The Emblem of Sikkim, was designed in 1877 by Robert Taylor in
European style and previously the coat of arms during the latter period of the
Sikkimese monarchy. The central shield, supported by European dragons, consists
of a Buddhist khorlo prayer wheel with the gankyil as the central element.
Above is a helmet more in line with European armorial bearings, and atop that
is the right-turning conch, (வலம்புரிச் சங்கு).
சிலப்பதிகாரத்தில் கோவலன் திருமணமான புதிதில் கண்ணகியை தீராக்காதலின் திருமுகம் நோக்கி - "மாசறு பொன்னே வலம்புரி முத்தே! காசறு விரையே கரும்பே! தேனே! அரும்பெறற் பாவாய்! ஆருயிர் மருந்தே! பெருங்குடி வாணிகன் பெருமட மகளே! மலையிடைப் பிறவா மணியே " - என புகழ்ந்தானாம். வலம்புரிச் சங்கு (Dakshinavarti Shankh) என்பது சங்குகளில் ஒரு வகை. வலம்புரிச் சங்குகள் இடம்புரிச் சங்கு போலன்றி மிக அரிதாகக் கிடைப்பவை. இவை மிகவும் புனிதமானவை, வளத்தையும், நலத்தையும் தர வல்லன. இச்சங்கு திருவிதாங்கூர் கொடி, கேரள அரசு சின்னம், சிக்கிம் அரசு சின்னம் போன்றவற்றில் இடம்பெற்றுள்ளது.
சிந்து நாட்டு அரசன், கௌரவர்களின் தங்கை துச்சலையின் கணவன் - ஜெயத்ரதன் மிக்க வீரமானவன். இவனது தந்தை விருத்தக்ஷத்ரன் அவனக் காக்க வரம் பெற்றிருந்தான். அபிமன்யு சக்கர வியூகத்தை உடைத்து உள் நுழைந்து, எதிரிகளை பந்தாடிய போது கௌரவர் பக்கம் உள்ள அனைத்து வீரர்களும் சிறுவனிடம் யுத்த தர்மங்களை கடந்து தாக்குகின்றனர். அபிமன்யுவைப் பின் தொடர்ந்த நான்கு பாண்டவர்களையும் ஜெயத்ரதன் முன்னேற விடாமல் தடுத்து விடுகிறான். கடும் போராட்டத்துக்குப் பிறகு, அபிமன்யு வஞ்சகமாக வீழ்த்திக் கொல்லப்படுகிறான். அப்போரையும் தர்மமற்ற முறையில் அவன் கொல்லப்பட்டதையும் கேட்டு வெகுண்ட அருச்சுனன் அடுத்த நாள் சூரியன் மறைவதற்குள் ஜயத்ரதனை கொல்வதாகவும் அவ்வாறு இயலாவிடில் தீப்புகுவதாகவும் சபதம் செய்கிறான்.
ஜயத்திரதனை துரோணர், கர்ணன் உள்ளிட்ட அனைவரும் காப்பாற்ற முயற்சிக்கின்றனர். கதிரவன் மறையும் நேரம் நெருங்கியும் ஜயத்திரதனைக் காணாது பாண்டவர்கள் கலக்கமடைகின்றனர்.அப்போது கிருஷ்ணர் தனது சுதர்சன சக்கரத்தால் சூரியனைத் தற்காலிகமாக மறைக்க ஜயத்திரதன் வெற்றிக்களிப்புடன் வெளிப்படுகிறான். கிருஷ்ணர் சக்கரத்தை விலக்கி கொள்ள பகல்பொழுது மீள்கிறது. சவ்யசாசி அர்ஜுனன் விட்ட அம்பு ஜெயத்திரதன் தலையை கவ்வி தன்னுடன் மேலே எடுத்து செல்கிறது. எல்லாம் வல்ல கண்ணன் இல்லாமல் அர்ஜுனனின் சபதம் தோற்றிருக்கும்.
பொய்கையார் ~ ஸ்ரீமன் நாராயணனிடத்தில் பக்தி
குறைந்தவர்களை ஏழைகாள் என விளித்து கூறுகிறார் இந்த ஜெயத்ரதன் பிரபாவத்தையே பொய்கை ஆழ்வாரும்
:
மயங்க
வலம்புரி வாய்வைத்து, வானத்து
இயங்கும்
எறிகதிரோன் தன்னை, - முயங்கமருள்
தேராழியால் மறைத்தது
என் ? நீ திருமாலே,
போராழிக்
கையால் பொருது?
என வினவுகிறார் ?
எம்பெருமானே ! திருமகள் கேள்வனே ! லஷ்மீநாதனே!, நீ எண்ணிறந்த மன்னர்கள் நெருங்கிக் கிடந்த பாரதப் போர்க்க்களத்திலே, எதிரிகள் அஞ்சி அறிவு கலங்கும்படியாக ஸ்ரீபாஞ்சஜந்யம் எனும் திருவாழி வாய் வைத்து, தனது திருப்பவளத்திலே வைத்து ஊதி, அந்த சங்கத்தை ஏந்தின கையாலே, கவுரவ போர் தளபதிகளான பீஷ்மர் முதலானவர்களைத் துரத்தி, ஆகாயத்தில் அனுதினமும் ஸஞ்சரித்துக் கொண்டேயிருக்கிற ஸூர்யனை உனது மஹாபலம் பொருந்திய சக்கராயுதத்தினால் மறைத்தது எதுக்காக? என வினவுகிறார்.
இப்படி எம்பெருமான்
பாண்டவர்களுக்கு, முக்கியமாக அர்ஜுனன் தனது சபதத்தை நிறைவேற்ற உதவி, அவர்களை காப்பாற்றி
அருளினார். இவ்வாறு அகிலத்தை காக்கும் சர்வரக்ஷகனான எம்பெருமானின் திருவடி
சேர்ந்து உய்வோமாக !
Let us pray to Emperuman holding ‘Sankham and Chakram’ – Sri Parthasarathi Emperuman at Thiruvallikkeni for immediate containment and total eradication of the dreaded Corona sooner. Here are some photos of Sri Parthasarathi Emperuman from theppothsava purappadu in the morning of 15.3.2021 and a couple of photos where we can have the darshan of ‘the powerful Chakra (Thiruvazhi) and beautiful Shanka (Thirupanchajanyam) also.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
12.5.2021.
நன்றி : ஆழ்வார்களின் நாலாயிர திவ்யப்ரபந்தமும், நமது ஆச்சார்யர்களும், திராவிட வேதா எனும் அற்புத அருட்கிடங்கின் உரையும்
Very nice
ReplyDelete