என்று ஒரு தோல் வாத்தியம் - ஒரு பக்கம் சிறியதாகவும் மறுபக்கம் சற்று பெரியதாகவும்
இருக்கும். சிறியபகுதி ஆட்டுத் தோலாலும், பெரிய பகுதி எருமைத் தோலாலும் முடப்பட்டிருக்கும்
என அறிகிறேன் ! . இதன் உருளைப் பகுதி சிசே மரம் அல்லது மா மரத்தால் செய்யப்படுகிறது. கே.வி.மகாதேவன் இசையில் கே ஜேசுதாஸ், டிகே கலா குரலில், கே வி மஹாதேவன்
இசையில் இந்த பாடலை கேட்டு இருப்பீர்கள்
போய்
வா நதியலையே இவள் பூச் சூடும் நாள் பார்த்து வா
!!
வா
வா நதியலையே ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா !!
ஆனந்த விகடன் இதழில் தலைமை உதவியாசிரியராகப் பணியாற்றி, 'இதயம் பேசுகிறது' என்ற தலைப்பில் தனது பயணக்கட்டுரைகளை எழுதினார் மணியன். பின்னர் சொந்தமாக வார இதழ்களை வெளியிட்டார். சில திரைப்படங்களையும் எடுத்தார். 1975ல் கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த - எம். ஜி. ஆர், லதா நடிக்க, இவர் தயாரித்த படம் பல்லாண்டு வாழ்க 1975. திரு மஹாதேவன் டோலக்கைச் சிறப்பாகப் பயன்படுத்திய பாடல் “போய் வா நதியலையே"
மணியன் பின்னாளில் - இதயம் பேசுகிறது என்கிற இதழை, ஆனந்த விகடனில் இருந்து வெளிவந்து நடத்தினார். அவர் நடத்திய மற்றைய இதழ்களில் ஒன்று - : ஞானபூமி - இந்து மத மாத இதழ் - 1985ல் வெளிவந்தது.
இந்த ஞானபூமி இதழின் ஜனவரி 1991 பதிப்பின் அட்டைப்படத்தில் - நம் திருவல்லிக்கேணி
ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானின் புறப்பாடு படம் இடம் பெற்றது. காலஞ்சென்ற லக்ஷ்மணன்
என்கிற ஸ்ரீபாதம்தாங்கி படத்தில் உள்ளார்.
இதற்கு நேரடி சம்பந்தம் இல்லாத ஓர் செய்தி - மஹாகவி சுப்பிரமணிய பாரதி பத்திரிகைகள் நடத்தியது போல - பெரிய போராட்ட வீரர், தியாகி சுப்பிரமணிய சிவா நடத்திய மாத இதழ் "ஞானபாநு". இது ஏப்ரல் 1913 முதல் 1916 வரை வெளிவந்தது. சுப்பிரமணிய சிவா சுதந்திர தாகத்தை ஏற்படுத்தும் கட்டுரைகள் நிறைய எழுதினார். பாரதியாரின் 'சின்னச் சங்கரன் கதை'யின் ஆறு இயல்கள் இவ்விதழில் வெளியானது
நன்றி
!! - திருவல்லிக்கேணி ஸ்ரீ சம்பத்குமார்.
Pic of the cover of the magazine taken with Samsung A34 phone in low light !
No comments:
Post a Comment