To search this blog

Wednesday, October 21, 2020

Thiruvallikkeni Theppam Ther : தொழுது மாமலர் நீர்சுடர்தூபம் கொண்டு .. மயங்கொலிச் சொற்கள் !!

ஓர் ஊரில் சத்தியன்  என்ற விறகு வெட்டி ஒருவன் இருந்தான். அவனுக்கு விறகு வெட்டுவதைத் தவிர வேறு தொழில் எதுவும் தெரியாது. காட்டுக்குச் சென்று தூக்க முடிந்த அளவுக்கு மரக்கிளைகளை வெட்டி எடுத்து வருவான். அவற்றை விற்று வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் செல்வான். அவனது மனைவியும், இரு குழந்தைகளும் இவனது உழைப்பை நம்பித்தான் வாழ்ந்து வந்தனர்.

ஒருநாள் ஆற்றின் கரையோரமாக இருந்த ஒரு மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தான். அப்போது அவனது இரும்புக் கோடரி தவறி ஆற்றில் விழுந்துவிட்டது. அவனால் கோடரியைத் தேட முடியவில்லை.  அவனுக்கு அருள் செய்ய கடவுள் வந்து அவனது நேர்மையை பாராட்டி - தங்க, வெள்ளி, இரும்பு கோடரிகளை பரிசளித்த கதை அறிவீர்.  அதே மனிதன் மரங்களை வெட்ட கோடரிக்கு பிடி தேவைப்படும்போது மரத்தின்  முதிர்ந்த கிளையினை வெட்டி அதைக்கொண்டே மரத்தை முழுமையாக வெட்டும் கதை வேதனையானது.  

A homophone is a word that is pronounced the same (to varying extent) as another word but differs in meaning. A homophone may also differ in spelling. The two words may be spelled the same, as in rose (flower) and rose (past tense of rise), or differently, as in rain, reign, and rein.    In linguistics, homonyms, broadly defined, are words which are homographs (words that share the same spelling, regardless of pronunciation) or homophones (words that share the same pronunciation, regardless of spelling), or both. For example,   the words row (propel with oars), row (argument) and row (a linear arrangement) are homonyms, as are the words see (vision) and sea (body of water).

If you are wondering why English grammar and its relevance suddenly – today while reading the vyagyanam for the Thiruvaimozhi pasuram read :” கிட்டும் விரகு அறிகின்றிலேன் “   - and read it again, to check whether I read it correctly or could there by any printer’s devil.  Is that : விரகு or should it have been – விறகு  !!  

கிட்டும் விரகு அறிகின்றிலேன்  :  'விரகு' அல்லது 'விறகு' - எது சரி ?? மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒரே போன்ற ஒலிப்பினைக் கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வகையான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவை மயங்கொலிச் சொற்கள் என்றழைக்கப்படுகின்றன.

விறகு (பெயர்ச்சொல் ) :  firewood, fuel - எரிக்கப் பயன்படும் கட்டை

விரகு (பெயர்ச்சொல்) : வழிவகை, திறமை, தந்திரம், சூழ்ச்சி, விவேகம், ஊக்கம், தின்பண்டம்.இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரம் [ஒன்பதாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி)

தொழுது  மாமலர் நீர்சுடர்தூபம் கொண்டு

எழுதுமென்னும்   இது மிகையாதலில்

பழுதில்  தொல்புகழ்ப் பாம்பணைப்  பள்ளியாய்

தழுவுமாறறியேன் உன  தாள்களே.

மல்லிகை, தாமரை, இருவாட்சி, செங்கழுநீர், சாமந்தி, முல்லை போன்ற சிறந்த மணம் கமழும்  புஷ்பங்களையும்,  தீர்த்தம் தீபம் தூபூம் இவைகளையும்  ஏந்திக் கொண்டு ஆராதனைக்கு சிறந்தவனாக   இயற்கையான புகழையுடையனும்  திருப்பாற்கடலில் பாம்பணை மேல் பள்ளிகொண்டவனுமான எம்பெருமான் ஸ்ரீமந்நாரணனின்  திருவடிகளை அடைந்து, ஆராதிக்கும்   விரகு (வழிவகை) அறிகின்றிலேன்  என்கிறார் நம்மாழ்வார்.

For the parched devotees, darshan of Emperuman sounds so high fortune – there could be double bonanza .. .. the day 1 of Theppothsavam is more ! .. first Sri Parthasarathi Perumal has kulakkarai purappadu, then enters Theppam for 5 rounds at Kairavini thirukulam, after that a very brief halt at Andal neeratta mantapam opposite to thiruther – then has periya mada veethi purappadu in siriya thiruther.

8th Mar 2016 provided one such glorious opportunity and reminiscing that golden day with some photos taken on that date by me 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
21.10.2020.1 comment: