To search this blog

Thursday, October 1, 2020

astounding greatness of Padma Vibushan Sri Ramabhadracharya, Chitrakoot

 

In 2015, he was awarded Padma Vibhushan, India's second highest civilian honour. He has won the Sahitya Akademi Award for Sanskrit, the Shreevani Alankaran, the Banabhatta award and the Vachaspati award for his epic Śrībhārgavarāghavīyam. He has received eight gold medals in Shastri and Acharya examinations.



In July 2003 Rambhadracharya deposed as an expert witness for religious matters (OPW 16) in Other Original Suit Number 5 of the Ram Janmabhoomi Babri Masjid dispute case in the Allahabad High Court.  Some portions of his affidavit and cross examination are quoted in the final judgement by the High Court. Of great significance because this eye-witness, is a person who had lost his eye sight in his childhood.

In his affidavit, he cited the ancient Hindu scriptures including the Ramayana, Rāmatāpanīya Upaniad, Skanda Purana, Yajurveda, Atharvaveda, and others describing Ayodhya as a city holy to Hindus and the birthplace of Rama. He cited verses from two works composed by Tulsidas which, in his opinion, are relevant to the dispute. The first citation consisted of eight verses from a work called Dohā Śataka, which describe the destruction of a temple and construction of a mosque at the disputed site in 1528 CE by Mughal ruler Babur, who had ordered General Mir Baqui to destroy the Rama temple, considered a symbol of worship by infidels. The second citation was a verse from a work called Kavitāvalī, which mentions a mosque. In his cross examination, he described in some detail the history of the Ramananda sect, its Mathas, rules regarding Mahants, formation and working of Akharas, and Tulsidas' works. Refuting the possibility of the original temple being to the north of the disputed area, as pleaded by the pro-mosque parties, he described the boundaries of the Janmabhoomi as mentioned in the Ayodhya Mahatmya section of Skanda Purana, which tallied with the present location of the disputed area, as noted by Justice Sudhir Agarwal.

Giridhar lost his eyesight at the age of two months. On 24 March 1950, his eyes were infected by trachoma. There were no advanced facilities for treatment in the village, Rambhadracharya has been blind ever since. He cannot read or write, as he does not use Braille; he learns by listening and composes by dictating to scribes. But that did not deter him from pursuing academics – after  completing his master's degree, Giridhar enrolled for the doctoral Vidyavaridhi (PhD)  degree at the same institute, under Pandit Ramprasad Tripathi. He completed his Vidyavaridhi degree in Sanskrit grammar in  1981.  His dissertation was titled Adhyātmarāmāyae'pāinīyaprayogānā Vimarśa, or Deliberation on the non-Paninian usages in the Adhyatma Ramayana.  On completion of his doctorate, the UGC offered him the position of head of the Vyakarana department of the Sampurnanand Sanskrit University. However, Giridhar did not accept; he decided to devote his life to the service of religion, society, and the disabled.

On 9 May 1997, Giridhar (now known as Rambhadracharya) was awarded the post-doctorate Vachaspati (DLitt) degree by Sampurnanand Sanskrit University for his 2000-page Sanskrit dissertation Pāinīyāṣṭādhyāyyā Pratisūtra Śābdabodhasamīkā, or Investigation into verbal knowledge of every Sūtra of the Ashtadhyayi of Panini. The degree was presented to him by K. R. Narayanan, then President of India. In this work, Rambhadracharya explained each aphorism of the grammar of Panini in Sanskrit verses.

Rambhadradas was chosen as the Jagadguru Ramanandacharya seated at the Tulsi Peeth by the Kashi Vidwat Parishad in Varanasi on 24 June 1988.  In Feb 1989, at the Kumbh Mela in Allahabad, the appointment was unanimously supported by the Mahants of the three Akharas, the four sub-Sampradayas, the Khalsas and saints of the Ramananda Sampradaya. On 1 August 1995 he was ritually anointed as the Jagadguru Ramanandacharya in Ayodhya by the Digambar Akhara.  He is now known as  Jagadguru Ramanandacharya Swami Rambhadracharya.

Jagadguru Ramanandacharya Swami Rambhadracharya is a great spiritual leader, educator, Sanskrit scholar, polyglot, poet, author, textual commentator, philosopher, composer, singer, playwright and Katha artist based in Chitrakoot. Rambhadracharya is the founder and head of Tulsi Peeth, a religious and social service institution in Chitrakoot named after Saint Tulsidas.  He is the founder and lifelong chancellor of the Jagadguru Rambhadracharya Handicapped University in Chitrakoot, which offers graduate and postgraduate courses exclusively to four types of disabled students.  Rambhadracharya can speak 22 languages and is a spontaneous poet  and writer in Sanskrit, Hindi, Awadhi, Maithili, and several other languages.  He has authored more than 100 books and 50 papers, including four epic poems,  Hindi commentaries on Tulsidas' Ramcharitmanas and Hanuman Chalisa, a Sanskrit commentary in verse on the Ashtadhyayi, and Sanskrit commentaries on the Prasthanatrayi scriptures.

During Ayodhya arguments, Jagat Guru Swami Rambhadracharya said that 437 proofs of having a Ram temple in Ayodhya have been given to the court. Evidence of excavation also exists.  Swami Rambhadracharya, referring to ancient texts, said that information about Shriram's birth begins from the eighth verse of the Bal Khand of Valmiki Ramayana. This is the exact proof. After this, the Skanda Purana tells about the birth place of Rama. According to this, Sarayu Mata is flowing at a distance of 300 Dhanush from the place of birth of Ram. A bow is of four hands. Even today, if measured, the Saryu river will be seen flowing at the same distance from the place of birth. Earlier in the second mantra of the 31st verse of the tenth episode of the Atharva Veda it is clearly stated that Sri Ayodhya with 8 chakras and nine major gates is the Puri of the gods. There is a temple palace in the same Ayodhya. The divine came from heaven.  He said that there is a clear proof of Ram birth in Vedas also. This is also evident in the Dasam mandal of the Rigveda.  

Now read this interesting report in today [26.9.2020] Dinamalar :  Swami Ramabhadracharya …. Hearty appreciations to Dinamalar.

உச்ச நீதிமன்றத்தில், அயோத்தி ராம ஜன்ம பூமி தொடர்பான வழக்கு விசாரணை பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. இரு தரப்பிலும், வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர்.

இரு தரப்பிலும் சாட்சிகளாக பலர், நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.'அயோத்தி தான் ராம ஜன்ம பூமி' என தெரிவித்து, தன் வாதங்களை மூத்த வழக்கறிஞர்பராசரன் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.அப்போது நீதிபதி குறுக்கிட்டு, 'ராமர் இருந்தார் என்பதற்கு, வேதங்களிலிருந்தும், புராணங்களிலிருந்தும் பல்வேறு ஆதாரங்களை கூறுகிறீர்கள். ராமபிரானின் ஜன்ம பூமி பற்றி, எந்த வேதத்திலாவது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதா?' என, பராசரனிடம் கேட்டார்.

நுாற்றுக்கு நுாறு சரி;  இதற்கு பராசரனால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. அப்போது, சாட்சிகள் அமர்ந்திருந்த பகுதியிலிருந்து, முதியவர் ஒருவர் எழுந்தார். அவரை தான், ராம ஜன்ம பூமிக்கு ஆதரவான முக்கியமான சாட்சியாக, பராசரன் தெரிவித்திருந்தார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் கிரிதர்.அவர் நீதிபதியைப் பார்த்து கூறியதாவது:மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களே... ரிக் வேதத்தில்,'ஜைமினியா சம்ஹிதா' பகுதியில், ராம ஜன்ம பூமி பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், சரயு நதியின் கரையில், ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து, ராம ஜன்ம பூமிக்கு செல்வதற்கான வழிகளும், துாரமும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த வழிகளை பின்பற்றிச் சென்றால், ஒருவரால், ராம ஜன்மபூமிக்கு நிச்சயம் செல்ல முடியும்.இவ்வாறு, அவர் கூறினார். இதை அவர், எந்த புத்தகத்திலிருந்தும் படித்து காட்டவில்லை; எழுதியும் காட்டவில்லை. மடை திறந்த வெள்ளம் போல், மனதிலிருந்து கூறினார். 

கிரிதர் கூறியது சரிதானா என ஆய்வு செய்ய, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கிரிதர் கூறியது நுாற்றுக்கு நுாறு சரி என தெரிந்தது. இதை அறிந்த நீதிபதி, 'இது ஒரு அபூர்வமான நிகழ்ச்சி; அதை, இன்று நான் நேரில் பார்த்தேன்' என, ஆச்சரியத்துடன் கூறினார்.இதைக் கேட்ட கிரிதர், மிகவும்அமைதியாக, எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தாமல் இருந்தார்.நீதிபதி இப்படி மிகவும் ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் கூறியதற்கு பின்னணியில், முக்கியமான காரணம் உள்ளது. இதற்கு நாம், இந்திய வரலாற்றை திருப்பிப் பார்க்க வேண்டும். அப்படி பார்த்தோமானால், வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய அவசியத்தை உணர்வோம்.உத்தர பிரதேசமாநிலம், ஜான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பண்டிட் ராஜ்தேவ் மிஷ்ரா - சசிதேவி தம்பதிக்கு, 1950ம் ஆண்டு, ஜனவரி, 14ம் தேதி, மறக்க முடியாத நாளாக அமைந்தது. ஆம், அன்றைய தினம் அவர்களுக்கு, அழகான, ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு, 'கிரிதர்' என, பெயர் வைத்தனர்.இரண்டு மாதத்துக்குப் பின், குழந்தை கிரிதர், கடும் நோயால் பாதிக்கப்பட்டான். அது, குழந்தை கிரிதர் மற்றும் அவனது பெற்றோரின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. ஆம்... கிரிதருக்கு பார்வை பறிபோனது.

அபார ஞாபக சக்தி :  குழந்தை வளர வளர, தன் மகனால் படிக்கவும், எழுதவும்முடியாது என்பதை, கிரிதரின்தந்தை ராஜ்தேவ் புரிந்து கொண்டார். ஆனால், கிரிதரிடம், எளிதில் புரிந்து கொள்ளும் தன்மையும், சொல்லிக் கொடுத்ததை மனப்பாடம் செய்யும் சக்தியும் இருப்பதை அறிந்தார். மேலும், கிரிதருக்கு மறதி என்ற பேச்சுக்கே இடமில்லாமல், அபார ஞாபக சக்தியும் இருந்தது.

இதனால், மகனில் அருகில் அமர்ந்து, அவனுக்கு வேதம் சொல்லிக் கொடுத்தார். வேதத்துக்கு அர்த்தமும் சொல்லி கொடுத்தார். கிரிதருக்கு, 8 வயதான போது, ராமானந்த் வழியைப் பின்பற்றும் மடம் ஒன்றில் சேர்த்தார். மடாதிபதி, கிரிதரை தன் சீடனாக ஏற்று, அவருக்கு, 'ராமபத்ரா' என்ற புதிய பெயரையும் வைத்தார். ராமபத்ராவுக்கு, புதிய வழியை காட்டினார். அவரது நினைவு திறனை அறிந்து, வேதங்கள், புராணங்கள், உபநிஷத்கள் என, அனைத்தையும் கற்பித்தார். குரு சொல்லச் சொல்ல, அதை மனப்பாடம் செய்து, நினைவில் வைத்துக் கொண்டார் ராமபத்ரா.

கல்வியில் ஆர்வம் :  கல்வி மீது ராமபத்ராவுக்கு அதிக ஆர்வம் இருந்தது. படிக்க, எழுத முடியாவிட்டாலும், தன் நினைவுத் திறனால், 22 மொழிகளை கற்றுத் தேர்ந்தார்.நான்கு வேதங்கள், உபநிஷத்கள் அனைத்திலும் மாபெரும் புலமை பெற்றார். துளசிதாசர் மீது மிகவும் பக்தி கொண்டிருந்த ராமபத்ரா, அவர் ஹிந்தியில் எழுதிய ராமாயணமான, 'ராமசரிதமானஸ்' பற்றி, உபன்யாசங்கள் நிகழ்த்த ஆரம்பித்தார்.

கற்பனை செய்து பாருங்கள். படிக்கவும், எழுதவும் முடியாத ஒருவர், மற்றவர் படிக்கக் கேட்டு, அதை மனப்பாடம் செய்து, நினைவில் வைத்து, உபன்யாசங்கள் செய்துள்ளார். தன், 38வது வயதில், ராமானந்தஆசிரமத்தில், நான்கு ஜகத்குருக்களில் ஒருவராக, ராமபத்ரா பொறுப்பேற்றார். ஜகத்குரு ராமபத்ராச்சார்யா என, அழைக்கப்பட்டார்.

பல மொழி வித்தகர் :  ராமபத்ராச்சார்யாவின் திறமையும், சாதனைகளும் நம்மை வியக்க வைக்கிறது. பல மொழி வித்தகர், ஆன்மிக தலைவர், கல்வியாளர், சமஸ்கிருத அறிஞர், கவிஞர், எழுத்தாளர், விமர்சகர், தத்துவஞானி, பாடகர், இசையமைப்பாளர். உபன்யாசகர், நாடக எழுத்தாளர் என, அவரை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அவர், 'கீதா ராமாயணம், ஸ்ரீ பார்கவ ராகவ விஜயம், அருந்ததி, அஷ்டாவக்ரா, விதுரா' உட்பட 100க்கும் அதிகமான நுால்களை எழுதியுள்ளார். 'ஸ்ரீ சீதாராம சுப்ரபாதம்' என்ற சுலோகத்தையும் அவர் எழுதி இசையமைத்து உள்ளார். கவிஞரான ராமபத்ராச்சார்யா, ஹிந்தியிலும், சமஸ்கிருதத்திலும்பல கவிதைகளை எழுதி உள்ளார். ராமாயணம், மஹாபாரதம் உட்பட பல புராணங்களை, கவிதை வடிவில் எழுதியுள்ளார். தானே இசையமைத்து பாடி, ஐந்து இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். கல்வி மீது தீராத பற்று கொண்ட ராமபத்ராச்சார்யா, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக, ஜகத்குரு ராமபத்ராச்சார்யா பல்கலைக்கழகத்தை துவக்கினார். ஹிந்து மதம் பற்றி படித்து ஆய்வு செய்ய, துளசிதாசர்

பெயரில், 'துளசி பீடம்' என்ற குருகுலத்தை துவக்கினார். 2015ம் ஆண்டு, மத்திய அரசு, 'பத்மவிபூஷன்' விருது வழங்கி, ராமபத்ராச்சார்யாவை கவுரவித்தது. பிறந்து, இரண்டே மாதத்தில் பார்வையிழந்தும், மன தைரியத்துடன் போராடி, கல்வியிலும், அறிவிலும் உச்சம் பெற்றுள்ளார். அவரது வாழ்க்கை, அனைவருக்கும் பெரும் ஊக்க சக்தியாக அமைந்துள்ளது.

சாபக்கேடு  :  பார்வையில்லாமல், மாபெரும் சாதனை படைத்த இந்த மாமனிதரை, நம் நாட்டில் எத்தனை பேருக்கு தெரியும்?பார்வையற்றவர் படைத்த சாதனை என்றால், நம்மில் பலருக்கு, 'ஹெலன் கெல்லர்' தான் நினனவுக்கு வருவார். அவரை பற்றி, பள்ளி பாடப் புத்தகங்களில் பாடங்கள் கூட வந்து உள்ளன. ஆனால், நம் கல்வி முறையில், ஜகத்குரு ராமபத்ராச்சார்யாவின் பெயர் சிறிதும் இடம் பெறாதது வேதனை. ஏனெனில், அவரை புகழ்ந்து பேசினால், நம் நாட்டின் மதச்சார்பின்மை மாயமாகிவிடும் என, போலி மதச்சார்பின்மைவாதிகள் குற்றம்சாட்டி, முதலைக் கண்ணீர் வடிப்பர். இதுதான், நம் நாட்டின் சாபக்கேடு! - நமது நிருபர் –

 

No comments:

Post a Comment