To search this blog

Monday, May 17, 2021

Corona, ageing or any problem ? திருவேங்கடமுடையானன்றோ ப்ராப்யம்,

ஓய்வை விளைவிக்கின்ற கிழத்தனமென்ன, வாழ்க்கையில் கஷ்டங்கள் என்ன ? - மரணம் என்ன ! -  மனித வாழ்க்கையின் அவலங்களை கேள்விப்பட்டு இருக்கிறோம், கண்ணுற்று இருக்கிறோம்.  மனித வாழ்க்கையே நமக்கு இது நேராது என்ற நம்பிக்கையில் காலம் கழிப்பது தானே ! ~ எனினும் 'கொரோனா நோய்" போன்ற வியாதிகள் பரவும்போது - மனம் பயந்து என்ன செய்வது என்பது அறியாமல் தளர்வது மனித இயல்பே அல்லவா !மூப்பு என்றால் - வயதான நிலை, வயோதிகம், முதுமை.  பிறக்கும் ஒவ்வொருக்கும் 365 நாட்கள் செல்ல, ஓராண்டு அதிகமாகும். வருஷங்கள் செல்ல, செல்ல, நாம் வயோதிகர் ஆகிறோம்.  மூப்படைவதாவது தவிர்க்க இயலாதது.   Ageing process is irreversible ! உயிர்மங்களின் இழப்பு அல்லது மாற்றிவைக்க இயலாத பகுதிகளின் இழப்பு முதற் காரணமாகும். மூளை உயிர்மங்கள் ஆயிரக்கணக்கான நூற்றுத் தொகுதிகள் ஐயத்திற்கிட மின்றிச் செத்துவிடுகின்றன. மனித வாழ்வில் குழந்தைப் பருவத்திற்குப் பிறகு இந்த உயிர்மங்கள் மீண்டும் உற்பத்தி செய்யப்பட முடியாது.  பிணி, திரை, மூப்பு இல்லாத வாழ்க்கை வேண்டும் என்பதே நீண்ட நெடுங்காலமாக மனித குலத்தின் ஆசையாக உள்ளது. அதற்கான வழிமுறைகளைத் தேடும் முயற்சிகளும் காலங் காலமாக நடைபெற்று வருகின்றன. நவீன மருத்துவ விஞ்ஞானமும் இதற்கான விடையை முனைந்து தேடி வருகிறது; இதுவரையில் வெற்றி கிடைக்கவில்லை.ஸ்ரீவைணவம் ஒரு எளிய மார்க்கம் - நமக்கு எல்லா பிணிகளுக்கு அருமருந்து ஸ்ரீமந்நாராயணன் தானே ! -  மூப்பு, பிணி வியாதி முதலிய கருமபலன்களைத் தொலைத்தருள்வதற்காகத் திருமலையிலே எழுந்தருளி நிற்கிற அற்புத திருவேங்கடமுடையவன் ஏழுமலையான் திருப்பதி வெங்கட்ரமணனின் திருவடித் தாமரைகளை நெஞ்சினால் நினைத்து வாயினால் துதிக்குமவர்களுக்கு ஜன்மஜென்ம  வினைகள் அனைத்தும் தொலைந்து ஓடிடும் என்பது திண்ணம். 

ஸ்வாமி நம்மாழ்வாரின் அற்புத திருவாய்மொழி பாசுரம் ஒன்று இங்கே :

ஓயு மூப்புப் பிறப்பிறப்புப் பிணி,* வீயுமாறு  செய்வான்  திருவேங்கடத்

தாயன், நாண்மலராம்  அடித் தாமரை, * வாயுள்ளும் மனத் துள்ளும்  வைப்பார்கட்கே. 

ஓய்வை மறதியை இயலாமையை  விளைவிக்கின்ற கிழந்தனமென்ன ?  துயர்தரும் பிறவியென்ன ?? - உலகோர் மனம் வருந்தும் மரணமென்ன ?!?  -  திருமலையில் வாழ்கிற ஸ்ரீகிருஷ்ண பகவானது  அப்போதலர்ந்த செந்தாமரைப்பூப்போன்ற திருவடிகளை  வாக்கினுள்ளும்,  நெஞ்சினுள்ளும்  வைத்துக் கொள்பவர்களுக்கு - பிணி, மூப்பு, வியாதி  ஆகிய எல்லா கஷ்டங்களையும் கண்காணாது தொலையும் வகை செய்தருள்வன் அந்த திருமலை திருப்பதியில்  நின்று கொண்டு நமக்கு சேவைசாதிக்கும் திருப்பதி கோவிந்தன்..

திருவேங்கடமுடையானன்றோ ப்ராப்யம், திருமலையே ப்ராப்யம்  செடிபோலே செழித்த பாபங்களைத் தீர்க்கும் மருந்தானவன்: திருவேங்கடவன்.  The sacred and most reverred temple of Sri Venkateswara is located on the seventh peak – Venkatachala hill of Tirumala.  The Lord stands tall as bestower of all boons and lakhs of people reach here to have a glimpse – a few seconds darshan of the Lord.  This beautiful temple in its present form owes a lot to the works of the greatest Vaishnava Acharya – Sri Ramanujar.

Look and behold, this is abode of Hari- the place where He resides . sang Tallapaka Annamacharya [popularly Annamayya], the 15th century musician who composed  many keerthanas on Lord Venkateswara. Another popular song of his  :

కొండలలో నెలకొన్న కోనేటి రాయడు వాడు
కొండలంత వరములు గుప్పెడు వాడు

Komdalalo nelakonna koneti rayadu vadu !
Komdalamta varamulu guppeduvadu ||

Annamayya extolls the  Lord at  Ezhumalai  - He is Lord of the Koneru(the holy  pond atop the Hill); who  permanently stays at the Hills only to grant boons; his benevolence even bigger than the mountain  - with the divine swami pushkarini the entire place itself got its name as ‘koneru’    "Nelakonna" is One who stands here permanently for the purpose of granting boons to His devotees.   Annamayya  brings forth the magnanimity of the Lord when it comes to taking care of His devotees.

Let us sincerely pray to the Lord of Seven Hills for our time – that significant day to have His darshan at Holy Thirumala.  There have been instances where we have walked, waited and prayed patiently for hours and got a glimpse for few seconds – let us pray for another darshan – now even if we are to get that split second darshan, we would relish that more ! – waiting for that magical moment of another darshan of Thiruvengadamudaiyan and hours of darshan of our own Sri Parthasarathi Emperuman at Thiruvallikkeni.

Telegu tinseldom is to be appreciated – from the days of NTR   who played Krishna in 17 films,  including some landmark films such as Sri Krishnarjuna Yudham (1962), the Tamil film Karnan (1964) and Daana Veera Soora Karna (1977). He was also known for his portrayal of Lord Rama, essaying that role in films such as Lava Kusha (1963) and Shri Ramanjaneya Yuddham (1974) to name a few.  Nagarjuna too is to be appreciated for doing many such roles with religious fervor.  He donned the title role of Annamayya  released in  1997    directed by K. Raghavendra Rao – with mellifluous  music composed by M. M. Keeravani. The film was recorded as a Blockbuster at the box office. It won eight Nandi Awards, three Filmfare Awards and two National Film Awards.  Here is a short video of the song. 


With the grace of Emperuman Tirupathi Venkata Ramana – Corona too shall stop and all people in the globe be relieved of the fears of Covid 19 and return to have a normal carefree life of happiness with their family, travelling places and being with their near and dear.  Let us pray that  such a day is bestowed sooner to us.  Here are some photos of holy Thirumala and purappadu of Sri Thiruvengadamudaiyan taken on 8th Mar 2008. !

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
17.5.2021.


1 comment: