To search this blog

Friday, April 22, 2022

Sri Parthasarathi Emperuman Chithirai thiruther 2022

உத்சவங்களில் திருத்தேர் கம்பீரமானது.  அழகான திருத்தேர் பெரிய கயிறுகளால் இழுக்கப்படும். அவற்றை "வடம்" என்று கூறுவர். இவ்வடத்தைப் பற்றி இழுத்துச் செல்வதை "வடம் பிடித்தல்" என்பர். கோவிலைச் சுற்றி தேர் செல்லக்கூடிய அளவு அகலமான வீதி அமைந்த இடங்கள் ரத வீதிகள் என்று அழைக்கப்படும். திருத்தேர் உருண்டோடி வரும் வீதிகள் எங்கும் மக்கள்  வீட்டு வாசலில் வண்ணக் கோலம் போட்டு, வழிபாட்டுப் பொருட்களுடன் வாசலில் நின்று கொண்டு வணங்குவர்.  தேர் (திருக்கோவில் உத்சவங்களில் திருத்தேர்) - பண்டைய காலத்தில் இருந்தே மக்களை கவர்ந்து வந்துள்ளது.  






மஹாபாரதம்  அதர்மம் அழிந்த காவியம் - குருக்ஷேத்ரத்திலே பல்லாயிரக்கணக்கானோர்  அதர்மத்தின் பக்கல்  நின்று அழிந்தனர்.  இரத்த ஆறு மண்ணில் ஓடியது.  தன் மகனை கட்டுப்படுத்த இயலாத திருதராஷ்டிரன், "ஓ! சஞ்சயா, புனிதக்களமான குருக்ஷேத்திரத்தில் போரிடும் விருப்பத்துடன் திரண்டிருந்த என் மகன்களும், பாண்டவர்களும் என்ன செய்தார்கள்?" என வினவினான் ?  

அந்த யுத்த பூமியில் எண்ணிலடங்கா வீரர்கள் திரண்டிருந்தனர்.  பெரும் வில்லாளிகளும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும், பெரும் தோற்றம் கொண்டவர்களுமானவரும், கணைமாரியால் ஒருவரையொருவர் துளைத்துக் கொண்டனர். ஒருவரின் வில்லை மற்றவர் வெட்டுவதிலும், ஒருவரின் குதிரைகளை மற்றவர் கொல்வதிலும் அவர்கள் ஒவ்வொருவரும் வென்றனர். மேலும் அவர்கள் இருவரும் இப்படித் தங்கள் தேர்களையும் இழந்து, வாள்களால் போரிட்டு ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.  

அக்குரோணி எனும் சேனைகளில் யானைகள், குதிரைகள், ரதங்கள், காலாட்படை வீரர்கள் என அணி வகுத்தனர்.    ஆரவாரமுள்ள யானைகளின் பிளிறல்களைக் கொண்டதுமான அந்த இரண்டு படைகளில் இருந்த போராளிகளின் மோதல் பயங்கரமாக இருந்தது" என்றான் சஞ்சயன். பாண்டவர்களின் படை துருபதன் மகனான திருஷ்டத்யும்னனால்  அணிவகுக்கப்பட்ட பரந்த படை. அந்தப் படையில் கதாயுதம் கொண்ட - பீமன், கடோத்கஜன்,  , அர்ஜுனனுக்கு போரில் இணையான பல வில்லாளிகள் இருந்தனர். யுயுதானன் {சாத்யகி}, விராடன், துருபதன்,  திருஷ்டகேது, சேகிதானன், பெரும் சக்தியுடைய காசியின் ஆட்சியாளன்; புருஜித், குந்திபோஜன், மனிதர்களில் காளையான சைப்பியன்,  பெரும் ஆற்றல் படைத்த யுதாமன்யு, பெரும் சக்தி கொண்ட உத்தமௌஜஸ், சுபத்திரையின் மகன் {அபிமன்யு},ஆகிய  பெரும் தேர் வீரர்கள் இருந்தார்கள்   வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட சிறந்த தேரில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் - அர்ஜுனனுக்கு தேர் சாரதியாக விளங்கினார்.  

அண்டத்தின் தலைவன்  {விஸ்வேஸ்வரன் , கிருஷ்ணன் },  பல வாய்களும், கண்களும் கொண்டதும், பல அற்புத அம்சங்களைக் கொண்டதும், பல தெய்வீக ஆபரணங்களைப் பூண்டதும், பல தெய்வீக ஆயுதங்களை ஏந்தியதும், தெய்வீக மாலைகள் மற்றும் ஆடைகளைச் சூடியதும், தெய்வீக மணமிக்க நறுமணத் தைலங்கள் பூசியதும், அனைத்து அற்புதங்களையும் கொண்டதும், பிரகாசமாகவும், எல்லையற்றதாகவும், அனைத்துப் புறங்களிலும் முகங்களைக் கொண்டதுமான தலைமையான தனது இறைமை வடிவத்தை அந்தப் பிருதையின் மகனுக்கு {குந்தியின் மகன் அர்ஜுனனுக்கு} வெளிப்படுத்தினான். ஒரே நேரத்தில், வானத்தில், ஆயிரம் சூரியன்களின் ஒளி வெடிக்குமாயின், (அப்போது) அதுவே {அந்த ஒளியே} அந்த வல்லமையுள்ளவனின் {கிருஷ்ணனின்} ஒளியைப் போன்றதாக இருக்கும்.  

(மஹாபாரத விளக்கம் - நன்றிகளுடன் திரு அருட்செல்வப்பேரரசன் எழுத்துக்களில் இருந்து)  

நிற்க !  மஹாபாரதம் தூது சென்ற கண்ணபிரான் ஏற்றம் சொல்லும் மஹா காவியம்.  குருக்ஷேத்திர காலம் / களம் வேறு !  .. .. .. இன்று அல்லிக்கேணியிலே பார்த்தன் தன் தேர்முன் நின்ற ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானின் திருத்தேர் மஹோத்சவம் - சித்திரை ப்ரஹ்மோத்சவத்தில் 7ம் நாள் !!

Today (22.4..2022)  was the grand occasion of Thiruther for Sri  Parthasarathi Perumal in the Chithirai brahmothsavam at Thiruvallikkeni divyadesam.  Thiruther is most majestic and thousands descend to the divyadesam to have glimpse of Emperuman and the rolling juggernaut.  We worship Sriman Narayana, as  devotees and followers of the Vedic path, we firmly believe that  Lord Krishna descended on this Universe some  5,000 years ago.  His upadesam Srimad Bhagavad Geetha is the greatest treasure trove, rendered in the midst of Mahabaratha, when He offered to drive the chariot of Arjuna and earned the sobriquet ‘Sri Parthasarathi’.  

0ne will realise the grandeur  of rolling juggernaut, if one were to stand near as the 8 or 9 feet wheel rotates by.  Thiruther is a grand occasion of togetherness of people.  During Brahmothsavam thousands throng Temple and have darshan of Perumal in His veethi purappadu ~ significantly, during Thiruther, thousands partake – they pull, go around, push, offer buttermilk and panakam [jaggery water] to devotees and there is celebrations on the air, clearly visible.  

Could recall that the Thiruther of yore was even bigger ~ in 1980s for a couple of years, there was no Thiruther purappadu as it was under repair – when made again, in tune with times, it got reduced a bit – also now it has steel wheels; the earlier one had wooden wheel… it now runs on concrete cement road.  Thiruther, the chariot, is easily the most grandeur and most attended by bakthas too. Ratha [the chariot] has existed in puranic days, historic days and more.  We have heard of Kings of recent past having had platoons of horse and horse-driven chariots.  

On screen too, we have seen many – one got enamoured by the scene of Arjuna wading through the forces in Mahabaratha  - even those chariots were quite attractive.  Ratha is not only fleet-footed mode during war, it symbolizes energy and zeal to move forward.  It was on the chariot steered by Lord Krishna, Geethopadesam occurred to Arjuna, the mighty warrior.  The rath itself according to legend was given by Agni.  The battle formation was unconceivably bigger ~ by some accounts an Akshauhini is described as a formation consisting of 21870 chariots, 21870 elephants, 65160 cavalry and more than a lakh of infantry.  

It was a grand festive day at Thiruvallikkeni Divyadesam – the chariot was pulled at 07.15 am and reached back the place by 08.30 am ~ it was heavenly.  In the goshti, it was Thirumozhi of Thirumangai Mannan.  Thiruther is celebration of people – thousands had assembled at Thiruvallikkeni to have darshan of Sri Parthasarathi Emperuman and glee was lit large in their faces – here are some photos of thiruther. 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
22.04.2022 




























1 comment:

  1. Very nice.. கண்ணை கவரும் படங்கள்... Very beautiful.

    ReplyDelete