Sri Parthasarathi Perumal after theerthavari thirumanjanam – Special bramothsavam 2022
To search this blog
Wednesday, October 4, 2023
Thirumylai Madhavar - வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
Life is better spent not worrying about material things - by worshipping and singing paeans in praise of the lotus of feet of Bhagwan Sree Krishna, who was born in Mathura and protected dharma.
Here is a
beautiful pasuram of Swami Nammazhvar from his Thiruvaimozhi and a photo of
Thirumylai Sri Madhava Perumal taken during Suryaprabhai purappadu on the occasion
of Ratha sapthami in 2022
வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவிப்
போழ்து போக உள்ளகிற்கும் புன்மை இலாதவர்க்கு
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
வீழ் துணையாப் போம் இதனில் யாதும் இல்லை மிக்கதே
வாழ்க்கையின்
அவலங்களை மறங்கோள்!! மாயவன் எம்பெருமான் ஸ்ரீமந்நாரணன்
திருவடிகளைப் போற்றிப் பாடுவதிலேயே ஒவ்வொரு நாளும் செல்லவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்,
சிறந்தவர்கள், அவர்களுக்கு வாழ்க்கைத் துணைவனாக வடமதுரையிலே பிறந்த எம்பெருமான், அவனுடைய
வளம் நிறைந்த புகழே அவர்கள் விரும்பும் துணையாகும், இப்படி வாழ்வதே நல்ல குணம், இதைவிடச்
சிறந்தது ஏதுமில்லை.
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
4.10.2023
Monday, October 2, 2023
திருவல்லிக்கேணி கண்டேனே ! கோபுர தர்சனம் ! ஸ்ரீ நரசிம்ஹர்
திருவல்லிக்கேணி கண்டேனே ! கோபுர தர்சனம் ! ஸ்ரீ நரசிம்ஹர்
ஸ்ரீய:பதியான
எம்பெருமான் அர்ச்சா ரூபியாய் உகந்து எழுந்தருளியிருக்கும் திவ்யக்ஷேத்திரங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலம் நம்
திருவல்லிக்கேணி. தேசங்களுள் மிகவும் புராதனமாய், நாரதாதிகளால்
பாராட்டப்பெற்று, பரமரிஷிகள் தங்களது தவத்திற்கு ஏற்றதான ஸ்தலம் என்று பெரிதும்
விரும்பப்பெற்று, துளஸிவனம் என்று எங்கும் ப்ரஸித்திபெற்ற திருவல்லிக்கேணி திவ்யதேசம் முன்னொரு காலத்தில் துளசி செடிக்கள்
நிறைந்த ஆரண்யம் (காடு) ஆக இருந்தது. இத்தலத்திற்கு
'கைரவிணி, பிருந்தாவனம், ப்ருந்தாரண்யம், துளசீவனம்' - என பல பெயர்கள் உண்டு.
அல்லி அல்லது ஆம்பல் என்பது நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். திருவல்லிக்கேணி பெயர் அமையக் காரணமானது அல்லி மலர்கள் நிறைந்து இருந்த திருக்கோவில் குளம் - கைரவிணி புஷ்கரிணி. நம் பகவத் ராமானுஜர் பிறக்க சோமயாஜி வேண்டி தவம் இருந்த குளம் இது.
வேதங்கள் கர்மபாகம், ப்ரஹ்மபாகம் என்று பிரிவுடையது. கர்மபாகம் பகவானுடைய ஆராதனங்களான
கர்மாக்களைச் சொல் லும். பிரஹ்மபாகம் பகவானுடைய
ஸ்வரூப ரூபகுண விபூதிகளைச் சொல்லும். வேத முதல்வன்
என ப்ரதிபாதிக்கப்படும் எம்பெருமான் ஸ்ரீமந்நாரணனை அனுதினமும் சேவிப்பது நம் புண்ய
பலன்.
தொண்டை மண்டலத்தில் "துண்டீரம்" என்றும் அழைக்கப்பட்ட நாட்டை "சுமதி" என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு திருமலை திருப்பதியில் கோவில் கொண்டுள்ள "திருவேங்கடமுடையான்" மீது தீவிர பக்தி - இந்த அரசனுக்கு, பார்த்தனுக்கு (அர்ச்சுனனுக்கு) சாரதியாக (தேரோட்டியாக) விளங்கிய கிருஷ்ணன் இத்தலத்தில் குடும்ப சமேதராக சேவை அளித்தார். இங்கே இரண்டு கோபுரங்கள்- கிழக்கு மேற்கு, இரண்டு கொடிமரங்கள். ஸ்ரீ வேங்கடகிருஷ்ணன் (ஸ்ரீபார்த்தசாரதி உத்சவர்) ஆண்டாள்; ஸ்ரீவேதவல்லி சமேத ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீ ராமபிரான், ஸ்ரீ கஜேந்திர வரதர், ஸ்ரீயோக நரசிம்மர் (உத்சவர் தெள்ளிய சிங்கர்) மற்றும் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் சன்னதிகள் அழகாக அமைந்துள்ளன.
கிழக்கு
ராஜகோபுரம் மற்றும் பிற கட்டமைப்புகள் தொண்டமான் சக்ரவர்த்தி முதலில் கட்டியிருந்ததாகக்
கூறப்படுகிறது. . ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி
சன்னதியின் ஆனந்த விமானம், ஸ்ரீ ரங்கநாதர் சன்னதி, ஸ்ரீ ராமர் சன்னதி, ஸ்ரீ வேதவல்லி
தாயார் சன்னதி, ஸ்ரீ நரசிம்மர் சன்னதி, மற்றும் ஸ்ரீ ஆண்டாள் சன்னதிகளின் விமானங்களும் அழகுற அமைந்துள்ளன. எம்பெருமான் தம் விமானங்கள் மிக புண்ணியம் தருபவை. திருவரங்கம் - பிரணவாகார
விமானம்; திருப்பதி - ஆனந்த நிலைய விமானம்;
திருக்கச்சி - புண்யகோடி விமானம்; திருக்கண்ணபுரம்
- உத்பலாவதாக விமானம் - என இங்கே : ஆனந்த விமானம்
இங்கே நாம் சேவிக்கும் அற்புத நரஸிம்ஹ மூர்த்தி ஆனந்த விமானத்தில்
எழுந்து அருளி உள்ளார். தங்க தகடுகள் பதித்த
அற்புத விமானத்தின் சேவை இங்கே.
Holy darshan of Sri Narasimha with His consorts – on the
Golden plated Anandha Vimanam at Thiruvallikkeni divyadesam
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
2.10.2023
Sunday, October 1, 2023
Thiruvallikkeni Purattasi Sani 2 ~ 2023 : மேவி அரியுருவ மாகி இரணியன தாகம்
Thiruvallikkeni Purattasi Sani 2 ~ Sri Azhagiya Singar purappadu 2023
The tamil month of Purattasi has a pride of place. Devotees throng Vishnu temples, especially Tirupathi. In this month, occurs the annual Brahmothsavam at Tirupathi. It is also the month of ‘Navrathri’ festival. Navarathri festival also comes in this month, this year starting from Sunday, 15.10.2023.
Devotees in large numbers visit Thiruvallikkeni Divyadesam. Every Saturday of the month of Purattasi, there will be Periya maada veethi purappadu of Lord Azhagiya Singar. Today 30th Sept 2023 was Sani varam 2 and at Thiruvallikkeni divyadesam, there was grand Purappadu of Sri Azhagiya Singar.
எவ்வளவு அழகு ! ~ அதி அற்புதமான ஸ்வபாவலாவண்யமுடைய திருமேனி, மிக அழகான கிரீடம், நறுமணத்தை பரிமளிக்கும் மலர் மாலைகள்; நேர்த்தியாக சாற்றப்பட்ட ரம்மியமான வஸ்திரங்கள்; உபயநாச்சிமார் அழகான மஞ்சள் பட்டாடைகள், தெள்ளியார் இளஞ்சிவப்பு வஸ்திரம், திருமார்பிலே நீலமேகம், தங்க பூணூல் தரித்து - அழகாக வடிவமைக்கப்பட்ட “தோளுக்கு இனியான்” - * இன்று மாலை திருவல்லிக்கேணியில் புரட்டாசி சனிக்கிழமை புறப்பாட்டில் அருள்மிகு அழகிய சிங்கர் அருள் பாலித்தார்.
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி,
மாவலனாய்க் கீண்ட மணிவண்ணன்,
மேவி அரியுருவ மாகி இரணியன தாகம்,
தெரியுகிரால் கீண்டான் சினம்.
எம்பெருமானிடத்திலே சரணம் புகுந்தவன் எவரையும் அஞ்ச வேண்டியதில்லை. காருண்ய சீலனான எம்பெருமான், தனது பக்தர்களுக்கு துன்பம் தருபவர்களிடத்தில் சீற்றம் கொள்வான் என்பதை நாம் உணர்ந்தால், எத்தகைய பகைவர்க்கும் நாம் அஞ்சவேண்டாமன்றோ?
நீலமணி போன்ற வடிவையுடைய மாயக்கண்ணன், இடையனாய்ப் பிறந்து பசுக்கூட்டங்களை மேய்த்து, புல்லாங்குழலை ஊதி அனைவரையும் மகிழ்வித்து இருந்த காலத்தில், குதிரை வடிவு கொண்டுவந்த கேசி என்னுமசுரனை கிழித்தான். தனது பக்தன் மீது கொண்ட மிகையான அன்பாலே, பொருத்தமான நரசிங்க வடிவங்கொண்டு இரணியனது முரட்டுடலை நகங்களினால் கிழித்த நரசிங்கனது, சீற்றத்தை (நெஞ்சமே!) தெரித்துகொள்.: பேயாழ்வாரின் அமுத வரிகள் .
Sri Peyalwar in his Moonram Thiruvanthathi – gives this
wonderful piece of advice. One who has dedicated self to the lotus feet
of Sriman Narayana need not fear anything, especially that of his foes. Here are some photos taken during today’s periya maada veethi
purappadu.
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
30th Sept 2023.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)