To search this blog

Friday, May 24, 2013

New Thiruther for Lord Sri Veeraraghavar at Thiruvallur [Thiru Evvul]

"இண்டை கொண்டு தொண்டரேத்த எவ்வுள் கிடந்தானை'  [பக்தர்கள், புஷ்ப மாலைகளை ஏந்திக் கொண்டு துதிக்கும்படியாக சயனித்தருள்பவனான பெருமான்] என திருமங்கைமன்னன் மங்களாசாசனம் பண்ணப்பட்ட பெருமாள் திருக்கோவில் திருஎவ்வுள் எனும் திருவள்ளூர் . 

Not far away from Thiruvallikkeni [Chennai] is the Divyadesam popularly known as Thiruvallur [a District by itself] – known as ‘Thiru Evvul’.  It is approx 45 km away from Chennai en route to holy Thirumala Tirupathi.  One can pass through Poovirunthavalli, take right to Thirumazhisai and travel along to this Divyadesam.   It is a puranic temple of epigraphical importance.

Lord here is ‘Sri Veera Raghavar’ -  in reclining posture,  with Brahma coming out from his navel in a meditating posture.   Perumal’s right hand extends to bless the Maharishi and  all His devotees.   In the Sthalapurana, sage Margandeya gives a detailed account the dialogue between the sage Salihothra and Devabakhruk in the age of krithiyuga (the age of virtues and the first of four aeons). Lord Himself in the form of an old Brahmin, appeared before Salihothra maharishi who was doing great tapas.  Being fully satisfied of the offerings of the Sage,  He is believed to have asked the maharishi  “evvul,” meaning where he could rest;  Salihothra showing his hermitage, humbly said  that He could regard his hermitage as his own and take rest.   Lord so pleased with the tapas, then revealing His Swarupa asked Salihothra as to what he wanted.

The sage Salihothra, feeling immersed in boundless joy and happiness and singing the glory of the Lord, prostrated before Him.  With his speech faltering, he humbly said, “Lord, what else do I require after seeing your ‘Divine Form’ Lord and requested Him to be there.   Graciously granting his wishes, the Lord lay himself full length placing his head in the south, direction with his left hand teaching Brahma who was born out of his navel, the pranava and placing his right hand on the head of Salihothra giving him his eternal protection and promising him.  The Lord said, “As I asked Salihothra for ‘kingruham’or evvul (to rest where) and then having taken rest here, be that this place is called from now on ‘Kingruhapuram and in Tamil’ “Thiru Evvulur” and be that I am called “Kingruhesan” or “Evvul kidanthan”.  I will be present here for ever. 

The pushkarini here  is ‘Hrithapanacini.  ‘Hrith’ means heart, ‘thapa’ means desires or sins and ‘nacini’ means that which removes.  The holy water of the Temple tank would remove all desires and sins from the heart.  It is believed that people would be ridden of their diseases by a dip in the tank and by mixing jaggery in the tank. 

Sri Veeraraghavar is also known as Vaidya Veera Raghava Swami postulating the mystic power to absolve us of our sins and diseases.  The Uthsavar is Sri Veera Raghavar and His consort is Kanakavalli Thayar @ Vasumathi Thayar.

முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து, அரக்கன்*
மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே*
பின்னோர் தூத னாதிமன்னர்க் காகிப் பெருநிலத்தார்,*
இன்னார் தூதனென  நின்றானெவ்வுள் கிடந்தானே.

நமது அற்புதமான இதி ஹாசங்கள் ஆன ராமாயண மஹாபாரத அவதார சிறப்புகளை கூறி :  ஸ்ரீராமாவதாரத்திலே சிறிய திருவடி மூலமாக சீதை பிராட்டிக்குத் தூது சொல்லியனுப்பி, பிறகு அரக்கன் இராவணனுடைய  லங்காபுரியை, தனது வில்  மாண்டுபோகும்படி சீறிமுடித்து, பிறிதொரு காலத்தில் ராஜாதிராஜர்களான பாண்டவர்களுக்கு தூதுவனாக பெரிய இப்பூமியிலுள்ளாரெல்லாரும் இவன் இன்னாருடைய தூதன் என்று  சொல்லும்படியாய் பெயர் பெற்ற  அப்பெருமான், இந்த திவ்யத் தலத்திலே பள்ளி கொண்டுள்ளான் என்கிறார் கலியன் தனது திருமொழியில் . 

Recently, the Devasthanam [great efforts of the Pontiff, 45th Jeeyar of Sri Ahobila Mutt]have dedicated a new Chariot [Thiruther] costing approx 1.5 crores  to the Perumal. Sri Veera Raghavar will grace the new Thiruther on  Wednesday, 19th June 2013.  Here are a couple of photos of the Thiruther when it was submitted to the Temple and  taken around [karikkolam] on 23rd May 2013.


Be there at Thiruvallur on June 19th to witness the Thiruther and get the blessings of Sri Veeraraghavar.

Adiyen Srinivasa dhasan

Photos and news courtesy my friend : Sri PL Ranganathan Swami.

Thiruvallikkeni Sri Varadharajar Garuda Sevai

Dear (s)  
For a  Srivaishnavaite, Perumal Koil refers to “Sri Varadharaja Swamy temple’ at Kanchipuram.  Legend has it that Brahma performed Asvamedha yaga at mokshapuri i.e., Kanchi and Lord Vishnu emerged out of the fire with Sanku Chakram. It is believed that the annual Uthsavam was initiated by Brahma himself. Indira’s white elephant Iravatham took the form of a hill called Hastigiri on which shrine of Varadharajar is located. This Swami is known by various names, prominent among them being : Devarajar, Devathirajar, Thepperumal, Varadhar, PerArulalar …

The annual brahmothsavam is now on and today 24th May 2013  is the famous Garuda Sevai – when Lord is taken in procession on vahanam of Garuda also known as Periya Thiruvadi. Garuda was born to Kaashyapar and Vinathai (Vinathai siruvan siragu ena pasuram]

At Kanchipuram, there is the legend of Lord Devathirajar atop Garuda, hides away a few minutes, going to Sholinghur to give darshan to Dhoddacharyar – the  leela vinotham of PerArulalar – popularly known as Doddayachaaryar  Sevai.  More on that on my earlier post here :  Sri Doddachar Vaibhavam

Here are some photos taken this morning during the purappadu at Thiruvallikkeni. 

ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு 'பெருமாள் கோவில்' என்றாலே 'திருக்கச்சி தேவப்பெருமாள் சன்னதி' தான்!  பிரம்மன் மோக்ஷபுரியில் அஸ்வமேத யாகம் செய்யும் போது யாக குண்டத்தில் இருந்து சங்கு சக்கரங்களுடன் தேவாதி ராஜர் எழுந்து அருளி, அவருக்கு பிரம்மா ஏற்பாடு செய்த உத்சவமே பிரம்மோத்சவம் என ஐதீஹம்.   காஞ்சியிலே இப்போது பிரம்மோத்சவம் நடைபெற்று வருகிறது. இன்று [24th May 2013]  மூன்றாம் நாள்; காலை 'கருட சேவை'.

எம்பெருமானுக்கு எப்போதும் கைங்கர்யம் செய்யும் கருடாழ்வார் பெரிய திருவடி என சிறப்பிக்கப்படுகிறார்.  அழகான பட்டு உடுத்திய கருடனின் மீது பெருமாள் எழுந்து அருளும் கருட சேவை மிக அழகும் கம்பீரமும் நிறைந்தது.   கருடன், காச்யபர் என்கிற மகரிஷிக்கும் வினதைக்கும் பிறந்தவர். 

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில்  :
"அத்தியூரான் புள்ளையூர்வான், அணிமணியின்*
துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான், - முத்தீ*
மறையாவான் மாகடல் நஞ்சுண்டான்றனக்கும்
இறையாவான் எங்கள் பிரான்.  –

பெரிய திருவடியாம் கருடனை வாஹனமாகக் கொண்டவனும்,   அழகிய மாணிக்கங்களோடு கூடின ஆதிசேஷன் மேல் பள்ளிகொள்பவனும்,  மூன்று அக்நிகளாலே ஆராதிக்கப்படுகிறவனும்,  வேதங்களால் பிரதிபாதிக்கப்படுகிறவனும் ஆனவன் , எங்கள்பிரானான  திருக்கச்சி அருளாளன்  என மங்களாசாசனம் பண்ணியுள்ளார். 

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் கருட சேவை மிகவும் சிறப்பு வாய்ந்தது.  தேவப்பெருமாள் கருடனின் மீது ஆரோஹணித்து  கோபுர வாசலில் வரும்போது, தொட்டாசார்  சேவை என்பது பிரசித்தம்.   பெருமாள் காஞ்சியில் இருந்து, சோளிங்கபுரம் சென்று, தொட்டாசாருக்கு சேவை சாதித்து திரும்புவதாக ஐதீஹம்.

திருக்கச்சி தேவப்பெருமாள்    கருடவாஹனத்தில் சோளசிம்ஹபுரத்து குளக் கரையினிலே தமக்கு தரிசனம் தந்தது குறித்து நம் ஆச்சார்யர் சண்டமாருதம் தொட்டாசார்யார்  சுவாமி 'தேவராஜா பஞ்சகம் அருளிச் செய்தார். அதில் ஐந்தாவது ஸ்லோகம்  'ப்ரத்யக்  கோபுரஸம்முகே  தினமுகே பக்ஷீந்த்ர சம்வாஹிதம்....... " ..... காஞ்சியில் மூன்றாம் நாட்காலை அருணோதய காலத்தில் கோவில் மேற்கு கோபுர வாசலில் வரதர் கருட வாஹனத்தில் காட்சி தருகிறார் .  ஒப்பற்ற  வெண்கொற்றக் குடைகள் நிழலற்ற வெண்சாமரைகள் வீச வேதியரும் பிறரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய, பேரிகாஹனம் போன்ற இசைக்கருவிகள் முழங்க வரும் வரதனை புண்ணியம் செய்தவர்கள் கண்டு களிக்கின்றனர் - என்பது இப்பாட்டின் அர்த்தம். 

இன்று காலை திருவல்லிக்கேணியில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கருட வாஹனத்தில்  புறப்பாடு கண்டு அருளிய போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே

அடியேன் : ஸ்ரீனிவாச தாசன்.






and finally the Garuda SEva at Thiru Kachi sent by a friend of mine...

Tuesday, May 21, 2013

Thiruvallikkeni Sri Parthasarathi Pushpa Pallakku


After 10 days of  Brahmothsavam, it is rest called ‘Vidayarri’ for Sri Partha Sarathi Perumal and after 10 days of rest, comes the florally bedecked ‘Pushpa Pallakku – the palanquin with flowers’. 

It looks beautiful and pervades goodness all around – treat to the eyes, ears and senses  of Bakthas. On the night of 13th May 2013,  Sri Parthasarathi had purappadu in Pushpa pallakku.  Owing to my Malainattu divyadesam trip, I could not attend this purappadu and have darshan.  Here are some photos taken by Sri  Koil Athan  Kasthuri Rangan [Sridhar]  Swami.  








பூக்கள் அழகானவை; நறுமணம் தர வல்லன.  பூக்களை அழகாக  தொடுத்து இறைவனுக்கு சாற்றி வழிபடுவது நெடுங்காலமாக உள்ளது.  ஒரு நாட்டில் அதிகமாக மலர்கள் காணப்படுவதனை வைத்தே அந்த நாட்டின் நீர்வளம், நில வளம், மக்களின் மனவளம், ஆகியவற்றை நன்கு உணரலாம். இதனைப் பழங்காலந்தொட்டு தமிழ்ப் புலவர்கள் தம் இலக்கியங்கள் வாயிலாகப் பிறர்க்கு உணர்த்தி வந்துள்ளனர். 

புஷ்பங்கள்  பற்றிய பல குறிப்புகள் சங்க தமிழிலும் நமது திவ்யப்ப்ரபந்தத்திலும் உள்ளன. சுவாமி நம்மாழ்வார் "மல்லிகை கமழ்தென்றலீருமாலோ வண்குறிஞ்சியிசை"  என்னும் போது  - மல்லிகையின் பரிமளத்தோடு கூடின  தென்றலையும்; வண் குறிஞ்சி இசை என்னும்  இடத்தில் 'செவிக்கினிய குறிஞ்சிப் பண் இசையையும்' குறிக்கிறார்- குறிஞ்சி என்று ஒரு நிலப்பரப்பும்; குறிஞ்சி என்று அரிய பூவினமும் உண்டு.   பெரியாழ்வார்  - "வலங்காதின் மேல்தோன்றிப் பூவணிந்து மல்லிகை வனமாலை மெளவல் மாலை" என - மேல்தோன்றிப்பூ,  மல்லிகை, செங்காந்தள் பூ,  காட்டுமல்லிகை மாலை இவற்றை குறிக்கிறார். 

புஷ்பப் பல்லக்கு  என்பது வாசம் தரும் நல்ல  மலர்களால் ஆனது.  திருவல்லிக்கேணியில்  பிரம்மோத்சவம் கண்டு அருளிய எம்பெருமான் பத்து  நாட்கள்  'விடாயாற்றி' என இளைப்பாறுகிறார்.  பிறகு மணம் தரும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 'புஷ்பப் பல்லக்கில்' புறப்பாடு கண்டு அருள்கிறார்.   பெருமாளுக்கு புஷ்பங்கள் சமர்ப்பித்தலும், அதற்கான நந்தவனத்தை பராமரித்தலும், உகப்பான கைங்கர்யங்களாக கருதப்படுகின்றன. நன்மலர்கள் எல்லா இடங்களிலும் அழகு தரும்.  எனினும் பூக்கள் அணிவதற்கு ஏற்ற சகல சௌந்தர்ய ஸௌகுமார்யங்களையும் தகுதியையும், முதன்மையும் உடையவர் - ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே.

நம்மாழ்வார் தனது திருவாய்மொழி "திண்ணன் வீடு" என்கிற பத்தில் : "தேவும் எப்பொருளும் படைக்கப்*   பூவில் நான்முகனைப் படைத்த*   தேவன் எம்பெருமானுக்கு அல்லால்*     பூவும் பூசனையும் தகுமோ ?  -  என வினவுகிறார்.  தேவர்களையும் மற்றை எல்லாப் பொருள்களையும்  உருவாக்குவதற்காக   நான்முகனை படைத்தவன். அத்தகைய தேவாதிதேவனான எம்பெருமானுக்கு  அல்லாமல் ஏனையோர்க்கு மலர்களும் மலர்களால் அர்ச்சித்து வணங்கும் வணக்கமும் தகுவன ஆகுமோ? ஆகா !!!! 

பெரியாழ்வார் கண்ணனது குழந்தை பருவத்தை வரிசையாக அனுபவித்து, அவருக்கு : செண்பகம், மல்லிகை, பாதிரிப்பூ, தமனகம், மருவு, செங்கழுநீர், புன்னை, குருக்கத்தி, இருவாட்சி, கருமுகை - என பல பல மலர்களை அணிந்துகொள்ளுமாறு வேண்டி அழைக்கிறார்.  பல்வேறு மணங்களை தரும் மலர்களை எல்லாம் கொணர்ந்தேன்,  இவைகளை இப்போதே சூடிக்கொள் என பிரார்த்திக்கிறார்.  

13.5.2013 அன்று இரவு, ஸ்ரீ பார்த்தசாரதி  சீர்மையுடன் அமைக்கப்பட்டு மணந்த புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு கண்டு அருளினார்.    அவ்வமயம்  எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே.

அடியேன் : ஸ்ரீனிவாச தாசன்.

Sunday, May 19, 2013

Vasantha Uthsavam at Thiruvallikkeni : Day 6– 19th May 2013.


Thiruvallikkeni Vasantha Uthsavam : Day 6– 19th May 2013.

Vasantha Uthsavam is being grandly celebrated in Thiruvallikkeni and today it was day  6.   Today it was the most beautiful sitting posture ~ the Emperor in total command~ with right hand on the bent knee and left hand holding Kathayutham.

Most of you can recall having darshan of Sri Parthasarathi in the same posture… yes, it was on the 2nd day of Brahmothsvam – morning Seshavahanam.  Here are some photos taken today as also the one on Sesha vahanam

Adiyen Srinivasa dhasan 




                                            and here is Perumal on Sesha vahanam