To search this blog

Sunday, October 15, 2023

Purattasi Sani 4 - 2023 : வைட்டணவனென்னும் வன்மை

Purattasi Sani 4 - 2023 : வைட்டணவனென்னும் வன்மை 

The tamil month of Purattasi has a pride of place – today 14.10.2023 is Purattasi Sanivaram 4.  



நான் யார் நான் யார் நீ யார் ?  நாலும் தெரிந்தவர் யார் யார்

நான் யார் நான் யார் நீ யார்  ??

உள்ளார் புசிப்பார் இல்லார் பசிப்பார் உதவிக்கு யார் யாரோ ?

நல்லார் தீயார் உயர்ந்தார் தாழ்ந்தார் நமக்குள் யார் யாரோ ?

அடிப்பார் வலியார் துடிப்பார் மெலியார் தடுப்பார் யார் யாரோ ?

எடுப்பார் சிரிப்பார் இழப்பார் அழுவார் எதிர்ப்பார் யார் யாரோ ?

எதிர்ப்பார் யார் யாரோ ?

 

குடியிருந்த கோவில் படத்தில் புலமைப்பித்தனின் பாடல் வரிகள்.  இந்த படத்தில் ஆடலுடன் பாடலை கேட்டு பாட்டுக்கு நடனமாடிய L.விஜயலக்ஷ்மி என்பவர் பட்டயக் கணக்காளர்  என்பது தமிழ் சினிமா பார்க்கும் நல்லுலகம் அறியுமா !!  

சிலருக்கு மக்கள் சேர்ந்துள்ள இடத்தில் நிற்கும்போது கேட்க விழையும் கேள்வி  -  "நான் யார்" தெரியுமா ?  -  இந்த கேள்வியில் நான், எனது பதவி, என் அந்தஸ்து, மதிப்பு, மரியாதை என பல ஆணவங்கள் தொக்கி நிற்கின்றன !!  

என்ன பதில் தருவோம் !!  -  என் பெயர், என் குடும்பம், என் தந்தை / தாய் / எனது பாட்டன், முப்பாட்டன்கள் - என் செல்வநிலை, எனது படிப்பு, நான் செய்யும் வேலை, நான் வாங்கும் சம்பளம், என் பண பலம், என் அந்தஸ்து, என் வீடு, வாகனங்கள், என் அறிவு !!    என்றெல்லாம் விவரம் சொல்கிறோம்.  உண்மையில் இவை அனைத்தும் நிலையற்றன !  இவற்றை விட மிக அதிகமாக உடையோர் அங்கேயே இருக்கலாம் ! - மேலும் இவற்றால் அவர்களுக்கு என்ன பயன் !   

நான் யார்? என்பது   இரமண மகரிசி வழங்கிய உபதேசம்  குறித்த தன்னிலை விளக்கம், நூலாக வெளியிடப்பட்டது. தன்னை அறிய தனக்கு ஒரு கேடில்லை என்ற அழிவில்லாத நித்திய பேரின்ப சித்திப் பெருவாழ்வே பயன் என தமது திருமந்திரத்தில் திருமூலர் கூறியுள்ளார்.  தேகம் நான் என்கிற எண்ண வலையைத் தாண்டி ஆத்ம சொரூபமே நான்என்னும் இறுதிப்பாடு வருவதுதான் ஞானம் என  தாண்டவராய சுவாமிகள் கைவல்ய நவநீதத்தில் கூறியுள்ளார்.   

Benjamin Engel, a hacker from Berlin, sits in an interrogation room. The officer in charge tells Hanne Lindberg, Head of the Cyber Division of Europol, that Benjamin asked to conduct the interrogation. Benjamin says that he has information regarding FR13NDS, a notorious hacking group connected to the Russian cyber mafia, and MRX, an infamous hacker known on Darknet; he tells her that he could give them both to Hanne if she listens to him. Having no choice, Hanne sits down.  

Benjamin tells Hanne that he is like a superhero: like many heroes, he, too, has no parents; he never met his father as he abandoned the family when Benjamin was born, and his mother committed suicide when he was 8. He lives alone with his ailing grandmother. He regards his "superpower" as invisibility, as he was never noticed by most people during his childhood, due to him being socially backward. He says he learned programming and hacked his first system when he was 14. Though he felt like a loser in real life, he felt a sense of belonging on the Internet. While spending most of his time on Darknet, he met his hacking hero, MRX, whose identity no one knows and who can hack into any system. Benjamin aspires to be like him.  




பக்தி என்பது என்ன ?  புரட்டாசி அடியார்களுக்கான மாதம்.  ஒவ்வொரு தெருவிலும், காலை வேளையில் கோவிந்தா நாமம் ஒலிக்கும்.  எம்பெருமான் நாமங்களை கூவி அழைத்து, அவன் சின்னத்தை நெற்றியில் அணிந்து, ஆனந்தமாய் திருமாலடியார்கள் மிடுக்குடன் பவனி வருவர்.  திருமலை போன்ற அற்புத திவ்யதேசத்திலே - கோவிந்த நாமமதை உச்சஸ்தாயில் விளித்து ஆனந்தமாய் பண் பாடுவர்களிடத்தில், படிப்போ, செல்வமோ, குலமோ வேறு எதுவோ முக்கியமில்லை.  எம்பெருமான் அடியார்கள் என்பது மட்டுமே அடையாளம்.  அவ்வாறு திருவேங்கடவனையே நினைத்து, அவன் திருநாமம் பாடி வருபவர்களே உண்மையான ஸ்ரீவைணவர்கள்.  

பக்திப்பரவசத்திலே முன்பு நிற்கும் பெரியாழ்வாரின் - பெரியாழ்வார் திருமொழி பாசுரம் ஒன்று இங்கே :

நன்மை தீமைகள்  ஓன்றும் அறியேன்  நாரணா  என்னும் இத்தனையல்லால்

புன்மையால்  உன்னைப் புள்ளுவம் பேசிப் புகழ்வான் அன்றுகண்டாய் திருமாலே!

உன்னுமாறுஉன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே  நமோ நாரணா என்பன்

வன்மையாவது  உன் கோயிலில் வாழும் வைட்டணவனென்னும்

                                                                                                வன்மை கண்டாயே*.

ச்ரிய: பதியானவனே!, ஸ்ரீமன் நாராயணனே !  -  உம்மை  கோபாலா, கோவிந்தா, ‘நாராயணா!’ என்று கூப்பிடுதலை தவிர,  மற்று எந்த நன்மை தீமைகளையும்   நான் அறிந்தவனில்லை.   என் போன்ற சாதாரணர்களுக்கு  இயற்கையாக உள்ள அற்பத்தனத்தினால்,  உயர்ந்த  உன்னைக் குறித்து வஞ்சகமான சொற்களைச் சொல்லி புகழுவனல்லன் யான்.   உன்னை மட்டுமே  இடைவிடாது ஸ்மரித்துக் கொண்டிருக்கத்தக்க வழிகளில் ஒரு வழியையும் யான்  அறிந்தேனில்லை; ஒரு நொடிப்பொழுதும்  ஒழிவின்றி (இடைவிடாமல்)   "நமோ நாராணாய" என்ற நாமத்தை சொல்லும்  அடியேனுக்கு மிடுக்காவது  உன் திருவடி நிழலில் வாழும், உன் திருக்கோவில்களில் கைங்கர்யம் பண்ணும்  வைஷ்ணவன் என்கிற மிடுக்கோடு இருப்பவன் நான் -  என பெருமையுறுகிறார் நம் பெரியாழ்வார்.

 

The description of Benjamin Angel described earlier is the plot of – “Who Am I”  a  German techno-thriller film directed by Baran bo Odar released in 2014.  It is centered on a computer hacker group in Berlin geared towards global fame !!  One would tend to understand -  “Never hide behind your computer. Man’s the main security flaw.” Social engineering is “hacking” people to enter unauthorized locations via psychological manipulation.  The movie emphasizes -  don’t click on weird links on your emails!  In the film Clay  exploits an employee of the BND by phishing, which is acquiring sensitive information under the guise of another entity. Sometimes, you really don’t need to click on that link labeled “super cute parrot pictures.”

 
Here are some photos  of the  periya mada veethi purappadu of Sri Azhagiya Singar at Thiruvallikeni this evening. 
 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
14.10.2023









 

  

No comments:

Post a Comment