To search this blog

Tuesday, November 9, 2021

Sri Vishvaksenar Sarrumurai 2021

இன்று ஸ்ரீவைணவர்களுக்கு ஓர் சீரிய நாள் !  -  இன்று ஐப்பசியில் பூராட நக்ஷத்திரம் - ஸ்ரீ விஷ்வக்சேனர் சாற்றுமுறை.

Fond of ‘Army tuber’ ! -  a  not so commonly-eaten and perhaps not so regularly eaten vegetable – better known as Yam, a starchy tropical tuber high on carbohydrates. It is like potatoes and sweet potatoes, though not be confused with either. Loaded with nutrients specially fibre, yam has made it to the list of foods suited for management of weight, diabetes and blood cholesterol levels. Native to Africa and Asia, Yam is commonly known as zimicand/ சேனை கிழங்கு. Several varieties of yam are available.  The nature of carbohydrates in yam differ from that of potatoes. Its high fibre content contributes to a glycemic index of 54, significantly lower than that of potatoes having a glycemic index of 80. This makes yam better suited for weight watchers, diabetics and those with heart disease as it does not create sharp increase in insulin response !  Yam, infact is the common name for some plant species in the genus Dioscorea that form edible tubers.   Not a botanical or culinary post though !!

சேனை (பெயர்ச் சொல்)  : =  படை - பண்டைய காலத்தில் பல படைகள் ஒன்றிணைந்தது சேனையாகும். சேனை என்ற சொல்லுக்கு அடிச்சொல்  சேர்தல்,  கூடுதல் என்பதாகவும் கொள்ளலாம்.  சேனை என்பது பலர் சேர்ந்த கூட்டம்  அல்லது பிற பொருளிற் பல எண்ணிக்கை என்றும் கொள்ளலாம்.  போர்தனை வெல்ல பெரிய சேனையும், ஆயுதங்களும், சிறந்த சேனாபதியும் அதி அவசியம்.

சேனைத்தலைவர் (சேனைக்குடையார், சேனையார், சேனை முதலியார், சேனைக்குடியர்,  சேனை குல வேளாளர்) என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்துள்ளதாக அறிகிறோம்.    சேனைத்தலைவர் - ஒரு சிறந்த போராளியாக, மதி வியூகம் அமைக்க தெரிந்த படைத்தலைவர் - மன்னனது சபையில் முக்கிய ஆலோசகர். தவிர  இப்பதவி வகிப்போர் -  நிலச்சுவான்தார்களாக,  பண்ணையார்களாக, ஆயுதம் செய்யும் கலை அறிந்தவர்களாக, வணிகர்களாக இருந்துள்ளனர்.  பாண்டியர் காலத்தில் இவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டதாக சில குறிப்பேடுகள் இயம்புகின்றன. 

நமக்கு போரோ, வணிகமோ,பிற பொருட்செல்வமோ முக்கியமல்ல - எம்பெருமான் மட்டுமே முக்கியம்.  அவர்தம் திருவீதி புறப்பாடுகளை முக்கியமாக உத்சவ புறப்பாடுகளை  அதிலும் அதி முக்கியமாக - ப்ரஹ்மோத்சவ வைபவங்களை விரும்பி எம்பெருமானை சேவித்து அருள் பெறுவோம்.  திவ்யதேசங்களில், ப்ரஹ்மோத்சவத்திலே - முதல் புறப்பாடு - அங்குரார்ப்பணம் தான் - அன்று எம்பெருமான் புறப்பாடு கண்டருள மாட்டார் .. ..  நம் சம்பிரதாய ஆசார்யர் சேனை முதலியார் எனும் விஷ்வக்சேனருக்குத்தான் புறப்பாடு !!




In the most reverred epic Mahabharata, rich encomiums are paid to Lord Krishna, His names are handed down to Yudhishthira by the famous warrior Bhishma who was on his death bed (of arrows) in the battlefield of Kurukshetra. Yudhishthira asks Bhishma the following questions “kimekam daivatam loke kim vāpyekam parāyaam”….. 

In this universe -  Who is the one (ekam) refuge (parāyaam) for all? Who (kim) is the greatest (ekam) Lord (daivatam) in the world (loke)? …. ..in the invocation of Sri Vishnu Sahasranamam is a verse which reads : Vignam nignanthi sathatham, Vishvaksenam thamaasraye.’  This verse pays homage to the commander-in-chief of Sri Vishnu’s army – Sri Vishwaksena – who controls the several two-tusked elephant warriors and other beings who serve in this army. 

திவ்ய தம்பதிகளின் ஸேநாதிபதியானவரும், ‘யஸ்யத்விரத வக்ராத்யா .. .. ..  விக்னம் நிக்நந்தி விஷ்வக்ஸேனம் தாமஸ்ரயே'  என்று ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் ச்லோகத்தில், “நம் விக்நங்களை (தடைகளை / கஷ்டங்களை)  விலக்கிக் கொடுப்பவரான விஷ்வக்ஸேநரை ஆஸ்ரயிக்கிறேன்” என்று வணங்கப்படும் ஸேனை முதல்வரை வணங்கி நம் கவலைகள் தீர்வோம். 

யஸ்யத்விரத வக்ராத்4யா: பாரிஷத்3யா: பரஷ்ஷதம் |

விக்4னம் நிக்4னந்தி சததம் விஷ்வக்சேனம் தமாஷ்ரயே  || 

நமது ஸ்ரீவைஷ்ணவ ஆசார்ய பரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது; பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள் யோகதசையில் வகுளாபரணருக்குச் சீடரானார். ரஹஸ்யார்த்தங்களை தங்கள் சிஷ்யர்களுக்கு உபதேசிக்கு முன்பு அந்த சிஷ்யர்கள், தங்கள் க்ருபைக்குப் பாத்ரமானவர்களா என்று பரிசீலித்து, தங்கள் மனம் நோகாதவண்ணம் , அதே சமயம், தங்கள் மனம் உகக்குமாறு தங்களைப் பின்பற்றுவார்கள் என்று உறுதி செய்து கொண்ட பிறகே உபதேசம் செய்வார்கள். இது ஓராண் வழி ஆசார்யர் சிஷ்யர் என வாழையடி வாழையாக வந்த மரபு. 

எம்பெருமான், பெரிய பிராட்டி தாயாரை தொடர்ந்து நம் ஸத்ஸம்பிரதாயத்தில் ஆசார்ய பரம்பரையில் மூன்றாவதாக இருப்பவர் சேனை முதலியார் எனப்படும் விஷ்வக்சேநர். இவர் எம்பெருமானின் படைகளுக்கு தலைவராக இருக்கிறார். ஸ்ரீவைகுண்டத்தில் எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்பவர்கள் அனைவரையும் அந்த அந்த செயல்களில் நியமிப்பவராக உள்ளார்.    இவரே நித்ய சூரிகளில் ஒருவராக, ஸேநாதிபதியாக, எம்பெருமானின் அதீநத்திற்குட்பட்ட நித்யவிபூதியையும், லீலாவிபூதியையும் தன் மேற்பார்வையில் பார்த்துக்கொள்பவராக இருக்கிறார்.  ஸேனை முதல்வர், ஸேநாதிபதி, வேத்ரதரர், வேத்ரஹஸ்தர் என்று பல திருநாமங்கள் கொண்டவர். சூத்ரவதி என்று இவருடைய திவ்ய மஹிஷியின் திருநாமம். எம்பெருமானின் சேஷ  ப்ரசாதத்தை முதலில் கொள்பவராதலால், இவருக்கு சேஷாஸனர்  என்ற திருநாமமும் உண்டு.  விஷ்வக்சேனர் அவதரித்த திருநக்ஷத்திரம்: ஐப்பசி, பூராடம்;  இவர் அருளிய சாஸ்திரம்: விஷ்வக்ஸேன ஸம்ஹிதை.  இவரது வாழி திருநாமம் : 

ஓங்கு துலாப் பூராடத்துதித்த செல்வன் வாழியே

ஒண்டொடியாள் சூத்ரவதி உறை மார்பன் வாழியே

ஈங்குலகில் சடகோபற்கிதமுரைத்தான் வாழியே

எழிற் பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே

பாங்குடன் முப்பத்துமூவர் பணியுமவன் வாழியே

பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே

தேங்குபுகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே

சேனையர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே

Here are some photos of Sri Senai Muthaliyar at Thiruvallikkeni taken in yesteryears.

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்

மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.

9th Nov 2021

பி.கு. :  சைவ சித்தாந்தத்திலே - வீரபாகு  தமிழ்கடவுள் முருகனின் இராணுவத்தின் தளபதி ஆவர். முருக பகவான் சிவனின் மூன்றாவது கண்ணிலிருந்து பிறந்தார்.  சக்தி தேவியின் ஆபரணங்களிலிருந்து அவருக்கு உதவ ஒன்பது தளபதிகள் (நவவீரர்கள்) பிறந்தனர். ஒன்பது தளபதிகளில் வீரபாகு மூத்தவர் ஆவர். செங்குந்தர் கைக்கோளர் சமூகம் தங்களை முருகப் பெருமானின் தொண்டர்கள் வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் வழி வந்தவர்களாகக் கூறுவர்.








1 comment: