To search this blog

Tuesday, May 21, 2013

Thiruvallikkeni Sri Parthasarathi Pushpa Pallakku


After 10 days of  Brahmothsavam, it is rest called ‘Vidayarri’ for Sri Partha Sarathi Perumal and after 10 days of rest, comes the florally bedecked ‘Pushpa Pallakku – the palanquin with flowers’. 

It looks beautiful and pervades goodness all around – treat to the eyes, ears and senses  of Bakthas. On the night of 13th May 2013,  Sri Parthasarathi had purappadu in Pushpa pallakku.  Owing to my Malainattu divyadesam trip, I could not attend this purappadu and have darshan.  Here are some photos taken by Sri  Koil Athan  Kasthuri Rangan [Sridhar]  Swami.  








பூக்கள் அழகானவை; நறுமணம் தர வல்லன.  பூக்களை அழகாக  தொடுத்து இறைவனுக்கு சாற்றி வழிபடுவது நெடுங்காலமாக உள்ளது.  ஒரு நாட்டில் அதிகமாக மலர்கள் காணப்படுவதனை வைத்தே அந்த நாட்டின் நீர்வளம், நில வளம், மக்களின் மனவளம், ஆகியவற்றை நன்கு உணரலாம். இதனைப் பழங்காலந்தொட்டு தமிழ்ப் புலவர்கள் தம் இலக்கியங்கள் வாயிலாகப் பிறர்க்கு உணர்த்தி வந்துள்ளனர். 

புஷ்பங்கள்  பற்றிய பல குறிப்புகள் சங்க தமிழிலும் நமது திவ்யப்ப்ரபந்தத்திலும் உள்ளன. சுவாமி நம்மாழ்வார் "மல்லிகை கமழ்தென்றலீருமாலோ வண்குறிஞ்சியிசை"  என்னும் போது  - மல்லிகையின் பரிமளத்தோடு கூடின  தென்றலையும்; வண் குறிஞ்சி இசை என்னும்  இடத்தில் 'செவிக்கினிய குறிஞ்சிப் பண் இசையையும்' குறிக்கிறார்- குறிஞ்சி என்று ஒரு நிலப்பரப்பும்; குறிஞ்சி என்று அரிய பூவினமும் உண்டு.   பெரியாழ்வார்  - "வலங்காதின் மேல்தோன்றிப் பூவணிந்து மல்லிகை வனமாலை மெளவல் மாலை" என - மேல்தோன்றிப்பூ,  மல்லிகை, செங்காந்தள் பூ,  காட்டுமல்லிகை மாலை இவற்றை குறிக்கிறார். 

புஷ்பப் பல்லக்கு  என்பது வாசம் தரும் நல்ல  மலர்களால் ஆனது.  திருவல்லிக்கேணியில்  பிரம்மோத்சவம் கண்டு அருளிய எம்பெருமான் பத்து  நாட்கள்  'விடாயாற்றி' என இளைப்பாறுகிறார்.  பிறகு மணம் தரும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 'புஷ்பப் பல்லக்கில்' புறப்பாடு கண்டு அருள்கிறார்.   பெருமாளுக்கு புஷ்பங்கள் சமர்ப்பித்தலும், அதற்கான நந்தவனத்தை பராமரித்தலும், உகப்பான கைங்கர்யங்களாக கருதப்படுகின்றன. நன்மலர்கள் எல்லா இடங்களிலும் அழகு தரும்.  எனினும் பூக்கள் அணிவதற்கு ஏற்ற சகல சௌந்தர்ய ஸௌகுமார்யங்களையும் தகுதியையும், முதன்மையும் உடையவர் - ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே.

நம்மாழ்வார் தனது திருவாய்மொழி "திண்ணன் வீடு" என்கிற பத்தில் : "தேவும் எப்பொருளும் படைக்கப்*   பூவில் நான்முகனைப் படைத்த*   தேவன் எம்பெருமானுக்கு அல்லால்*     பூவும் பூசனையும் தகுமோ ?  -  என வினவுகிறார்.  தேவர்களையும் மற்றை எல்லாப் பொருள்களையும்  உருவாக்குவதற்காக   நான்முகனை படைத்தவன். அத்தகைய தேவாதிதேவனான எம்பெருமானுக்கு  அல்லாமல் ஏனையோர்க்கு மலர்களும் மலர்களால் அர்ச்சித்து வணங்கும் வணக்கமும் தகுவன ஆகுமோ? ஆகா !!!! 

பெரியாழ்வார் கண்ணனது குழந்தை பருவத்தை வரிசையாக அனுபவித்து, அவருக்கு : செண்பகம், மல்லிகை, பாதிரிப்பூ, தமனகம், மருவு, செங்கழுநீர், புன்னை, குருக்கத்தி, இருவாட்சி, கருமுகை - என பல பல மலர்களை அணிந்துகொள்ளுமாறு வேண்டி அழைக்கிறார்.  பல்வேறு மணங்களை தரும் மலர்களை எல்லாம் கொணர்ந்தேன்,  இவைகளை இப்போதே சூடிக்கொள் என பிரார்த்திக்கிறார்.  

13.5.2013 அன்று இரவு, ஸ்ரீ பார்த்தசாரதி  சீர்மையுடன் அமைக்கப்பட்டு மணந்த புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு கண்டு அருளினார்.    அவ்வமயம்  எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே.

அடியேன் : ஸ்ரீனிவாச தாசன்.

2 comments:

  1. brilliant writing sir, enjoyed the post as much as I would enjoy darshan of Perumal - Chandrika

    ReplyDelete
  2. Today only I enter in your kairavini karaiyinile block, I am very much happy about I am also resident of triplicane and your close friend - Adieyan Meiyur Adhi Sadagopan Dasan

    ReplyDelete