To search this blog

Wednesday, November 17, 2021

Karthigai Masapravesam 2021 - உய்த்துணர்வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி

இன்று ஸ்ரீவைணவர்களுக்கு ஓர் சீரிய நாள் !  இன்று மாச பிரவேசம்.  இன்று முதல் கார்த்திகை மாசம் ஆரம்பம். கார்த்திகை என்றாலே ஞாபகம் வருவது "தீபத் திருநாள்" - நமக்கோ திருமங்கைமன்னன், திருப்பாணர், நம்பிள்ளை - திருநக்ஷ்த்திரங்கள்.     தமிழ் மக்களால் பயன்படுத்தப்பட்டுவரும் மரபுவழி நாட்காட்டியின்படி ஆண்டின் எட்டாவது மாதம் கார்த்திகை ஆகும். தமிழில் பாகுலம் என்றால் கார்த்திகை மாதத்தைக் குறிக்கும். சூரியனானது தமிழில் தேள் என்று சொல்லப்படும் விருச்சிக இராசியுள் புகுந்து அங்கே பயணம் செய்யும் காலமான 29 நாள், 30 நாடி அல்லது நாழிகை, 24 விநாடி அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 அல்லது 30 நாட்களை உடையதாகக் எடுத்துக்கொள்ளப்படுகிறது. 

நமது கலாச்சாரத்தில், சனாதன தர்மத்தில்  'விளக்கு' என்பது மிக முக்கியமானதாக உள்ளது.  தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுவது நல்லது என்பது  நம் முன்னோர்கள் வழக்கு.  திருமணம் முடிந்து வீட்டிற்குள் வரும் மருமகளையும் முதலில் விளக்குதான் ஏற்ற சொல்லுவார்கள். வீட்டில் எந்த விஷேசம் நடந்தாலும் விளக்கேற்றி செய்வதுதான் தமிழக மக்களின் வழக்கம்.  இது ஏதோ விளக்கை ஏற்றி, சற்று நேரம் எவ்வாறோ ஒளிரட்டும் என்பது போலல்ல. விளக்கை எப்படி ஏற்ற வேண்டும், அதன் தீபம் எப்படி இருக்க வேண்டும் என்பதும் கூட முக்கியம். விளக்கேற்ற , நெய்,  நல்லெண்ணெய் சிறப்பானதாக கருதப்படுகின்றன.   நல்ல எண்ணெய் உபயோகிக்கும்போது விளக்கின் தீபத்தில் ஓரு ஒளிவட்டம் வெளிப்படுகிறது. இந்த ஒளிவட்டத்தினால் நாம் வசிக்கும் இடம் சுத்தமாகும்.     பொதுவாக  விளக்குகளில் எண்ணெயைத் தேக்கி வைத்திருக்க ஒரு பகுதி இருக்கும். இந்த எண்ணெயிலிருந்து சிறிது சிறிதாக எரியும் சுவாலைக்கு வழங்குவதற்காக ஒன்று அல்லது பல திரிகள் இருக்கலாம்.    கார்த்திகை மாதத்தில் நாம் சிறப்பாக பயன்படுத்துவது மண்ணாலான அகல் விளக்கு. 






ஐப்பசி மாதத்திலே நம் ஆசார்யன் சுவாமி மணவாள மாமுனிகள் உத்சவம் இனிதே நடந்து முடிந்தது ~ பொய்கையார் பூதத்தார் சற்றுமுறைகளும் கூட இனிதே நடந்தேறின.   கார்த்திகை மாதம் ஒரு சிறப்பான மாதம்.  திருமங்கை மன்னன், திருப்பாணர் சற்றுமுறைகள்  கூடவே திருக்கார்த்திகை தீப உத்சவம். இன்று 17.11.2021 கார்த்திகை மாதப் பிறப்பு.  திருவல்லிக்கேணி திவ்ய தேசத்தில் முக்கிய உத்சவங்கள் தவிர பல  நாட்களிலும்  பெருமாள் புறப்பாடு உண்டு.   மாசப்ரவேசத்தன்று சிறிய மாட வீதி புறப்பாடு !  மற்ற ஏனைய தடைகள் அனைத்துமே நீக்கப்பட்டாலும், கொரோனா காரணம் காட்டி இன்னமும் திருக்கோவில் புறப்பாடுகள் நடைபெறுவதில்லை என்பது மிகுந்த மனவருத்தமானது!  

கார்த்திகை மாத தீப நன்னாளில் மட்டுமல்ல அந்த மாதம் முழுக்கவே தீபமேற்றி வழிபட்டார்கள் நம் முன்னோர்கள். இதை நம் சங்க இலக்கியங்கள் பலவும் குறிப்பிடுகின்றன. இந்த தீபக் கொண்டாட்டம்  மனிதனின் நல்வாழ்வு, அவனின் உள்நிலை வளர்ச்சிக்கு   வழி செய்கிறது.   நாம் பார்த்து உணர்வதற்கு, ஒளி மிக அத்தியாவசியம். நம்மைச் சுற்றி இருக்கும் உலகத்தை நாம் புரிந்துகொள்வதில் நம் பார்வை பெரும் பங்கை வகிக்கிறது. வெளிச்சம் இல்லாவிட்டால், நம்மை சுற்றி இருக்கும் எதையும் நம்மால் உணர முடியாது. இதன் அடிப்படையில் நமக்கு ஒளி முக்கியம்.  

63 நாயன்மார்களின் நமிநந்தி அடிகளே 'தொண்டர்க்காணி' என்று போற்றப்படுகிறார். அதாவது அடியார்களுக்கு இலக்கணமாகத் திகழ்கிறார் என்று பொருள். காரணம் அவர் பெரும் இக்கட்டானச் சூழலிலும் விளக்கிடும் திருப்பணியை நிறுத்தவே இல்லை. திருவாரூர் ஆலயத்தில் விளக்கேற்றும் பணியைச் செய்துவந்த நமிநந்தி அடிகள், விளக்கேற்ற நெய் இல்லாத வேளையில், நெய் யாசகம் கேட்டு சென்றார். அப்போது புற சமயத்தார் அவரை கிண்டலும் கேலியும் செய்து, நெய் இல்லாவிட்டால் என்ன, உமது ஈசனின் அருளால் நீரை விட்டு விளக்கு இடலாமே என்று சொன்னார்கள். அதன்படியே கமலாலயத் திருக்குளத்தில் நீர் அள்ளி விடிய விடிய ஆலயம் முழுக்க விளக்கேற்றினார் நமிநந்தி அடிகள். விளக்கேற்றும் பணியால் சகலருக்கும் நன்மை விளைகிறது அதனால் அதுவே தலையாயத் தொண்டு என்று போற்றப்படுகிறது. 

மழைக்காலம் சற்றே ஓய்ந்து குளிர் பரவும் காலத்தில்  நல்லெண்ணெய், காட்டாமணக்கு, சிற்றாமணக்கு, பேராமணக்கு, பசு நெய், வேப்பெண்ணெய், புங்கமர எண்ணெய் மற்றும் பலவகை மூலிகை எண்ணெய்களை பயன்படுத்தி ஊரெங்கும் விளக்கேற்றினார்கள்.  மேலும் பல்வேறு மூலிகைகளை இந்நாளில் தூபமாக எரிப்பதாலும் பல்வேறு நன்மைகள் . 

எம்பெருமானான ஸ்ரீமன் நாராயணனுக்கு பூ மாலைகளும், பொன் மாலைகளும் கூட - அருந்தமிழ் சொல்மாலையும் அழகு சேர்க்கின்றன - எனவேதான் ஒவ்வொரு புறப்பாட்டின் போதும் - பெருமாள் முன்பே திவ்யப்ரபந்தம் சேவிக்கப்பெறுகிறது. இன்றைய கோஷ்டியில்   தமிழ் தலைவனாம் பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி சேவிக்கப்பெற்றது.


உய்த்துணர்வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி,

வைத்தவனை நாடி வலைப்படுத்தேன், - மெத்தெனவே

நின்றானிருந்தான் கிடந்தானென்னெஞ்சத்து,

பொன்றாமை மாயன் புகுந்து ! 

மனத்தினாலும் அறிவினாலும் உய்ந்து உணர்ந்த விவேக உணர்ச்சி எனும் மாசற்ற தீபத்தை ஏற்றி, ஸ்ரீமன் நாராயனான எம்பெருமானை தனது இதயத்திலே வலைப்படுத்தி தனதாக்கிக்கொண்டால், அவ்வெம்பெருமான் குறை ஒன்றுமில்லாமல்  ஹ்ருதயத்திலே குடி புகுந்து, அமைதியாக, முதலில் நின்று, சற்று பிறகு,   வீற்றிருந்து அதன் பிறகு அங்கேயே  பள்ளிகொண்டருளினான் ~ என்கிறார் தமிழ் தலைவன் பேயாழ்வார். 

Happy to be living in Thiruvallikkeni  Divyadesam ~ though the primordial purpose of darshan of Emperuman in His purappadus is not happening for many days now.  Last year, 30.11.2020 was Rohini in the month of Karthigai and  Sarrumurai vaibhavam  of Sri Thiruppanazhwar.  The day being Pournami, was Thirukarthigai too   .. Thiruvallikkeni vasigal felt  elated .. delighted to have His darshan .. .. after so many months Sri Parthasarathi, our Emperuman, stepped out of his gopura vasal to the delight of hundreds of devotees.  Hope and pray that this year too the purappadu of Sri Parthasarathi Perumal happens. !!



Here is a photo of Sri Parthasarathi Emperuman of last year’s Karthigai purappadu and some photos of Vaikasi masa pravesa purappadu of 14.5.2016. 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன் (ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்)
17.11.2021







1 comment: