To search this blog

Thursday, April 14, 2022

Subhakruthu Varusha pirappu 2022: சுபகிருது தமிழ் புத்தாண்டு

Today, Thursday 14th Apr 2022  marks  the starting of Tamil new year ‘Subhakruthu’  and naturally everyone is curious to know how the year would be !  Do you know …: “Vyaya, Sarvajith,  Sarvathari, Virothi, Vikruthi, Kara, Nanthana, Vijaya, Jaya, Manmatha, Thurmukhi, He Vilambi, Vilambi, Vikari, Saarvari, Pilava  .. ..  (names of Tamil New year – 15 of them preceding Subakruth)  -   …………. 

 


“In the ‘VaivasvathaManvantharam, after passage of 27 Maha Yugas ~ now in the 28th Mahayuga – after passage of 3 Yugas ~ in the Kali Yuga – after passage of 4 lakh 28 thousands of years – in the year 5123  Salivahana Saha  1944 – subakruth Varusha Chithirai masa first day  …… should go the lengthy introduction exactly describing today 

இன்று தமிழ் புத்தாண்டு.  சித்திரை முதல் நாள் வருட பிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது கதிரவன் நகர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. இம்முறையின்படி, சூரியன் ஒவ்வொரு இராசியிலும் புகும்போது 12 தமிழ் மாதங்கள் பிறப்பதாகக் கொள்ளப்படுகிறது. காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாகும். தமிழ் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே இம் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. இதனால் இவை சூரிய மாதங்கள் எனப்படுகின்றன. 

வருஷ பிறப்பு என்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு சிறந்த நாள் ஆகும். புத்தாடை அணிந்து கோவில்களுக்கு சென்று வழிபாட்டு வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசி வாங்கி சந்தோஷத்துடன் இருக்கும் நாள். இன்று வடை திருக்கண்ணமுதுடன் விருந்து உண்பர். வேப்பம்பூ பச்சடி தவறாமல் இடம் பெறும். இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி, கசப்பு, இனிப்பு கலந்துள்ள இந்த வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்ற தத்துவத்தை வேப்பம்பூ பச்சடி வெளிப்படுத்துவதாக ஐதீகம் உள்ளது.

 





ஆறுபது ஆண்டுகளுக்கு முன் வந்துவிட்டுப்போன சுபகிருது  வருடம்  இன்று புத்தாண்டுக் கோலமணிந்து மீண்டும் வருகை தருகிறது. இரண்டு தலைமுறைகள் கழிந்துவிட்ட நிலையில் அன்றைய விகாரியில்  வாழ்க்கை மற்றும் நிகழ்வுகளை நினைவுகூர்ந்தால் சுவையாகவும் சிறிது வியப்பாகவும் கூட இருக்கலாம். 1952 ஏப்ரலில் சுபகிருது  ஆண்டு வந்தபோது இந்தியக் குடியரசு பிறந்து இரண்டொரு வருடங்களே  ஆகி இருந்தன. குடியரசுடன் நமது தேசப்படமே மாறிவிட்டிருந்தது. மத்தியபாரதம், விந்தியப்பிரதேசம், செüராஷ்டிரம், ராஜஸ்தானம் என்று பல புதிய ராஜ்யங்கள் (அப்போது மாநிலம் என்ற வார்த்தை இல்லை) உதயமாகி இருந்தன.  சுதந்திரம் அடைந்த பின்  முதல் முறையாக பொது தேர்தல்கள் 29.10.1951 முதல் 21.2.1952 வரை நடந்து - 1949 பேர் போட்டியிட,  489 மக்களை உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.  இந்திய தேசிய காங்கிரஸ் 489ல் 364 இடங்களை பிடித்தது. ஜவாஹர்லால் நேரு - மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல் பிரதம மந்திரியானார். பின்னர் மே 1952ல் குடியரசு தலைவருக்கான தேர்தல் நடந்தது.  இதில் டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத் - கேடி  ஷா என்பவரை தோற்க்கடித்து வெற்றி பெற்றார். 

இன்று 14.4.2022 இனிய தமிழ் புத்தாண்டு ~ பேயாழ்வார் தமிழ் தலைவர் .. ..  திருவல்லிக்கேணி திவ்ய தலம்  வங்க கடல் ஓரத்தில் அமைந்துள்ளது.  கடலில் அலைகள் ஆர்ப்பரிக்கும் !  அலைகள்  கடற்கரையை நோக்கி ஓடோடி வரும்போது தாழ்ந்து வீசுவது இயல்பு  ~ இங்கே தமது மனத்தே  சயனித்திருக்கும் எம்பெருமானை தமது மூன்றாம் திருவந்ததியில் போற்றிப் புகழ்கின்றார் நம் ஆழ்வார்.  

பணிந்துயர்ந்த பெளவப் படுதிரைகள் மோத,

பணிந்த பணிமணிகளாலே - அணிந்து, அங்கு

அனந்தனணைக்கிடக்கும் அம்மான், அடியேன்

மனந்தனணைக்கிடக்கும் வந்து. ~ மூன்றாம் திருவந்தாதி




 

கடலில் அலை வீசும்போது தாழ்ந்தும் வீசுவது இயல்பாதலால் ‘பணிந்துயர்ந்த எனப்பட்டது !  கடலிலுண்டான அலைகளானவை, தாழ்ந்தும் எரிந்தும் அலை மோதுகின்றன !  நாலு பக்கமும் அடிக்க  பணிந்த அத்திவலைகள் திருமேனியில் படாதபடி குடை பிடித்தாற்போலே கவிந்திருக்கிற, மணிகளாலே,  மாணிக்கங்களினாலே அலங்கரிக்கப்பட்டிருக்கிற  திருவனந்தாழ்வானாகிற  ஆதிசேஷன் அணையாம் மெத்தையில் சயனித்து, திருக்கண் வளர்ந்தளாகிற ஸர்வேச்வரன் (அந்தப் படுக்கையிற் பொருந்தாதே) அங்கு நின்றும்,  வந்து புறப்பட்டுவந்தும்  அடியேனுடைய மனமாகிற படுக்கையில்  சயனித்திரா நின்றான்.  







Every Tamil New year, there would be periya mada veethi purappadu of Sri Parthasarathi Emperuman; however today being Selvar uthsavam preceding Chithirai Brahmothsavam, today there is no purappadu for Sri Parthasarathi. Here are some photos of Sri Parthasarathi perumal taken during pathi ula to kannadi pallakku during special brahmothsavam on 28.2.2022  

adiyen Srinivasa dhasan
Mamamndur Veeravalli Srinivasan  Sampathkumar
14-4-2022

  

No comments:

Post a Comment