The Ascension of Lord Krishna! ~ Sri Bhalka Tirth
ஸ்ரீகோதைப்பிராட்டி எம்பெருமானிடத்திலே பக்தி பரவசம் மிகுகையில் உரைக்கும்
வார்த்தைகள் - 'கண்ணனென்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக்
கிடப்பேனை' - கண்ணன் எனும் அற்புத அவதார புருஷனை
நினைத்து அக்கண்ணபிரானின் காலத்தில் தாமும் வாழ்வதாக நினைத்து சுகப்படும் பரவச நிலை. மாயக்கண்ணன் ஜனித்தது மதுராவில்; வளர்ந்தது கோகுலம்,
விருந்தாவனம், கோவர்தனம் போன்ற இடங்களில்.
திருவல்லிக்கேணி திவ்யதேசமும் இதில் அடக்கமே ! ~ இங்கே ப்ருந்தாரண்ய க்ஷேத்திரத்திலே
மாடுகள் மேய்த்த மாயக்கண்ணன் அம்பு பட்ட காயங்களுடன் ஸ்ரீபார்த்தசாரதியாய் சேவை சாதிக்கிறான்.
பரம்பொருள் எம்பெருமான் ஸ்ரீகிருஷ்ணன் சிறுவயது ஜனித்தது முதல் இடர்ப்பாடுகள்தானே
! .. ஜனித்தது சிறையில், உடனேயே கொட்டும் மழையில்
ஆற்றை தாண்டியது, வளரும் பருவத்தில் - தேனுகன்,
பிலம்பன், சுமாலி, கேசி, தேனுகன்,
பூதனை, காளியன், சகாடாசுரன் என அரக்கர்களுடன்
போராட்டம், என .. .. கடினமான சூழ்நிலைகள் - பாரதப்போரில் போராடாவிடினும் பீஷ்மர் போன்றோரின்,
ஏனைய மஹாரதர்களின் அம்புகளை தன உடலிலும் திருமுகத்திலும் தாங்கியவன் .. .. அத்தகைய
எம்பெருமான் யது குலம் அழிந்து அவரும் பரமபதம் ஏக காரணமாய் இருந்தது ஜரா என்ற வேடன்
எய்த அம்பு. அது நடந்த இடம் இன்றைய வெராவல்
- குஜராத்தில் உள்ளது.
The ultimate Sriman Narayana descended on this earthly World to protect dharma, protect devotees and eliminate evils. God descends in this world by virtue of His Yogmaya energy and reveals His divine pastimes, His divine abode, His divine bliss and love. However, the same Yogmaya power keeps His divinity veiled from us. We are unable to feel His presence, although He is seated in our hearts. Even in the present, if we are fortunate enough to see the Lord in His personal-form, we cannot recognize Him. Until we are eligible for His divine vision, the Yogmaya keeps God’s divine form concealed from us. And only by God’s grace, the Yogmaya bestows upon us the divine vision that allows us to recognize and see God. So his leaving this World is not to be seen as death that mortals have and know of ! .. .. it is ascension that of Emperuman no longer seen by lesser mortals around him of His time too !!
Think of Lord Krishna
- one is instantly reminded of Sri Parthasarathi, Thiruvallikkeni
divyadesam, great Krishna temples like
Guruvayur, Udupi, divyadesams -
Kabisthalam, Thirukkannamangai, Thirukkannapuram, His Mathura, the places He grew up – Gokulam,
Govardhanagiri, Vrindavan .. .. and Dwaraka !
Dwarka is a very ancient place, associated with Lord Krishna – the city
is now in Devbhoomi Dwarka district in the state of Gujarat, located on the
western shore of the Okhamandal Peninsula on the right bank of the Gomti
River.
Sad history is Somnath was
raided and demolished many times by
several Muslim invaders, more specifically Muhammad of Gajini – the
temple as its stands now was
reconstructed in Chaulukya style of Hindu temple architecture and completed in
May 1951. .. .. and nearer Veraval are the places where Lord Krishna
accepted the arrow of Jara and the place where His ascension from this world
occurred !
மஹாபாரதம் ஒரு அற்புத காவியம். பரம்பொருள் பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் இதில் ஒரு பாத்திரம். அவரை கண்டு, அவருடன் இருந்து, உறவாடி மக்கள் மகிழ்ந்து அவரையும் ஒரு மானுடப்பிறவியாகவே கருதினர். எம்பெருமான் உத்தவருக்கு அருளிச்செய்த வார்த்தைகள் : "உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை. அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம் மட்டுமே, நான் சாட்சி பூதமாக உங்கள் அருகில் நிற்பதை நீங்கள் மனப்பூர்வமாக உண்மையில் உணரும் போது மட்டும் தான் உங்களால் தவறுகளையோ, தீவினை செயல்களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்து விடும் போதுதான், எனக்குத் தெரியாமல் இது அது என ஏதாவது தீவினையை நான் உங்களுள் இருப்பதை மறைத்து எதையாவது செய்து விடலாம் என்று எண்ணி நீங்களாகவே முடிவெடுத்து செய்கிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் பெரும்பாலும் தவறாக நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம்.
ஜரா என்ற வேடன் எம்பெருமான் படுத்திருக்கும் போது அவரது திருப்பாதங்களை
மானின் முகம் என்று நினைத்து எய்த அம்பு காலில் தைத்தது கடைசியாக நடந்த சம்பவம் - அதன்
பிறகு யது குலமும் அழிந்தது, பகவான் ஸ்ரீகிருஷ்ணனும் பூவுலகில் இருந்து மறைந்தார்.
!!
கிருஷ்ணரின்
மறைவு என்பது மானுடர்கள் மரணம் அல்ல ! கிருஷ்ணர்
என்பவர் ஒரு சாதாரண மனிதனோ, பல்வேறு கடவுள்களில் ஒருவரோ அல்ல. அவர் எல்லா காரணங்களுக்கும்
காரணமான முழுமுதற் கடவுள், ஆதி அந்தம் அற்ற இறைவன்; மேலும், தனக்கு நிகராகவோ தன்னை
விட உயர்ந்தவராகவோ யாரும் இல்லாத பெருமாள். இந்த உண்மை, கிருஷ்ணரின் மறைவினை எடுத்துரைக்கும்
இரண்டு சாஸ்திரங்களிலும் (மஹாபாரதம், ஸ்ரீமத் பாகவதம்) தெளிவாக உரைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணரின் அனைத்து செயல்களும் தெய்வீகமானவை என்றும், அவையனைத்தும் அவரது சொந்த விருப்பத்தின்படியே
நிகழ்கின்றன என்றும் பகவத் கீதை அறுதியிட்டு
உரைக்கின்றது. அவரது பக்தர்களுக்கு இதில் எள்ளளவும்
மனக்கிலேசம் இல்லை.
नाहं
प्रकाश: सर्वस्य योगमायासमावृत: |
मूढोऽयं
नाभिजानाति लोको मामजमव्ययम् || 25||
nāhaṁ
prakāśhaḥ sarvasya
yoga-māyā-samāvṛitaḥ
mūḍho
’yaṁ
nābhijānāti loko mām ajam avyayam
I am not manifest to
everyone, being veiled by my divine Yogmaya energy. Hence, those without
knowledge do not know that I am without birth and changeless.
சிற்றறிவுடையோனுக்கும் அறிவிலிகளுக்கும் - நான் ஒருபோதும் தோன்றுவதில்லை. யோக மாயையால் நன்றாக மறைக்கப்பட்டுள்ள நான் எல்லோருக்கும் தெரிவதில்லை. நான் பிறப்பற்றவன், நான் அழிவற்றவன் என்பதை அறிவற்ற இந்த உலகம் தெரிந்துகொள்வது கடினமே !
Bhalka Tirtha (Bhalka
Pilgrimage) is a holy place located in
the Veraval in Saurashtra on the western coast of Gujarat. This is the place where Krishna was shot by an arrow released a hunter named Jara, an act referred to in the Puranas as Shri
Krishna Nijdham Prasthan Leela.
Emperuman Supreme Bhagwan Sree Krishna is Supreme, He who gave us the
holy Bhagavath Geetha. In Srimad Bhagwad
Gita, Krishna says repeatedly that He is God Himself, the source of everything.
Arjuna, to whom Krishna is speaking, accepts Krishna's words as true, adding
that the greatest spiritual authorities of that time also confirm that Krishna
is God. The personhood of Krishna is not
an idea invented by human beings naively creating a God in their own image. Nor
is personhood a limiting concept when applied to God, or the Absolute Truth. As
the source of everything, Krishna naturally has His own personal identity. He is the Supreme defined in Vedas, as
infinite, omnipresent and all powerful.
Looking at a mountain from a distance, we can make out only its size and
shape. This is compared to comprehending God only as Brahman, His impersonal
energy, which emanates from Him just as light shines out from its source.
In Srimad Bhagavatham
Sukha explained – the glorious deeds of
the men born in the Yadu dynasty cannot be summed up, oh King, not even in a
ten thousand years. I heard that there were thirty-eight million eight-hundred
thousand teachers for the children of the Yadu family. Who can keep count of
the Yâdavas when Ugrasena alone among its great personalities was assisted by
ten thousand times ten thousand, times hundreds of thousands of men ? Krishna was
to them, on account of His mastery, the authority of Lord Hari because
of which all the Yâdavas who were His faithful followers prospered. When Krishna
took His birth among the Yadus He outshone the pilgrimage site of the heavenly
river [the Ganges] that washes from His feet. .. .. .. and by Lord Krishna’s
own designs, He too left this earth and the dynasty of Yadus was wiped out
!!
'The Master of the goddess
of fortune resided happily in Dvârakâ. His city, opulent in every respect, was
populated by the most prominent Vrishnis and their excellently, in new apparel
dressed women, who in the beauty of their youth shone like lightening when they
on the rooftops were playing with balls and other toys. Its roads were always
crowded with well ornamented and honored elephants dripping with mada, with
foot soldiers and horses and chariots shining with gold. The city was richly
endowed with gardens and parks with rows of flowering trees where from all
sides the sounds of the bees and the birds were heard that frequented them.
'After Lord Krishna
together with Balarâma and surrounded by the Yadus had realized the elimination
of the Daityas and had reduced the burden of the earth, very soon a conflict
arose [between the Kauravas and the Pândavas].
They [the Pândavas] who time and again were angered by the duplicitous
gambling, the insults, the grabbing by the hair [of Draupadî] and the other transgressions
of their enemies [their nephews, the Kauravas], constituted the immediate
cause for the Supreme Lord to [further]
relieve the earth of her burden and [also] kill all the kings who assembled [at
Kurukshetra] to take opposite sides. And
after the Yadus being protected by His arms had eliminated the kings who with
their royal armies had burdened the earth, the Unfathomable Lord thought to
Himself: 'One may say that the burden of the earth has been eliminated, but I
do not think the load is gone. The intolerable burden [alas] remains with the
Yadu dynasty itself. They who in every
respect sought their refuge in Me, were never frustrated in the exercise of
their power. Since they have no defeat to fear from any other side I will
arrange a quarrel within the Yadu dynasty, just like fire in a bamboo-grove [is
generated by the wind through mutual friction].
The son of Vyâsa said: 'Embodied in a form that was the amalgamation of all things beautiful, on earth performing the most auspicious activities and to His full satisfaction enjoying His life as He resided in His abode [of Dvârakâ], He, so greatly famed, [now] wanted to destroy His dynasty. That was the only thing left to do for Him. After in the house of the lord of the Yadus [Vasudeva] having performed most favorable rituals to bestow piety and take away the impurities of Kali-yuga, the sages Vis'vâmitra, Asita, Kanva, Durvâsâ, Bhrigu, Angirâ, Kas'yapa, Vâmadeva, Atri, Vasishthha, Nârada and others, were by The Soul of Time [Lord Krishna] sent away to go to Pindâraka [a pilgrimage site]. Having arrived there, they were approached by young boys of the Yadu dynasty in a game in which Sâmba the son of Jâmbavatî had dressed up in woman's clothes. Feigning humility they took hold of their feet and impudently asked: 'This black-eyed pregnant woman would like to ask you something, oh men of learning, but she is too embarrassed to do it herself. Can you tell whether she who is about to give birth and desires a son, will get one?' .. .. and thus were sowed the seeds of elimination of Yadu dynasty.
Oh
Lotus-eyed Lord of the Universe, the swanlike [devotees] delight in taking to the
shelter of Your lotus feet that are the source of all ecstasy, while they who
take pride in the results of their yoga, do not [take shelter] and are defeated
by Your material energy. Knowing the benefit You offer oh Supreme Soul,
Bestower of All Perfections and dearest Lord to those seeking shelter, who
would reject You or ever be devoted to anything else and forget [about You in
exchange] for some opulence?
Bhalka
Tirtha located in the Veraval in Saurashtra on the western coast of
Gujarat, is the place where Krishna received
gracefully on his foot, an arrow shot by
a hunter named Jara, who was forgiven for his unknowing mistake. This
sacred teerth is located 5 km on Prabhas Veraval highway. The arrow of the
poacher named Jara at this spot hit Bhagvan Shree Krishna. Bhagvan Shree
Krishna was resting in meditation pose under a Peepal tree when the poacher misread the foot of
Bhagvan Shree Krishna as a deer and hit from a distance.
The war at Kurukshetra
wiped out Duryodhana and Gauravas – Gandhari was so upset that Lord Krishna did
not prevent the war and cursed that His Yadhu dynasty too shall perish. According to our Puranas, Lord Krishna’s
ascension marked the end of Dwarapa yuga and the start of Kali Yuga.
எம்பெருமான் ஸ்ரீகிருஷ்ணன் நம்மிடையே இப்பூவுலகில் பிறந்து, வளர்ந்து உணர்த்தியது தன்னை "சரணாகதி" அடைபவனுக்கு எந்தத் துன்பமும் இல்லை என்பதுதான். இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்தவன். ஆபத்பாந்தவனாக, ஹிருதயகமலவாசனாக ஒவ்வொரு பக்தனது உள்ளத்தினுள்ளும் உறைகின்றார். நாம் வாழும் காலத்தில் பிறர்க்கு எந்த தீங்கும் இழைக்காமல் எம்பெருமானுக்கும் அவனடியார்களுக்கும் கைங்கர்யங்கள் செய்ய வேண்டும். எம்பெருமானது அடியார்களை என்றும் எக்காரணத்தாலும் குறை சொல்லாத மனப்பாங்கை பகவான் ஸ்ரீகிருஷ்ணன் நமக்கு அருள பிரார்த்திக்கிறேன். அவனையே வணங்கி கொரோனா போன்ற தீவினைகள் மடிய மனமுருகி பிரார்த்திக்கின்றேன்.
Here are some photos of Bhalka tirtha at Veraval taken by me in Dec 2019.
adiyen Srinivasa
dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
19.5.2021.
very interesting - provides so many details for us
ReplyDeleteYes... கண்ணனின் சரிதம் எத்தனை முறை படித்தாலும் ரசிக்கவே செய்கிறது. மிகவும் சிறப்பாக உள்ளது. வழக்கம் போலவே புகை படங்களும் மிகவும் சிறப்பாக உள்ளன. Very nice.
ReplyDeleteGood day today
ReplyDelete