To search this blog

Thursday, February 20, 2025

Masi Hastham 2025 – Sri Varadharajar purappadu

Masi Hastham 2025 – Sri Varadharajar purappadu

 


நம் மரியாதைக்குரிய ஒருவர் நம்மை விளித்தால், நாம் அமர்ந்து இருக்கும் இடத்திலிருந்து எழும் முன்னரே - 'இதோ வந்து விட்டேன்' என கூறுவோம் ! ~ இது நடக்கப்போகும் காலத்தை இறந்த காலத்தில் கூறுவதும் அல்ல, பொய்யான வாய்மொழியும் அல்ல ! - நம் பரபரப்பையும், உடனடி செயல்பாட்டையும் வெளிப்படுத்தும் எண்ணம் அதுவே ! 

திருமழிசைப்பிரான் - அனைத்து பாகவத ச்ரேஷ்டர்கள் எம்பெருமானை நினைந்து அவன் திருவடி சரணாகதி அடைந்தால் என்ன ஆகும் ? கொடிய நரகத்தின் வாயில்கள் புல்மூடிப்போகும்  என்கிறார் !


It is yet to sink in ~ we feel as if it was just yesterday.  2020 started well with Irapathu Uthsavam, then came Pongal, Ekkadu Thangal, Masi Magam, Ratha Sapthami, Theppothsavam, Thavana Uthsavam.  On 11.3.2020 was Masi Hastham – and it was   Thavana Uthsavam for Devathirajar.  At  Thiruvallikkeni divyadesam, Sri Varadharajar had purappadu in the morning to the vast expanse in Thulasinga Perumal Koil Street; Perumal had Thirumanjanam; in the evening purappadu inside the bungalow and at around 0630 pm periya mada veethi, kulakkarai purappadu back to sannathi,   and from 20.3.2020 sadly, Temples were ordered to be closed – whole Nation was under lockdown 

இதோ இங்கே திருமழிசைப்பிரானின் நான்காம் திருவந்தாதியில் இருந்து ஒரு பாசுரம் : 

விரைந்தடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க,

கரந்துலகம் காத்தளித்த கண்ணன் - பரந்துலகம்

பாடின ஆடின கேட்டு,  படுநரகம்

வீடின வாசற் கதவு.

 

இவ்வுலகத்தோர் அனைவருமே எம்பெருமானின் பக்கல் ஈர்க்கப்பட்டவர்களே !   சிறந்த பாகவத உத்தமர்கள் பக்தி பரவசத்தால்  எங்குத் திரிந்து பாடின பாடல்களையும், ஆடின ஆட்டங்களையும்  கேட்டதனால் குரூரமான நரகங்களின் வாசல்களிலிருந்த கதவுகள் விட்டொழிந்தன (நரக வாசல்கள் பாழாய்ப் போயின).   முன்னொரு காலத்தில் பிரளய வெள்ளம் பரவினபோது, உலகங்களை யெல்லாம் தனது திருவயிற்றில் மறைத்து,  காத்து, துன்பங்களைப் போக்கி ரக்ஷித்த கண்ணபிரானை சீக்கிரமாகச் சென்று பணியுங்கோள்.  அவ்வாறு அவனிடத்திலே சேர்ந்தோருக்கு எல்லாமே நலமே என்று உரைக்கிறார் - திருமழிசை ஆழ்வார். 

Here are some photos of Masi Hastham  purappadu of Sri Varadha Rajar on 16.2.2025
 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar










 

  

No comments:

Post a Comment