திருமலை அடையும்போதே கோவிந்த நாமம் எங்கும் ஒலிக்கும். திரும்பும் பக்கமெல்லாம்,மொட்டை அடித்துக்கொண்ட பக்தர்களை காணலாம்.
The
light of the universe shines at this Holu Thirumala – to the devotees of
Thirumalai Vengadamudaiyan, eternal
birth is a shadow
విశ్వప్రకాశునకు
వెలియేడ లోనేడ
శాశ్వతునకూహింప
జన్మమికనేడ
Viswa
prakasunaku veli eda loneda
saswatuna
kuhimpa janma mika neda
(Annamayya keerthana)
எம்பெருமான் உறையும் திவ்யதேசங்கள் சென்று சேவித்தல் பக்தர்களுக்கு சிறப்பு. ஏழுமலைகள் இடையில் ஸ்ரீனிவாசப்பெருமாள் வாசம் செய்யும் உயர் திருவேங்கடமாமலை மிக மிக சிறப்பு வாய்ந்தது. நாள்தோறும் லக்ஷக்கணக்கான பக்தர்கள் அவ்வெம்பெருமானின் சில நொடிகள் தர்சனம் காண மலையேறி வருகிறார்கள்.
திருமலை திருப்பதி திருக்கோவிலில் ஸ்ரீவெங்கடேஸ்வரர் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு சகல வரங்களையும் அளித்து, அவர்கள் சிறப்புற வாழ அருள் பாலிக்கிறார்.
திருமலை என்றாலே - அவர் தம் மஹா பிரசாதம் ஆன சிறப்பான லட்டும், பக்தர்கள் திருக்கோவிலில் வழங்கும் காணிக்கைகளும் நினைவில் வரும் - காணிக்கைகளில் ஒரு சிறப்பு - 'முடி காணிக்கை' - அதாவது மொட்டை போடுதல் (Tonsuring / shaving off head). இந்த புனிதமான கோவிலில் பல சடங்குகள் மற்றும் மரபுகள் செய்யப்படுகின்றன. இங்கு யார் தன் தலைமுடியைக் காணிக்கை செய்கின்றாரோ, அவரது அனைத்து பாவங்களும் நீங்கும். தலைமுடி இறங்கியதைப் போல அவரது பாரங்களும் இறங்கிவிடும். அவரது வாழ்க்கையில் அனைத்து கஷ்டங்களும் நீங்கும் என்பது லட்சோபலட்சம் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த சடங்கை தவறாமல் செய்து வருகின்றனர்..
மனிதர்களுக்கு அழகாக இருத்தல் பிடிக்கும். சிகை அலங்காரம் முக்கியமாக பெண்கள் மிக விரும்புவது. அந்த அழகான தலை மயிரை மழித்து, இறைவனுக்கு காணிக்கையாக சமர்ப்பித்தால் - அகந்தை அகன்று, அடக்கம் பிறக்கிறது எனலாம்.
எம்பெருமான் இவ்வாறுதான் பக்தி செய்யவேண்டும் என விதிப்பதில்லை - பக்தர்கள் அவர் அவர் வழிவகையாக பல்வேறு விதமாக எம்பெருமானை வேண்டி வணங்குகின்றனர். அவ்வடியவர்கள் அனைவருக்கும், ஏழுமலையான் சிறப்புற அருள் தந்து காத்தருள்கிறான்.
கோவிந்தா, கோவிந்தா என மனமுருக அவன் நாமங்கள் சொல்வோம், நல்வழி அடைவோம்.
திருமலை இறைவா போற்றி.
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
No comments:
Post a Comment