To search this blog

Monday, September 16, 2024

Thiruvallikkeni Pavithrothsavam 3 - 2o24 ~ புனந்துழாய் மாலையான் பொன்னங்கழற்கே

 

Thiruvallikkeni Pavithrothsava purappadu 3 - 2o24



இன்று 15.9.2024, திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே திருப்பவித்ரோத்சவத்திலே மூன்றாம் நாள்.  ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் சிறிய மாடவீதி புறப்பாடு கண்டருளினார்.  பல்வேறு உத்சவங்களில் ஆவணி மாதம் நிகழும் பவித்ரோத்சவம் சிறப்பு வாய்ந்தது. பவித்ரம் என்ற சொல்லுக்கு 'சுத்தம் அதாவது பரிபூரணமான அப்பழுக்கு இல்லாத ஒன்று' என்று பொருள் கொள்ளலாம்.   இன்று மாலை நம் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள், பெரிய  அழகு மலர் மாலையுடன், கிரீடம்,  புதுப்பூணூல் சாற்றிக்கொண்டு அற்புத புறப்பாடு கண்டு அருளினார். இன்றைய படங்களிலே பெருமாள் பல வண்ணப் பட்டு மாலைகள் அணிந்து இருப்பதை சேவிக்கலாம். இவை பவித்ரம் என்று அழைக்கப்படுபவை.  




பேயாழ்வார் இடைகழியில் மற்ற இருவர் ஏற்றிய விளக்கினிலே பெருமாளை சேவித்து 'திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்' என இசைத்தவர்.  அவரது வரிகள் இங்கே:  

விரும்பி  விண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்

சுரும்பு துளையில்  சென்றூத, அரும்பும்

புனந்துழாய் மாலையான் பொன்னங் கழற்கே,

மனம்துழாய் மாலாய் வரும்.

பூக்கள் மணமானவை; அழகானவை;  அவைகளை தொடுத்தால் கிட்டும்  அழகிய மாலையிலே,  சுறுசுறுவென இயங்கும்  சிறகுகளையுடைய வண்டுகள் துளையில் சென்று ஊத, அதனால்  அரும்புகள் உண்டாகப்பெற்ற மிக தூய நல்ல திருத்துழாய் மாலையை அணிந்தவனான எம்பெருமானுடைய பொன்னாங்கழல்கள் - சாதாரண திருவடிகள் அல்ல !   விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையுமளந்த மிகவழகிய திருவடிகள்,  விஷயத்திலேயே எனது மனமானது லயித்து  அதனையே நினைத்து  மயங்கிக் கிடக்கின்றது. அந்த எம்பெருமானின் தங்க திருவடிகளையே சரணாக பற்றினேன் - எனக்கு எவ்வித குறையும் வாராது என அறுதியிடுகிறார் சுவாமி பேயாழ்வார்.

It is surrendering unto Him being guided by our Acaryas.  Prapatti is neither mere faith in the saving grace of Sriman Narayana  nor a mere prayer to Him for protection/ salvation / moksha. Prapatti would not  mean a mere surrender and a life centered around serving Sriman Narayana.  The concept of Prapatti encompasses all of this & is much much more. Though "Saranagathi" is in general used for denoting "surrender" – it is a life of ultimate surrender and living under the lotus feet of Sriman Narayana.  

Here are some photos of Sri Parthasarathi Perumal taken today evening. 

adiyen Srinivasadhasan. 
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
15th  Sept 2024.










No comments:

Post a Comment