To search this blog

Friday, November 7, 2025

Theroor Pudugramam Sri Udhaya Marthanda Vinnagara Perumal thirumanjanam

Theroor  Pudugramam Sri  Udhaya Marthanda Vinnagara Perumal thirumanjanam

 

 


‘மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல

மாதவம் செய்திடல் வேண்டுமம்மா...’ 

பெண்கள் பெருமையை உயர்த்தி கூறும் இந்த இரண்டு வரிகள் நன்கு அறிவீர்கள் ! - இதன் அடுத்த வரிகள் தான் என்ன ! - இதை எழுதியவர் யார் தெரியுமா ?  அடுத்த இரண்டு வரி மிக மிக இனிமையான வரிகள் ....

பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ - இந்தப்

பாரில் அறங்கள் வளரும், அம்மா!

 

பெண்கள் கை பார்த்துதான் இந்த உலகில் அறங்கள்  வளர்கின்றன.பெண் இல்லாவிட்டால் அறம் எங்கே வளரப் போகிறது ? அவள் பால் நினைத்து ஊட்டும் தாய். பெண்மையின் சிறப்பை கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் வார்த்தைகளில் அனுபவியுங்கள் !!    

 

அல்லும் பகலும் உழைப்பவர் ஆர்? - உள்ளத்து

அன்பு ததும்பியெழுபவர் ஆர்?

கல்லும் கனியக் கசிந்துருகித் - தெய்வ

கற்பனை வேண்டித் தொழுவர் ஆர்?

 

Kavimani Desigavinayagam Pillai (27 July 1876 – 26 September 1954) was a renowned Tamil poet from the village of Theroor in the Kanyakumari district of Tamil Nadu, India. His works encompass a wide range of genres including devotional songs, literary and historical poetry, children's songs, nature poems, social themes, and nationalistic verses. He was particularly noted for his contributions to children's literature in Tamil. Theroor, his birthplace is in Kanniyakumari.

தேரூர் (Theroor), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.  தேரூக்கு, கிழக்கில் மருங்கூர் ஊராட்சி, 3 கி.மீ.; மேற்கில் நாகர்கோவில் 8.10 கி.மீ.; வடக்கில் வெள்ளமடம் 2 கி.மீ.; தெற்கில் சுசீந்திரம் 2 கி.மீ. தொலைவில் உள்ளன. 

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொண்டு பல கவிதைகள் பாரதியார் வழியில் பாடியவர் கவிஞர்  கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை .   காந்தி, பாரதி, போன்ற விடுதலைப் போராட்டத் தலைவர்கள் குறித்து கவிதைகள் புனைந்தவர்,  ஆராய்ச்சி, வரலாறு, அறிவியல், வாழ்வியல், குழந்தைகளுக்கு நல்லவை அறிவுறுத்துதல், இயற்கை, இறை வழிபாடு என பல துறைகளில் பாடல்கள் புனைந்தவர் ,  பெண்ணடிமைத் தனத்தை எதிர்த்தவர். 

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.  சிவதாணுப்பிள்ளை -ஆதிலட்சுமி தம்பதியர்க்கு இரண்டு பெண் குழந்தைகளை அடுத்து மூன்றாவதாகத் தேசிக விநாயகம் பிறந்தார். இரண்டு பெண்களுக்குப்பின் பிறந்த ஆண் மகவுக்குத் தான் வணங்கும் தேசிக விநாயகரின் பெயரை வைத்தார் சிவதாணுப்பிள்ளை. ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார். எம். ஏ. படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து, தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். உமையம்மை எனும் பெண்ணை 1901ல் மணம் முடித்தார்.   

மலரும் மாலையும், ஆசியஜோதி, உமர்கய்யாம் பாடல்கள், நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் ஆகியவை கவிமணியின் கவிதைத் திறத்துக்கு முன்னுதாரணம். சிறந்த மொழிபெயர்ப்பாளரான கவிமணி எழுதிய ’தேவியின் கீர்த்தனங்கள்’ என்ற இசைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பாடல்களை இப்போதும் பல இன்னிசை வித்தகர்கள் மேடையில் பாடி வருகின்றனர். கௌதம புத்தரின் வரலாற்றையும், அவர்தம் கொள்கைகளையும் விளக்கும் ஆசியாவின் ஜோதி எனப்படும் நூல், பெருந்துறவு எனும் துணைத்தலைப்புடன், 1832-ஆம் ஆண்டு பிறந்த எட்வின் அர்னால்டு எனும் ஆங்கிலேயக் கவிஞரால் ஆங்கிலத்தில் கவிதை நடையில் எழுதப்பட்டு,  உலகின் பெரும்பாலான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இம்மூல நூலைத் தமிழில் தேசிக விநாயகம் பிள்ளை, ஆசிய ஜோதிஎனும் தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார்.   

குழந்தைகளுக்காக பல எளிமையான, இனிமையான கவிதைகளைப் படைத்தவர் கவிமணி. குழந்தைகளுக்காக அவர் இயற்றிய பாடல்களில் பல தமிழகப் பாடப் புத்தகங்களில் பாடங்களாக இடம் பெற்றுள்ளன.

“தோட்டத்தில் மேயுது  வெள்ளைப்பசு – அங்கே

துள்ளிக் குதிக்குது  கன்றுக்குட்டி

அம்மா என்றது  வெள்ளைப்பசு – உடன்

அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி”

எளிமையும், இனிமையும் கொண்ட இந்த பாடல் குழந்தைகளுக்கு பிற உயிர்களின் உணர்வுகளையும், அன்பையும் எளிதாக விளக்கும். கவியின் மணிமொழிகளாக இவரது கவிதையில்  கருத்தும், நயமும் ஒலித்ததால் தமிழறிஞர்கள் குழு அவருக்கு கவிமணி என்ற பட்டத்தை பரிந்துரை செய்தது. 1940-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உமாமகேஸ்வரம் பிள்ளை இவருக்கு ‘கவிமணி’ பட்டம் வழங்கினார். ‘தேசிய விநாயகத்தின்      கவிப்பெருமையை தினமும் கேட்பது என் செவிப்பெருமை’ என நாமக்கல் கவிஞர் பாராட்டியுள்ளார்.  1954-ம் ஆண்டு, கவிமணி தனது எழுபத்தி எட்டாவது வயதில் தனது மனைவியின் ஊராகிய புத்தேரி என்கிற ஊரில்   மறைந்தார். 

 

Kavimani Desigavinayagam Pillai was also an epigraphist and essayist, who had published research papers based on his studies in Tamil and English. One of his famous essays was on the Chola period inscription, Kanthalur Salai Kalamarutharuli, which talks about Raja Raja’s battle against the Chera kingdom. 

The battle of Kandalur salai (c. 988 CE), was a naval engagement of the Cholas under Rajaraja I (985—1014 CE) against the "salai" at Kandalur in south Kerala.  The exact location of Kandalur—somewhere south Kerala—is a subject of scholarly debate. The above (988 CE) event is sometimes assumed to be identical with the "conquest of Vizhinjam by a general of Rajaraja [I]", before the "burning of Lanka", described in the Tiruvalangadu Grant/Plates. The phrase "Kandalur salai kalamarutta" is again used as a title with distinction of three other Chola emperors also (Rajendra, Rajadhiraja and Kulottunga).

 




இராஜராஜ சோழன் ஆட்சி முறையில் மட்டுமின்றி, அரசியல் நெறிமுறைகளிலும் சில புதிய போக்குகளை உருவாக்கினார்; இராஜராஜ சோழனின் முதன்மையான வெற்றி காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளிய நிகழ்வே!    இம்மன்னனின் நான்காவது ஆட்சி ஆண்டிலிருந்து (கி.பி. 988) இந்த அடைமொழி இராஜராஜனின் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. “சாலை கலமறுத்தளிய கோராஜகேசரி வன்மரான ஸ்ரீ ராஜராஜ தேவன்” என்றும், “காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளிய ஸ்ரீ ராஜராஜ தேவன்” என்றும் இரண்டு விதமாகக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.  கலமறுத்து என்பது “சேரர்களின் கப்பல்களை அழித்து, அதாவது சேரர்களின் கடற்படைப் பலத்தைத் தகர்த்து” என்று சிலர் பொருள் கொண்டுள்ளனர். கலமறுத்தல் என்பது வில்லங்கம் தீர்த்தல் என்ற பொருளில் பயன்படுத்தப்படுவதும் உண்டு.   

********************************


இத்தகைய சிறப்பு வாய்ந்த கன்னியாகுமரி / நாகர்கோயில் அருகே அமைந்துள்ள  தேரூர் புதுக்கிராமத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ உதய மார்த்தாண்ட விண்ணகர எம்பெருமாள் கோவில் அமைந்துள்ளது.  இந்த திருக்கோவில் திருமஞ்சனம் காணொளி இங்கே.  :  https://youtube.com/shorts/en6VlwBZNO8

 
-Srinivasan Sampathkumar
7.11.2025
Thankfully acknowledge the photos and thirumanjanam shared by my good friend Mr V Thiruvambalam. 

No comments:

Post a Comment