To search this blog

Saturday, October 7, 2023

Purattasi Sani 3 2023 - Thiruvallikkeni Azhagiya Singar - மெய்ம்மையே காண விரும்பு.

The tamil month of Purattasi has a pride of place.  Devotees throng  Vishnu temples, especially Tirupathi.  In this month, there occurs  the annual Brahmothsavam at the holy Thirumala Tirupathi. 


மெய்ம்மை  என்றால் என்ன தெரியுமா !!   மெய் என்ற சொல்லுக்கு உடம்பு, உண்மை என்ற இரு பொருள்கள் உண்டு.  that which exists !!  - எது உள்ளதோ அது உண்மை.  உடம்பு மூச்சு விடுகிறது, உணவு உண்கிறது, ஐம்புலன்களாலும் இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது. இவை கனவோ, மாயத் தோற்றமோ அல்ல. எனவே மெய் (உடம்பு) மெய் (உண்மை) தான். 

தமிழில் திருக்குறள் போன்று அற்புதமான நூல் - நாலடியார்.  திருக்குறள் சூத்திரம் போன்று இரண்டு அடிகளில் கருதிய பொருளைச் சுருங்கச் சொல்லிவிளங்க வைக்கிறது; நாலடியாரோ, பொருள்களைத் தக்கஉதாரணம் காட்டி விளக்குவதோடு, கற்போர் உளம் கொளும்வகையில் தெளிவுபடவும் உரைக்கின்றது. 

மெய்ம்மை என்ற  பெயர்ச்சொல்லுக்கு :  உண்மை, பட்டாங்கான இயல்பு, இருப்பு; சத்து, பொருண்மை  என பொருள்கள் உண்டு.   The word would translate to mean : truth, reality, natural state, existence, signification  

உண்மை, வாய்மை, மெய்ம்மை இம்மூன்றும் ஒன்று போலத் தோன்றும் சொற்கள். இம் மூன்றும்  மனிதன் தவறின்றி வாழ வேண்டும் என உரைப்பன. இதனை "மன, மொழி, மெய்களால் தவறாது நடப்பேன்' என்று உறுதி கொள்ள வேண்டும் எனச் சான்றோர் உரைத்தனர். (மனோ, வாக்கு, காயம் - ஸம்ஸ்க்ருதம்)  உள்ளத்தில் பொய்யின்றி ஒழுகுதல் உண்மை, உள்ளத்தில் உள்ள உண்மை மாறாமல் வாய் வழி  சொல்லாக,  பேச்சாக, வார்த்தைகளாக வெளிப்படுவது வாய்மை. வாய்மை சொன்ன சொல் தவறாமல் நடப்பது.  மெய்ம்மை உண்மை தவறாமல் உடல்வழி ஒழுகுதல்.  (மெய்- உடம்பு- செயற்படுதல்) 


பதினெண் கீழ்க்கணக்கு  நூல்களில் ஒன்றான - நாலடியார் - அறத்துப்பாலில் - . மெய்ம்மை அதிகாரத்தில் இருந்து ஒரு பாட்டு. 

நல்லாவின் கன்றாயின் நாகும் விலை பெறூஉம்

கல்லாரேயாயினும் செல்வர்  வாய்ச் சொற்செல்லும்

புல்லீரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச்

செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல். 

 உயர் இனத்து ஆவின் கன்றாயின் இளங்கன்றும் மிக்க விலைபெறும்,  படிக்காத அறிவிலி ஆயினும்,  செல்வந்தரது பேச்சு  வாய்ச்சொல் மதிக்கப்படும். நல்கூர்ந்தார் சொல்  அவர் கற்றவரேயாயினும், சிறிது ஈரமுள்ள காலத்தில் உழுகின்ற உழவுபோல மேலளவாய்ச் சென்று உள்ளே மதிக்கப்படாதொழியும்.!! 

Devotees  in large numbers visit Thiruvallikkeni Divyadesam.  Every Saturday of the month of Purattasi, there will be Periya maada veethi purappadu of Lord Azhagiya Singar.   Today 7th Oct 2023 there was grand  Purappadu of Thelliya Singar at Thiruvallikkeni divaydesam  being 3rd Sanikizhamai in Purattasi. … …             

 இன்று மாலை திருவல்ல்லிக்கேணியில் புரட்டாசி சனிக்கிழமை புறப்பாட்டில்  அருள்மிகு அழகிய சிங்கர் அருள் பாலித்தார். 

வடிவார் முடிகோட்டி வானவர்கள்நாளும்

கடியார் மலர்தூவிக் காணும் - படியானை,

செம்மையாலுள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே,

மெய்ம்மையே காண விரும்பு.

 





திருப்பரமபதத்திலே உள்ள நித்யஸூரிகள் தங்களுடைய அழகிய முடிகளை வணங்கி நறுமலர்களைப் ஸமர்ப்பித்து ஸேவிக்கும்படியாகவுள்ள பெருமானை நெஞ்சமே! காணவிரும்பு  என்கின்றனராம் ஸ்ரீ பேயாழ்வார்  - முறைப்படி உள்ளுருகி  சீர்மையான வழிமுறையாலே எம்பெருமானை உள்ளது உள்ளபடியே காண விரும்பு என்கிறார். 

 

Immediately upon start of the purappadu there was drizzling – so Perumal was covered with silken garment and had purappadu in a speedy manner. Here are some photos taken during today’s periya maada veethi purappadu.

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
7.10.2023   






No comments:

Post a Comment