To search this blog

Thursday, September 5, 2024

Thiruvallikkeni Uriyadi Purappadu : Punnaikilai vahanam 2024 ~ உறியடி திருவிழா

 

Everyone in Thiruvalikkeni would instantly remember the purappadu, the day after the birth of Lord Sri Krishna   ~  when our Emperuman Sri Krishna was born  -  Sri Periyazhwar sings that – people living in those beautiful mansions, spilled oil and turmeric powder on one another, in celebrations thus slushing the portico of Sri Krishna’s house.  .. .. ..  next day occurs the grand Uriyadi purappadu of Sri Parthasarathi in Punnaikilai vahanam.   

 


பெரியாழ்வாரின் 'பெரியாழ்வார் திருமொழி  பாடல்கள் எம்பெருமான் கண்ணனது பிறப்பை ஆனந்திப்பது “வண்ண மாடங்கள் சூழ்  .. .. கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்”  என துவங்குகிறது.  திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமான் திருவாய்ப்பாடியில் நந்தகோபர் திருமாளிகையில் ஸ்ரீக்ருஷ்ணனாக அவதரித்தவளவில் அங்குள்ளவர்கள் எல்லோரும் அளவுகடந்த ஆநந்தமடைந்து, எண்ணையையும் மஞ்சள் பொடியையும் ஒருவர்மேல் ஒருவர் தூவிக் கொள்ளவே அவ்விரண்டும் கீழேவிழுந்து ஒன்று சேர்ந்து அந்தத் திருமாளிகையின் முற்றம் முழுவதையும் சேறுமயமாக  ஆக்கியதாம் !!

 



A few  years ago read this news item in The Hindu – Tamil that read “உரி அடிக்கும் விழாவில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை” : உச்ச நீதிமன்றம்.. .. திருக்கோவில் பஞ்சாங்கத்திலும்  - உரியடி  என்றே உள்ளது.  இது தமிழில் தவறான சொல்லாடல் !! கண்ணனது பிறந்த நாள் கொண்டாட்டங்களில் முக்கியமான ஒன்று  உறியடி  திருவிழா உரியடி  அல்ல !! திருவல்லிக்கேணியில் உள்ள யாதவர்கள் இந்நாளில் உறியடி திருவிழாவினை சிறப்பாக கொண்டாடுவர்.   உரிச்சொல் என்பதுஒன்றுக்கு ஒன்று உரிமை உடையதாக விளங்கும் சொல்.  தமிழில், உரி என்கிற வினைசொல்லுக்கு, தோலை நீக்கு' அல்லது ஒரு  முகத்தல் அலகு'  என்றே பொருள்படும்.  உறி என்ற பெயர்ச்சொல் பண்டங்கள், தயிர் போன்றவை வைக்கும் பொருட்டு தொங்கவிடும் உறி – எனவே இது உறியடி.






பெரியாழ்வார் திருமொழியில் - திருவாய்ப்பாடியிலே ஆயர்கள்,  கண்ணன் பிறந்த ஸந்தோஷம் உள்ளடங்காமல், நெய்யும் பாலும் தயிருமிருக்கிற உறிகளை அறுத்துக் கொண்டுவந்து முற்றத்திலே உருட்டிவிட்டு ஆடினார்கள் என்கிறார்.  ஆயர்கள் வீட்டில் பால், வெண்ணை, தயிர் நிறைய இருக்கும் - அவற்றை வியாபாரமும் செய்து பெருக்குவர்.  அவற்றைக்கூட தள்ளி உடைத்து கொண்டாடினர் என்றால் அன்று அவர்கள் எவ்வளவு ஆனந்தித்து இருக்க வேண்டும் ! இதோ ஒரு பாசுரம் :  

உறியை முற்றத்து உருட்டி  நின்றாடுவார்

நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார்

செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து  எங்கும்

அறிவழிந்தனர் ஆய்ப்பாடி   ஆயரே.  

திருவாய்ப்பாடியிலுள்ள  ஆயர்கள் - தங்கள் இடைச்சேரியில் கண்ணபிரான் பிறந்து இருப்பதை கேட்டு ,  பால் தயிர் சேமித்து வைத்துள்ள உறிகளை,  வீட்டு  முற்றத்திலே உருட்டிவிட்டு,  நறுமணம் மிக்க நெய்யையும் பாலையும் தயிரையும் பலருக்கும் தானம் பண்ணியும் , பெண்கள் தமது நெருங்கி மெத்தென்றிருக்கிற கூந்தல் அவிழ்ந்து கலையும்படி நர்த்தனம் பண்ணியும்  - கோகுலமெங்கும்  தங்கள் மெய் மறந்து கூத்தாடி ஆனந்தம் கொண்டாடினர்  

*உறியடி ஸ்ரீகிருஷ்ண பகவான் திருவிழா* - யாதவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பெருவிழா.  உறியடி திருவிழாவில் - ஒருவர் தன் கையில் உள்ள கொம்பு கொண்டு ஆடிக்கொண்டு இருக்கும் உறியை அடிக்க முயல - மற்றவர்கள் அவர் மீது - ஒரு கூம்பு வடிவு கொண்ட குழல் மூலம் தண்ணீரை வேகமாக அடிப்பார்கள்.  இது சாட்டை போன்று அடி விழும் .. .. .. இதன் வலிமையை தாங்க முடியாமல் மேலும் தலையை தூக்கி உறியை பார்க்க முடியாமல்  - ஆடுபவர் வெளியேறிவிடுவார்கள்.

Having celebrated the birth of Lord Krishna on 27.8.2024,  lot more flows.   Lord Krishna was born in every house of His devotees; everyyear , on the next morning  there would be purappadu of Bala Krishnan [Kalinga Narthana kannan] visiting various places.  At Thiruvallikkeni,   dancing Krishna would have purappadu  in Sesha vahanam – ‘butter and milk’ is offered to Him.  

In the evening, occurs  the grand purappadu of Sri Parthasarathi, as ‘Krishna with flute’ in beautiful sitting posture on ‘Punnai tree’ [Pinnakilai vahanam].  BalaKrishnar would be there in the vahanam too.   On this occasion, ‘uriyadi’ – the game of hitting the hanging object [with hidden gifts inside]  with sticks  is played, specially by Yadavas (the cowherds), the clan of Lord Krishna Himself.  The game is very fierce as the clubbing with a stick is made most tough with  others fiercely throwing  water on the player.  The water twirled out of cone shaped pitchers would flow like a whip and can cause some pain too, when struck.  This is a traditional game.   

Triplicane has a fair sprinkling of Yadavas and there would be  uriyadi at the entrance of the Temple and a bigger one at Singarachari Street nearer Nagoji Rao Street intersection. Here are some photos of Uriyadi  purappadu  of Sri Parthasarathi in Punnaikilai vahanam .  One can have darshan of  Lord Krishna at the feet of Lord Parthasarathi, sitting on Punnaikilaivahanam.  Couple of photos depict the sticks for *Uriyadi* being placed before our Emperuman Sri Parthasarathi and being blessed with strands of jasmine that adorned Him. 

At Thiruvallikkeni divyadesam it is a rare occasion when there is no arulicheyal goshti.  In  Uriyadi  purappadu,  Yadavas have prominence ~   group of kids and a couple of elderly persons with sticks in hand for Uriyadi  would come in procession chanting  Govinda on their lips.   The gosham would be something like “  

§  Paraalum Venkatesa perumalukku oru Govindam podu (others in chorus) – Govindha, Govindha !

§  "maayanukku oru Govindam podu da" - Govindha, Govindha

§  Namma Parthasarathi perumalukku oru Govindham podu : Govindha, Govindha

§   ‘may be there exists  no written script or pattern but rhyme and more of devotion in their chant which delighted other bakthas. Perhaps in a place like Thirumala, more devotees would have joined the chorus of singing the names of Govindha !  

 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
4.9.2024












No comments:

Post a Comment