To search this blog

Friday, May 24, 2013

Thiruvallikkeni Sri Varadharajar Garuda Sevai

Dear (s)  
For a  Srivaishnavaite, Perumal Koil refers to “Sri Varadharaja Swamy temple’ at Kanchipuram.  Legend has it that Brahma performed Asvamedha yaga at mokshapuri i.e., Kanchi and Lord Vishnu emerged out of the fire with Sanku Chakram. It is believed that the annual Uthsavam was initiated by Brahma himself. Indira’s white elephant Iravatham took the form of a hill called Hastigiri on which shrine of Varadharajar is located. This Swami is known by various names, prominent among them being : Devarajar, Devathirajar, Thepperumal, Varadhar, PerArulalar …

The annual brahmothsavam is now on and today 24th May 2013  is the famous Garuda Sevai – when Lord is taken in procession on vahanam of Garuda also known as Periya Thiruvadi. Garuda was born to Kaashyapar and Vinathai (Vinathai siruvan siragu ena pasuram]

At Kanchipuram, there is the legend of Lord Devathirajar atop Garuda, hides away a few minutes, going to Sholinghur to give darshan to Dhoddacharyar – the  leela vinotham of PerArulalar – popularly known as Doddayachaaryar  Sevai.  More on that on my earlier post here :  Sri Doddachar Vaibhavam

Here are some photos taken this morning during the purappadu at Thiruvallikkeni. 

ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு 'பெருமாள் கோவில்' என்றாலே 'திருக்கச்சி தேவப்பெருமாள் சன்னதி' தான்!  பிரம்மன் மோக்ஷபுரியில் அஸ்வமேத யாகம் செய்யும் போது யாக குண்டத்தில் இருந்து சங்கு சக்கரங்களுடன் தேவாதி ராஜர் எழுந்து அருளி, அவருக்கு பிரம்மா ஏற்பாடு செய்த உத்சவமே பிரம்மோத்சவம் என ஐதீஹம்.   காஞ்சியிலே இப்போது பிரம்மோத்சவம் நடைபெற்று வருகிறது. இன்று [24th May 2013]  மூன்றாம் நாள்; காலை 'கருட சேவை'.

எம்பெருமானுக்கு எப்போதும் கைங்கர்யம் செய்யும் கருடாழ்வார் பெரிய திருவடி என சிறப்பிக்கப்படுகிறார்.  அழகான பட்டு உடுத்திய கருடனின் மீது பெருமாள் எழுந்து அருளும் கருட சேவை மிக அழகும் கம்பீரமும் நிறைந்தது.   கருடன், காச்யபர் என்கிற மகரிஷிக்கும் வினதைக்கும் பிறந்தவர். 

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில்  :
"அத்தியூரான் புள்ளையூர்வான், அணிமணியின்*
துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான், - முத்தீ*
மறையாவான் மாகடல் நஞ்சுண்டான்றனக்கும்
இறையாவான் எங்கள் பிரான்.  –

பெரிய திருவடியாம் கருடனை வாஹனமாகக் கொண்டவனும்,   அழகிய மாணிக்கங்களோடு கூடின ஆதிசேஷன் மேல் பள்ளிகொள்பவனும்,  மூன்று அக்நிகளாலே ஆராதிக்கப்படுகிறவனும்,  வேதங்களால் பிரதிபாதிக்கப்படுகிறவனும் ஆனவன் , எங்கள்பிரானான  திருக்கச்சி அருளாளன்  என மங்களாசாசனம் பண்ணியுள்ளார். 

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் கருட சேவை மிகவும் சிறப்பு வாய்ந்தது.  தேவப்பெருமாள் கருடனின் மீது ஆரோஹணித்து  கோபுர வாசலில் வரும்போது, தொட்டாசார்  சேவை என்பது பிரசித்தம்.   பெருமாள் காஞ்சியில் இருந்து, சோளிங்கபுரம் சென்று, தொட்டாசாருக்கு சேவை சாதித்து திரும்புவதாக ஐதீஹம்.

திருக்கச்சி தேவப்பெருமாள்    கருடவாஹனத்தில் சோளசிம்ஹபுரத்து குளக் கரையினிலே தமக்கு தரிசனம் தந்தது குறித்து நம் ஆச்சார்யர் சண்டமாருதம் தொட்டாசார்யார்  சுவாமி 'தேவராஜா பஞ்சகம் அருளிச் செய்தார். அதில் ஐந்தாவது ஸ்லோகம்  'ப்ரத்யக்  கோபுரம்முகே  தினமுகே பக்ஷீந்த்ர சம்வாஹிதம்....... " ..... காஞ்சியில் மூன்றாம் நாட்காலை அருணோதய காலத்தில் கோவில் மேற்கு கோபுர வாசலில் வரதர் கருட வாஹனத்தில் காட்சி தருகிறார் .  ஒப்பற்ற  வெண்கொற்றக் குடைகள் நிழலற்ற வெண்சாமரைகள் வீச வேதியரும் பிறரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய, பேரிகாஹனம் போன்ற இசைக்கருவிகள் முழங்க வரும் வரதனை புண்ணியம் செய்தவர்கள் கண்டு களிக்கின்றனர் - என்பது இப்பாட்டின் அர்த்தம். 

இன்று காலை திருவல்லிக்கேணியில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கருட வாஹனத்தில்  புறப்பாடு கண்டு அருளிய போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே

அடியேன் : ஸ்ரீனிவாச தாசன்.






and finally the Garuda SEva at Thiru Kachi sent by a friend of mine...

No comments:

Post a Comment