To search this blog

Sunday, October 18, 2020

கைத்தலம் நோவாமே அம்புலீ கடிதோடி வா. `Moon's attraction .. Chandra Prabhai

It took 400,000 Nasa employees and contractors to put Neil Armstrong and Buzz Aldrin on the moon in 1969 – but only one man to spread the idea that it was all a hoax.  It began as “a hunch, an intuition”, before turning into “a true conviction” – that the US lacked the technical prowess to make it to the moon (or, at least, to the moon and back).   In 1976, a campaigner published a pamphlet called We Never Went to the Moon.. .. .. for centuries Moon has attracted people .. ..


The Moon is Earth’s only natural satellite and the fifth largest moon in the solar system.   Though could be seen with naked eye, the  Moon’s distance from Earth is about 240,000 miles (385,000km). The brightest and largest object in our night sky, the Moon makes Earth a more livable planet by moderating our home planet's wobble on its axis, leading to a relatively stable climate. It also causes tides, creating a rhythm that has guided humans for thousands of years.  Well, moon is not alone ! ~ it in fact is the fifth largest of the 190+ moons orbiting planets in our solar system.  It was called "the Moon" because people didn't know other moons existed until Galileo Galilei discovered four moons orbiting Jupiter in 1610.



சந்திரன் குளிர்ச்சியானவன்; சந்திரனுக்கு அம்புலி, வெண்மதி,  பிறை,   கலாநிதி,    நிசாகரன், மதி,   சுதாகரன்,  என பெயர்கள் உண்டு. முழுமதி மிகவும் சந்தோஷத்தை தர வல்லது.  நிலவை  நோக்கி  கைநீட்டி, தன் குழந்தையுடன் விளையாட வருமாறு அம்புலியை அழைக்கும் பருவம் - அம்புலிப்பருவம். புவியிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிவதாலும் முறைதவறா பிறை சுழற்சியாலும், தொன்மைக்காலத்திலிருந்தே மனித  சமுகத்தின் பண்பாட்டுக் கூறுகளில்,   குளிர்ச்சியான சந்திரன்  மிகுந்த தாக்கமேற்படுத்தி உள்ளது.  பல கவிஞர்கள் 'நிலாவே வா'  என பாட்டு படித்தாலும்   "நிலா' என்பது சந்திரனிலிருந்து கிடைக்கப்பெறும் ஒளியின் பெயரே அன்றி வானில் வட்ட வடிவமாகத் தெரிவது அல்ல எனலாம்.   சூரியனின் ஒளியைப் "பகலொளி' என்றும், சந்திரனிலிருந்து வரும் ஒளியை "நிலவொளி' என்றும் சங்க பாடல்களில் கட்டப்பட்டுள்ளது.  நாலடியார்  பாடலில்,  "அங்கண் விசும்பின் அகல்நிலாப்பாரிக்கும்/திங்களும் சான்றோரும் ஒப்பர்மன்'  எனுமிடத்தில் . "இடமகன்ற அழகிய வானின்கண் மிகுதியாக நிலாவினை (ஒளியினை) தோற்றுவிக்கும் சந்திரனும் சான்றோரும் ஒப்பர்' என்பது பொருள்.  

Eight countries have signed an international pact for moon exploration called the Artemis Accords, NASA announced on Tuesday, a win for the US space agency as it works to shape standards for building long-term settlements on the lunar surface. The accords, named after NASA’s Artemis moon programme, seek to build on existing international space law by establishing “safety zones” that would surround future moon bases to prevent conflict between states operating there, and by allowing private companies to own the lunar resources they mine. The United States, Australia, Canada, Japan, Luxembourg, Italy, the United Kingdom and the United Arab Emirates signed the bilateral agreements during an annual space conference on Tuesday following months of talks. The US is working to cultivate allies for its plan to return astronauts to the moon by 2024.

NASA has awarded Intuitive Machines of Houston approximately $47 million to deliver a drill combined with a mass spectrometer to the Moon by Dec 2022 under the agency’s Commercial Lunar Payload Services initiative. The delivery of the Polar Resources Ice Mining Experiment known as PRIME-1 will help NASA search for ice at the Moon’s South Pole and, for the first time, harvest ice from below the surface.  PRIME-1 will land on the Moon and drill up to 3 feet (approximately 1 meter) below the surface. It will measure with a mass spectrometer how much ice in the sample is lost to sublimation as the ice turns from a solid to a vapor in the vacuum of the lunar environment.  “PRIME-1 will give us tremendous insight into the resources at the Moon and how to extract them,” said  Associate administrator for NASA’s Space Technology Mission Directorate (STMD) in Washington.  The data from PRIME-1 will help scientists understand in-situ resources on the Moon.  

Nokia has been on this planet for over 150 years, and good old Earth is not interesting for the Finns any more. Nokia won 14.1 million USD to further develop 4G that will be used on NASA’s Moon come back, which is planned in 2024.  Anyway, NASA is planning on bringing humans to the Moon in 2024, and the whole process is currently financed with 370 million from various investors. The goal is to make a permanent settlement or a base, and 4G will be crucial to establish a communication there and with Earth. Apparently, 5G isn’t good for this job since its signals travel shortly, which means more radios will be needed up there, and that is a heavy load. Nokia’s job is to look at how can terrestrial communication technology be changed for the lunar environment.





விஷ்ணுசித்தனான பெரியாழ்வார் கண்ணனது ஒவ்வொரு பருவத்தையும் அனுபவித்து பாசுரங்கள் அருளியுள்ளார்.  வளரும் கண்ணனுக்கு யசோதை அம்புலியை  அழைக்கும் ஒரு பாசுரம் இங்கே :

சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும்

எத்தனை செய்யிலும் என்மகன் முகம் நேரொவ்வாய்

வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற

கைத்தலம் நோவாமே அம்புலீ   கடிதோடி   வா.  

சந்திரன் குளிர்ச்சியும் அழகும் மிக்கவன்.  மாமதி!  மகிழ்ந்தோடிவா’’ என்று அழைக்கச் செய்தேயும் சந்திரன் ஓடிவரக் காணாமையாலே ‘அழகில் தன்னோடொப்பார் ஒருவருமில்லை’ என்கிற கர்வத்தினால் இவன் வாராமலரிருக்கிறான் என்று கொண்டு அந்தச் செருக்கு அடங்கப் பேசுகிறாள், யசோதா. .  சந்திரா! நீ இப்போது  நாள்தோறும் தேய்வதும் வளர்வதுமாய் இருக்கின்றாய்; களங்கமுடையனாயும் இருக்கின்றாய்;  நீ எவ்வளவு செயற்கை அழகு செய்துகொண்டு விளங்கினாலும் அற்புத  குழந்தை கண்ணனது திருமுகத்திற்குச் சிறிதும் ஒப்பாக மாட்டாய்.  ஆகையாலே நாமே அழகிற் சிறந்துள்ளோம் என்கிற செருக்கை ஒழித்து உன்னைக் காட்டிலும் மிக அழகிய முகமண்டலத்தை உடையவனான இவன் உன்னைக் கைகளால் அழைப்பதைப் பரம பாக்யமாக அநுஸந்தித்து விரைந்து ஓடிவா; வாராவிட்டால் வெகுகாலமாக உன்னை அழைக்கிற இக்குழந்தைக்குக் கைநோவு ஒன்றே மிகும்; இவ்வபசாரத்தை நீ அடைந்திடாதே என்றவாறு, அம்புலியை உடனே வந்திடுமாறு அழைக்கிறார் நம் பெரியாழ்வார்.    திருவல்லிக்கேணி பிரம்மோத்சவத்தில் நான்காம் நாள் காலை சூர்யப்பிரபை.  மாலை சந்திரப்ரபை வாகனங்கள்.   

Here are some photos of Sri Parthasarathi Chandra prabhai purappadu on the occasion of Ratha Sapthami on 12.02.2019.  

adiyen Srinivasa dhasan (Mamandur Veeravalli Srinivasan Sampathkumar)

18.10.2020.









4 comments:

  1. Nice.. நிலா பற்றிய குறிப்புகள் மிக்க சிறப்பு.

    ReplyDelete
  2. We can resort to your blog only for our GK. Great Job Swamin

    ReplyDelete