To search this blog

Thursday, November 18, 2021

Swami Nampillai Uthsavam 3 @ Thiruvallikkeni 2021

Swami Nampillai Uthsavam 3 @ Thiruvallikkeni 2021 

I have been posting on the uthsavam and Thiruvaimozhi goshti occurring at Sri Nampillai sannathi in Peyalwar koil Street, Thiruvallikkeni divyadesam.  17.11.2021 was day 3 of the Uthsavam.   Nampillai had savaripagai, a crown  Perumal has during kuthirai vahana purappadu !

 


ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின், அடிப்படையே குருபரம்பரை தான். நம் ஒவ்வொரு செயலும் மங்களம் பெறச் செய்வது, ஆசார்ய ஸம்பந்தம் மட்டுமே. ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யபரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது-  பெரிய பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார்,  நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, ஆளவந்தார், பெரிய நம்பி, இராமானுஜர், எம்பார், பட்டர், நஞ்ஜீயர், நம்பிள்ளை, வடக்குதிருவீதிப்பிள்ளை, பிள்ளைலோகாச்சார், திருவாய்மொழிப்பிள்ளை, சுவாமி மணவாளமாமுனிகள், ஈறாக முற்றுப்பெறுகிறது. நம் ஆசார்யர்களுக்கும், திருவரங்கத்து பெரியபெருமாளுக்கு கைங்கரியமும் இணைந்தே வந்துள்ளது - புனித காவேரிசூழ் திருவரங்கமே நம் சம்பிரதாயத்தின் ஆணிவேர்..       

 

Melukote  Thirunarayanapuram the holy place has added fame of Swami Ramanujar staying here for 12 years.  Besides the Seluva Narayanan Temple, Kalyani pushkarini and more – this is also  the birth place of Swami Namjeeyar.  Sri Nanjeeyar the one with unparalleled knowledge, one who was hailed by the well-read,  by the grace of his Acharyan Sri Parasara Battar – gave us the commentary fondly called ‘Onbathinarayippadi’ for the Thiruvaimozhi of Swami Nammalwar.  Here is something on the Acharyar Nanjeeyar.  You may read a post on him and avatharasthalam here : Acaryar Nancheeyar. 

We are celebrating Swami Nampillai .. ..  Nam Swami was born as “Varadhacharyar” Prabhva year, 4249 kali yugadi, in Karthigai  Month in Krithikai Nakshatram.   He lived a life of 105 years  – from  1147 AD to  1252AD.  Sri Nampillai, in the Acharya paramparai is known for his scholastic excellence.  In the Guru parampara lineage, he was the disciple of Sri Nanjeeyar and acharyar of Vadakku Thiruveethipillai. His commentary on Thiruvoimozhi known as Muppathu Aarayira(m)ppadi -  is considered as the best amongst the vyakyanams; considered equivalent to Thiruvoimozhi itself and  is celebrated as “Eedu” . 

 




நம்பூர் என்ற ஒரு சிறிய அழகிய கிராமத்திலே  வரதராஜன் என்னும் திருநாமத்தோடு திருவவதாரம் செய்த இவரே பிற்காலத்தில் நம்பிள்ளை என்று பிரசித்தர் ஆனார்.  இவரது பல பெயர்களில் முக்கியமானவை :  திருக்கலிக்கன்றிதாசர், லோகாசார்யர், என்றதிருநாமங்கள். கார்த்திகையில் கார்த்திகை திருநாளிலே  லோகாச்சாரியரான ஸ்வாமி நம்பிள்ளை  கலியனின் புனரவதாரராக அவதரித்தார்.  சிறப்பு வாய்ந்த நம்பிள்ளையின் பணிவு தனித்துவம் வாய்ந்தது. அவரது வாய்மொழியை கேட்க குவிந்த ஸ்ரீவைணவர்களின் குழு -  நம்பிள்ளை கோஷ்டியோ அல்லது நம்பெருமாள் கோஷ்டியோ என்று கண்டவர் வியக்கும் வண்ணம் நம்பிள்ளையின் காலக்ஷேபங்கள் அமைந்தனவாம்.

 பராசர பட்டருக்குப் பின் ஓராண் வழி ஆசார்யப் பரம்பரையில் வந்தவர்,  வேதாந்தி என்றும் அறியப்பட்ட நஞ்சீயர். இவருடைய இயற்பெயர் ஸ்ரீமாதவன், திருநாராயணபுரத்தில் அவதரித்தார்.  முதலில் அத்வைத  சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்ட இவரைத் திருத்தி ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்குக் கொண்டு வர எம்பெருமானார் ஆசைப்பட்டார்.  கூரத்தாழ்வானின் திருக்குமாரரன பராசர பட்டர் (ஓராண் வழி பரம்பரையில் எம்பெருமானார், எம்பார், அதன் பின் பராசர பட்டர்) திருநாராயணபுரத்திற்குச் சென்று திருநெடுந்தாண்டக அர்த்தத்தை மேற்கோள் காட்டி ஸ்ரீமாதவாசார்யாரை வாதத்தில் வென்று அவரை திருத்தி ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்குள் கொண்டு வந்தார்.  ஸ்ரீமாதவாசார்யர் கலங்கிய கண்களுடன் “ஸ்ரீரங்கராஜப் பெருமாளின் புத்திரரான நீர் காடு, மலை தாண்டி எம்மைக் கருணையுடன் ஆட்கொள்ள வந்தீரே” என்று உள்ளம் நெகிழ்ந்து, பராசர பட்டரின் சிஷ்யராக ஆனார்.  பராசர பட்டரும் ஆதுரத்துடன் அவரை ஏற்றுக் கொண்டார்.  இவரது அதி முக்கிய சீடர் தாம் இவ்விழாவின் நாயகன் நம்பிள்ளை.

 


நம்பிள்ளையின்    கார்த்திகை மாதம் கார்த்திகை நக்ஷத்ரத்தில் அவதரித்தவர்.  திருமங்கையாழ்வாரும் கார்த்திகை  மாதம் கார்த்திகை நக்ஷத்ரத்தில் அவதரித்தவர்.  திருமங்கையாழ்வாரே மீண்டும் நம்பிள்ளையாக வந்து அவதரித்தாரோ என்று சொல்லும்படி ஏற்றம் படைத்தவர்.   இவர் கலிகன்றி தாசர் என்று பிரசித்தி.   நஞ்சீயர் கோஷ்டியில் காலக்ஷேபத்தைக் கேட்டு அநுபவித்தவர்.  நஞ்சீயரின் ப்ரதான சிஷ்யராவார். 

இவர்தம் ஞானம் அபாரமானது.  சுவாமி நம்பிள்ளை  திருவரங்கம் பெரியகோவிலிலே  நான்கு கால் மண்டபத்திலே வருஷங்கள் நாட்களாக காலக்க்ஷேபம்  பண்ண பெருந்திரளான ஸ்ரீவைஷ்ணவர்கள் கேட்டு இன்புற்றனர்.  நம்பிள்ளையின் அற்புதமான காலக்ஷேபம் கேட்க பெரிய பெருமாளே  எழுந்து வந்ததாகவும் திருவிளக்கு பிச்சன் என்பவர் பெருமாளே இது விபவாவதாரம் இல்லை! தேவர் அர்ச்சாவதாரம் என தடுத்தாகவும் ஐதீகம்.

                       தமிழ் மற்றும் ஸமஸ்க்ருதத்தில் இருந்த ஆழ்ந்த ஞானத்தால், நம்பிள்ளை தன்னிடம் காலக்ஷேபம் கேட்க வருபவர்களை இன்பக் கடலில் ஆழ்த்தி விடுவார் . மேலும் நம்பிள்ளையினால் தான் திருவாய்மொழியும் மற்ற அருளிசெயல்களும் நன்கு பரவுவதில் புதிய உயரத்தை கண்டன. 6000 படி தவிர்த்த திருவாய்மொழிக்கான மற்ற நான்கு வ்யாக்யானங்கள் நம்பிள்ளையோடே தொடர்புடையவை ஆகும்.  

ஆழ்வார்கள் எம்பெருமானிடத்திலே ஆழ்ந்தது போல, ஆசார்யர்கள், எம்பெருமான், அருளிச்செயல், ஓராண்வழி ஆசார்யர்கள், அவர்தம் வார்த்தைகளில் மிக்க ஈடுபாடு கொண்டவர்கள்.  ஒரு சமயம் - நம்பிள்ளையின் பால் ஆர்வம் கொண்ட ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் அவரிடம், "உம்முடைய திருமேனி (சரீரம்) இளைத்திருக்கிறதே?"  என்று  கேட்க, அதற்கு நம்பிள்ளை, "ஒன்று தேய ஒன்று வளர்கிறது" என்று கூறினாராம்.   அதாவது, "ஞானம், பக்தி, வைராக்கியம் ஆகியவை வளர, பகவானை நினைந்து, நைந்து, உள் கரைந்து உருகதலால் உடல் தேயும்" என்று பொருள். 

திருவல்லிக்கேணிக்கும் நம்பிள்ளைக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுந்து இருந்தால் - சில நூற்றாண்டுகள் பின்னோக்கி பயணிக்க வேண்டும்.  முன்னோர் தம் சொற்களை, ஸ்ரீவைணவ உலகம், ஆசார்யர் வார்த்தைகளாலும், ஓலை சுவடிகளிலுமே கற்று வந்தனர்.  ஆசையுடையோர் எல்லாம் பகவத்விஷயத்தை அனுபவிக்க ஹேதுவாக  1874ல் சரஸ்வதி பண்டாரம் எனும் குழுமம் அமைக்கப்பெறாது.  திரு மண்டையம் யோகி பார்த்தசாரதி அய்யங்கார் சுவாமி அந்நாளில் அதன் காரியதரிசி.  மிகுந்த சிரமங்களுக்கு இடையே ஓலை சுவடிகளை சேகரித்து, தற்போதைய கோமுட்டி பங்களா எனும் இவ்விடத்தில் ஒரு அச்சுக்கூடத்தை அமைத்து, வித்துவான்களையும் - அச்சுக்கலைஞர்களையும் இங்கே தங்க ஏற்பாடுகள் பண்ணி நம் சம்பிரதாயத்தை தழைக்க வைத்தார் ஸ்ரீ யோகி பார்த்தசாரதி சுவாமி.  நம் முனைவர் மண்டயம் உ.வே.  வேங்கடகிருஷ்ணன் சுவாமி இவரது மரபினர்.  சமீபத்தில், இந்த சன்னதியை புதிப்பித்து வருஷந்தோறும் நம்பிள்ளை உத்சவம் சிறப்புற நடத்தி வருகின்றார். 

நமது சம்பிரதாய நூல்கள் பதிப்பு செய்யும் அச்சு கலைக்கூடத்திற்குள் - ஞானியான சுவாமி நம்பிள்ளைக்கு சந்நிதி நூற்றாண்டுகள் முன்பே அமையப்பெற்றது.  நம்பிள்ளை எழுந்தருள அவர் ஆராதித்த ஸ்ரீரங்கநாதனும் எழுந்தருள, சென்றாண்டு மிக அழகான ஸ்ரீரங்கநாயகி தாயாரும் எழுந்தருளினார்.   நேற்று திருவாய்மொழி ஐந்தாம் மற்றும் ஆறாம் பத்து - திருவாய்மொழி பாசுரங்கள் சேவிக்கப்பெற்று, "உலகமுண்ட பெருவாயா" பாசுரத்துடன் சாற்றுமுறை.  நேற்று கோஷ்டியில் - "ஆராவமுதே" பதிகம் சேவிப்பதை செவி மடுக்கலாம். 

சாற்றுமுறை சமயத்தில் பெருமழை பெய்ந்தது.  திரு கேடீ ஜகந்நாதன் தம்பதியினர் புல்லாங்குழலோசை செவிக்கு இனிமையாக அமைந்தது. : 

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம். 

 

adiyen Srinivasa dhasan
Mamandur Srinivasan Sampathkumar
18.11,2021.  

1 comment:

  1. Very nice. Super photos. புல்லாங்குழல் இசையும் அருமை. நேற்று ஸ்ரீ ரங்கநாதன் ஸ்வாமியின் நம்பிள்ளை பற்றிய மிகவும் சிறந்த உபன்னியாசம் கேட்கும் பாக்கியம் பெற்றேன். பல முக்கியமான விஷயங்கள் கட்டுரையிலும் காண பெற்றேன் very nice

    ReplyDelete