To search this blog

Tuesday, November 23, 2021

Sri U Ve Koil Kandadai Vadhoola Annavilappan Kumara Ramanujacharya Swami !!!

இன்று ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு, நம் சம்பிரதாயத்துக்கு பேரிழப்பு.  இன்று மதியம் - ஸ்ரீ உ.வே.கோவில் கந்தாடை வாதுல அண்ணாவிலப்பன் அழகிய சிங்கர் என்கிற குமார ராமானுஜாச்சார்ய ஸ்வாமிகள் (வர்த்தமான முதலியாண்டான் ஸ்வாமி) திருநாடு அலங்கரித்தார் என்று கேள்விப்பட்டு மிகுந்த வருத்தத்தில் உள்ளோம்.  அனைவரது அபிமானத்துக்கும் உகந்த நம் ஸ்வாமி - பரம சௌலப்யர்,  பரம காருணிகர் - இளவயதில் திருநாடு அலங்கரித்தது பேரிடியாக பெரு வருத்தத்தை தந்துள்ளது. 


It is with shock and a sense of disbelief that Srivaishnavaites today received the sad news of  Acaryar - Sri U Ve Koil Kandadai Vadhoola Annavilappan Kumara Ramanujacharya Swami (Varthamana Sri Mudaliandan Swami) reaching the lotus feet of Emperuman.  

Sure you have travelled many a times on this road by-passing the town of Poonamallee, situated at a distance of 23 kilometres from Fort St George and 17 kilometres from Sriperumbudur on the Chennai-Bangalore highway.  The name "Poonamallee" is derived from "Poovirundavalli", meaning "the place where flowers are cultivated".  Much  nearer is another place of significance as the birth place of Acaryar -many may know as Pettai [there are some references as Nazarathpettai – changed for obvious reasons now !] 

In our Srivaishanava Sampradayam, Pontiffs carry tridandam signifying our philosophy - chit, achit and easwara.    Chithirayil Punarpusam ~ is  the  day of significance associated with Aandan considered as Trithandam of Swami Ramanujar.     

padhuke yathi rajasya kathayanthi yadhakh yaya |

thasya daasarathe: paadav Sirasa dhaarayaam yaham || 

Meaning: Yathiraja paduka (Swami Ramanujar's Lotus feet) is what he is known as. Hence we pay our respect to Daasarathi's (Mudaliandan) Lotus feet.  

எம்பெருமானாரின் த்ரிதண்டமாயும் அவரது திருவடியாயும் விளங்குகின்ற நம் தாசரதி (முதலியாண்டான் சுவாமி); எம்பெருமானாரின் (ஸ்ரீராமானுஜர்) ஸஹோதரியின் குமாரராக பச்சைவாரணப் பெருமாள் கோவில் என்னும் ஊரில் அவதரித்தவர்.    எதிராஜரான ஜகத்குரு இவரைத் திருதண்டமாக (முக்கோல் மதித்திருந்தார்.  இவரோ, ஜகதாசார்யரான சுவாமியின் (ஸ்ரீராமானுஜர் பாதுகங்களாகவே (திருவடி நிலைகள்)  தம்மை நினைத்திருந்தார்.  எம்பெருமானார் ஸன்யாஸ்ரமம் புகும்போது, "நமது முதலியாண்டானைத் தவிர அனைத்தையும் துறந்தோம்" என்று அருளியதாக இவரது புகழ் பேசப்படுகிறது.  இவரது  வரலாறு ஆசார்யரான ஸ்ரீராமானுஜருடைய வாழ்க்கையுடன் பிணைந்தே உள்ளது.   குருபரம்பராப்ரபாவம் தவிர, கோயிலொழுகு, வார்த்தாமாலை முதலிய நூல்களிலும் வாழ்க்கைக் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.  

ஸ்வாமி முதலியாண்டான்  உடையவர் திருவடிகளிலே கைங்கர்யத்தைச் செய்து,  வாதூல தேசிக பதம் நிர்வஹித்து ஸ்ரீரங்க ஸ்ரீயை அபிவிருத்தி செய்தவராய்க்கொண்டு 105 திருநக்ஷத்ரம் (கி.பி.1027 - 1132)  உடையவரின் பாதுகாஸ்தானியராக எழுந்தருளியிருந்தார்.   எம்பெருமானுடைய திருவடி ஸ்தானமாக இருந்து அவருக்கு அந்தரங்க கைங்கரியங்களை செய்தமையால் எம்பெருமானுடைய திருவடியை முதலியாண்டான் என்றே அழைப்பது மரபு. 





Continuing in his lineage and guiding us was  Sri U Ve Koil Kandadai Vadhoola Annavilappan Kumara Ramanujacharya Swami (Varthamana Sri Mudaliandan Swami) who attained acharyan thiruvadi this day.  Swami had been doing great kainkaryam at many divyadesams and more particularly at Singaperumalkovil, where Acaryar thirumaligai is located now. 

At this hour of grief, We pray our Emperuman to give strength to all to bear his passing away and to Kumara Bakthisarachaar, his thirukkumarar to have strength and guide us further in our sampradhayam. 

adiyen  Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
23.11.2021.

3 comments:

  1. 🙏🙏🙏We pray our Emperuman to give strength to all to bear his passing away.

    ReplyDelete
  2. Excellent homage offered. Nice writeup.

    ReplyDelete
  3. Excellent homage offered. Nice write up

    ReplyDelete