மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ
ஐயோ இவன் வடிவென்பதோர்
அழியா அழகு உடையான்!
— கவிச்சக்கரவர்த்தி கம்பர்
The ornate Sree Rama in wood – from the collection of Mr MA
Narasimhan. Kavi Chakravarthi Kamban
describes Rama's incomparable beauty in words that seem almost inadequate to
express it
வெய்யோன் ஒளி தன்மேனியின்
விரி சோதியின் மறையப்
பொய்யோ எனும் இடையாளொடும்
இளையானொடும் போனான்
மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ
ஐயோ இவன் வடிவென்பதோர்
அழியா அழகு உடையான்!
கம்பராமாயணம் – அயோத்தியா காண்டம், கங்கைப் படலம்,
பாடல் 1.
சூரியனின்
ஒளியே இராமபிரானின் திருமேனி ஒளியில் மறைந்துவிட, நுண்ணிய இடையுடைய சீதையுடனும் இளையவன்
இலக்குவனுடனும் சென்றான். இவன் உருவம் மையோ, மரகதமோ, அலைகடலோ, மழைமேகமோ என்று வியக்கத்தக்க,
சொல்லால் விவரிக்க இயலாத அழியாத பேரழகுடையவன்!
கங்கைப் படலம் : கங்கையைப் பற்றிய படலம் எனப்பெறும். காடு செல்லப் புறப்பட்ட இராமன் சீதையோடும்இலக்குவனோடும் வழிநடந்து, வழியில் உள்ள காட்சிகளைக் கண்டு மகிழ்ந்து, கங்கைக்கரை சேர்ந்து, அங்குள்ள முனிவர்கள் வர வேற்று உபசரிக்க, அதனை ஏற்று,
நீராடி, எரி ஓம்பி, அழுதுசெய்து தங்களை மகிழ்விக்குமாறு முனிவர் வேண்ட, சீதையோடு
கங்கையில் நீராடி, முனிவர்அளித்த விருந்தை ஏற்று அங்கே இருத்தலாகிய செய்திகள் இப்படலத்தில்
கூறப்படுகின்றன. இவைஅனைத்தும் கங்கையைச் சார்ந்து நிகழ்வன ஆதலின் இது கங்கைப் படலம்.
எனப்பெற்றது.
Thanks to MA Narasimhan for showing this ornate piece of art and
allowing it to be photographed and written.
19.10.2026

No comments:
Post a Comment