To search this blog

Wednesday, October 14, 2020

celebrating glory of Acarya Swami Manavala Mamunigal 2020

முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு !!  ~  பூர்வாசார்யர்கள் தாமிட்ட உரைகளை மாற்றாமல், அதன்படியே பொருள் உரைத்து, நமக்கு நல்வழி காட்டியவர் நம் ஸ்வாமி மணவாள மாமுனிகள்.

We are rejoicing in celebrating the 650th Thiruvavathara Uthsavam of our  great Acaryar Swami Manavala Mamunigal at every temple.  Mamunigal is fondly known as ‘Yatheendra Pravanar’ arising out of his irresistible attachment to the lotus feet of Sri Ramanujar [Yatheendrar].   


In our Srivaishnavism, there is the illustrious lineage of Purvacharyargal – the hierarchy of Srivaishnava preceptors – through whom the glorious traditions passed by in generations.  Its happy culmination with Namperumal Himself becoming disciple of Acarya Mamunigal redounds the wisdom of our holy lineage.  Swami Emperumanar (Sri Ramanujar) and Mamunigal – both were incarnation of Adisesha.  Born as Nayanar, Mamunigal was an ocean of knowledge, yet learnt at the feet of his erudite father and others – the way Sri Rama and Sri Krishna did, during their stay on earth – through courses under great sages of their times like Vasistha, Viswamitra, Sandeepani .. ..]

Sri Erumbiappa whose exceptional attachment to his Guru in his thanian to Yathiraja Vimsati extols Acaryar  statubg "I offer my homage to Acarya Swami Manavala Mamunigal, who blessed us with this great work of  ‘Yathiraja vimsathi’ with the intention of pleasing the heart of our Udayavar Bashyakar Sri Ramanujar. 

நமது வாழ்க்கைமுறையே, நமது சத்சம்ப்ரதாயமே  - திருவரங்கனுக்கும், திருவரங்கத்துக்கும் சம்பந்தப்படுவதானாலேயே பெருமை அடைகிறது.  ‘ரங்கம்’ என்றால்  எம்பெருமானுக்கு  ப்ரீதியை  அளிக்கவல்லது என்பதாகும்.  மொகலாயர்கள் மற்றையவர்கள் படையெடுப்பு காலத்தில் பிள்ளை லோகாச்சார்யரும்  திரு வேடந்தாச்சார்யாரும், அரங்கனையும், அரங்கத்தையும், அவனடியார்களையும், நமது ஸம்ப்ரதாயத்தையும் காப்பாற்ற சொல்லொணா துக்கங்களை எதிர்கொண்டனர்.   சுவாமி மணவாளமாமுனிகளின் அவதாரத காலத்தில், அத்தகைய இடர்ப்பாடுகள் இல்லமால் அரங்கம் அமைதியாக திகழ்ந்தது.  எம்பெருமான் அழகிய மணவாளன் நம் பெரிய ஜீயரின் ஈடு காலக்ஷேபம் செவி சாய்த்து அருளினார்.
அழகிய மணவாளனின் திருக்குணங்களான -  உருவ சௌந்தர்யம்,  ஔதார்யம், நீர்மை போன்றவற்றில்  அவரையே ஒத்த குணமுடையவர் ஆதலால் அழகியமணவாளர் என்ற திருநாமத்தை பெற்ற,   ஆசார்யனே சேஷியென்ற உண்மையை மநநம் செய்பவருமாகிய மணவாளமாமுனிகளை,  வணங்கித் துதிக்கின்றேன் என்று தமது ஸ்ரீ வரவரமுநி திநசர்யை எனும் நல்லநூலை  துவங்குகிறார்  ஸ்ரீதேவராஜகுரு என்று ப்ரஸித்திபெற்ற எறும்பியப்பா எனும் வித்வான்.    இவர் மணவாள மாமுனிகளின் ப்ரதாந சிஷ்யர்கள்  எண்மரில் ஒருவர். ஆசார்யராகிய மணவாளமாமுனிகளையே தெய்வமாகக் கருதிய இவர் அவர் விஷயமாக வரவரமுநி காவ்யம், வரவரமுநிசம்பூ, வரவரமுநிசதகம் முதலிய பலநூல்களை இயற்றியுள்ளார்.    

மாமுனிகள் வாடாக்குறிஞ்சி மலர் போல ம்ருதுவான திருமேனியையுடையவரும்,   மிகச் சிவந்து ஸுத்தமான (காஷாய) வஸ்த்ரமணிந்தவரும்   பளீர் என வெண்மை நிறமுள்ள யஜ்ஞோபவீதம் அணிந்தவர் என தம் ஆசார்யனை பிரஸ்தாபிக்கிறார். எறும்பியப்பாவின் பூர்வ திநசர்யை மாலையின் இரண்டாம் பாசுரம் இங்கே :

मयि प्रविशति श्रीमन् मन्दिरम् रन्गशायिनः |

पत्युः पदाम्बुजम् द्रष्टुम् आयान्तम् अविदूरतः ||

மயிப்ரவிதி ஸ்ரீமந்மந்திரம் ரங்காயிந: |

பத்யு: பதாம்புஜம் த்ரஷ்டும் ஆயாந்தமவிதூரத: ||

ஆசார்யருடைய திருமேனியை, திருவடி முதலாகத் திருமுடியீறாக, ிஷ்யன் த்யானிக்கவேண்டும்’ என்றும், ‘ ிஷ்யன் ஆசார்யன் திருமேனியை ஸேவிப்பதில் பற்றுடையவனாக இருக்கவேண்டும்’ என்றுமுள்ள வசனத்தின்படி ஆசார்யன் திருமேனியை வருணிக்கிறார் எறும்பியப்பா.   திருவரங்கம் எனும் பெரிய கோவிலிலே கைங்கர்யமாகிய செல்வம் மிகப்பெற்ற மணவாளமாமுனிகளே!  ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டருளிய பெரியபெருமாளுடைய, கோயிலைக் குறித்து, அடியேன்  சென்று புகும் போது, ஜகத்பதியான பெரியபெருமாளுடைய  தாமரை மலர் போன்ற திருவடிகளை  ஸேவிப்பதற்காக  அருகில்  எழுந்தருளிக் கொண்டிருக்கிறவராயும் உள்ள ஆசார்யன் பேறு கிடைக்கபெற்றமை குறித்து ஆனந்திக்கிறார்.  அம்மாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளைக் கேட்பதும் அவரை ஸேவிப்பதும் அவரை துதிப்பதுமாகியவை தமக்குப் புருஷார்த்தமென்றும் ஸம்ஸார துக்கத்தைப் போக்குமதென்றும் கூறுமவராய்க்   கொண்டு தாம் செய்ய நினைத்த திநசர்யையின் பொருளைச் சுருங்கக்கூறுகிறார்.     ஆசார்யகடாக்ஷ வைபவம் என்பது மிகப்பெரும் பேறு!  ஏதோஏதோ கடின செயல்களை செய்து அப்பொருளை வணிகம் செய்து கிடைக்கும் அளவில் வயிறு நிறைபவனுக்கு, பெரிய நிதி கிடைத்தாற்போலாம் என தம் ஆசார்யனை கொண்டாடுகிறார்.

On this glorious day, we fall at the feet of our Acarya Swami Manavala Mamunigal and pray to Emperuman for the good health, and glory of all His devotees. Here are some photos of Swami Manavala Mamunigal at Avathara sthalam of Yathirajar – Sriperumpudur, taken in 2018 by my friend TE Sundarakrishnan.

adiyen Srinivasa dhasan

Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

14.10.2020

·         Special thanks again to Thirumalai Echambadi Sundarakrishnan for the photos

·         Acknowledge with admiration the great Srivaishnava portal of Sri Sarathi Swami - : http://divyaprabandham.koyil.org

1 comment: