எம்பெருமான் கண்ணன் மிக மிக சிறப்பானவன். இப்பூவுலகத்தில் வந்துதித்து வாழ்ந்து காட்டி, குருக்ஷேத்திர
போர்க்களத்திலே புனித பகவத் கீதை உரைத்தவன்.
அவ்வெம்பெருமான் அர்ஜுனனான பார்த்தனுக்கு தேர் செலுத்தும் சாரதியாய் திருவல்லிக்கேணி
திவ்யக்ஷேத்திரத்திலே "ஸ்ரீபார்த்தசாரதி"யாக
அழகுற எழுந்து அருளியுள்ளான்.
வெண்ணைத்தாழிக்கண்ணன்: - அற்புத லீலை - திருவல்லிக்கேணி பிரம்மோத்சவத்தில்
எட்டாம்நாள் காலை 'வெண்ணை தாழிக்கண்ணன் திருக்கோலம்'. மிகச்சிறந்த
இதிஹாசமான மஹாபாரதத்து நாயகன் கண்ணன் தன் பால்ய லீலைகள் தொடங்கி முழுவாழ்க்கையையும்
பாடமாக தந்தவன். எட்டாம் நாள் காலை புறப்பாட்டில்
- ஸ்ரீபார்த்தசாரதி, கண்ணனாக, கண்ணன் சிறுவயதில் புரிந்த பல லீலைகளுள் ஒன்றான 'வெண்ணை விழுங்கிய கண்ணனாக' –தவழும் கண்ணனாக, வெண்ணைதாழியுடன் அழகானசாற்றுப்படியுடன் பல்லக்கில்
புறப்பாடு கண்டு அருளுகிறார்.
ஸ்ரீமன் நாரணனே பரம்புருடன் - உயிரினங்கள் அனைத்தின்
பிறப்புக் காரணனன்; பூதங்கள் அனைத்தையும் படைப்பவன்;
அவற்றை அழிப்பவன்; இந்திரனும், பருவகாலங்களுக்கு
மத்தியில் வருடம், யுகங்களின் யுகம், யுகங்களின் சுழற்சி ஆகியவையும் அவனே ! உயிரினங்கள் மற்றும் தேவர்களின் மொத்தக் கூட்டமும் அவனே !!
பாம்புகளில் சேஷன்; பறவைகளில் கருடன் ;
ஆயிரம் தலைகளையும், ஆயிரம் கால்களையும் கொண்டவன்; அவனே வேள்வி புருஷன், அவனே வேள்வி, அவன் தானே ஆகுதிகளைச் சுமக்கும் அக்னி, அவனே நித்யன்.
மதுராவை தலைநகராக் கொண்ட சூரசேன நாட்டின் கொடுங்கோல்
மன்னரும், சொந்த தாய்மாமனுமாகிய கம்சனை கொன்று, தன் தாய்வழி தாத்தாவும், யது குல மன்னருமான
உக்கிரசேனரை மீண்டும் மதுராவின் அரியணையில் அமர்த்தியது ஸ்ரீகிருஷ்ணாவதார சிறப்பு. சந்திர குல மன்னர் யயாதியின்
மூத்த மகன் யதுவின் வழித்தோன்றல்களான யாதவ குலத்தின் பல கிளைப் பிரிவுகளில் சூரசேனிகள்
என்பவர்கள், சூரசேனம் நாட்டை நிறுவினர். சௌரசேனம்
அல்லது சூரசேனம், பௌத்த சமய அங்குத்தர நியாயம் எனும் நூலில் கூட இராமாயண இதிகாசத்தில், கிமு 1000-இல் இருந்த மகாஜனபத நாடுகளில் ஒன்றாக சூரசேன நாடு குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டைய கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள் இந்நாட்டை
சௌரசேனி என்றும், அதன் தலைநகரத்தை மெதோரா என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
சூரசேன நாட்டைக் குறித்தான செய்திகள், பாகவத புராணம்
மற்றும் மகாபாரதத்தில் உள்ளது. சூரசேன நாட்டின் மன்னர் உக்கிரசேனரை கம்சன் சிறையில்
அடைத்து நாட்டை ஆண்டான். மதுரா நகரில் தேவகிக்கும்,
வஸுதேவருக்கும் - ஒரு மழை நாளில், யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நள்ளிரவில்,
சிறையில் கண்ணபிரான் எட்டாவது குழந்தையாகப் பிறந்தான். தேவகியின் அண்ணன்
கம்ஸனுக்கு “எட்டாவது குழந்தை” மூலம் இறப்பு என சாபம் இருந்தபடியால், கம்ஸன் தேவகி-வஸுதேவரை
சிறையில் அடைத்து, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை ஒவ்வொன்றாக கொன்று முடித்தான். கண்ணபிரான்
கோகுலத்தில் “ஒருத்தி மகனாய் பிறந்து, ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர்ந்தார். குழந்தை கண்ணனை அழிக்க பூதனை, த்ருணவர்த்தன், சகடாஸுரன்
போன்ற பல ராக்ஷஸர்களை கம்ஸன் அனுப்பினான். எல்லா அரக்கர்களையும் கண்ணன் அழித்தான்.
இராமாவதாரம் போலல்லாமல் - எம்பெருமான் கிருஷ்ணன் தான் வளரும்போது பல சந்தர்ப்பங்களில் தனது அவதார மஹிமையை உணர்த்தினான். மண்ணை உண்ட வாயைத் திறந்து யஸோதாவிற்கு அண்ட சராசரங்களையும் தன் வாயினுள் காட்டினான். யஸோதாவிற்கு மகனாக இருந்து, இடைச்சிறுவர்களோடு மாடு கன்றுகளை மேய்த்து, வெண்ணெய், பால், தயிர் போன்றவற்றை திருடி தின்றான். வீடுகள்தோறும் சென்று வெண்ணெய் திருடியதால் கோபம் கொண்ட யஸோதா இவனை உரலில் கட்டிப் போட , அத்தழும்பினால் தாமோதரன் என்ற பெயரைப் பெற்றான்; இரண்டு மரங்களாக இருந்த ரிஷி குமாரர்களுக்கு சாப விமோசனத்தையும் கொடுத்தான்.
Reminiscing the glorious olden days, here are some photos of Sri Parthasarathi perumal brahmothsavam of 2013 – 8th day morning purappadu on 1.5.2013.
Emperuman Sriman Narayana resides at
Thirupparkadal – here at the ‘the Ocean
of Milk’ he reclines on Adisesha, with His consort Mahalakshmi, and with
Nithyasurigal doing kainkaryam to Him. Gajendra the majestic divine tusker too
does kainkaryam .. .. Singer Thiyagayya
was immersed in His bakthi and sang many keerthanas praising the Lord. Here is one of his more famous keerthanas on
Sree Krishna ‘ “ksheera sagara sayana !”
In the kRti ‘kshIra sAgara Sayana’ – rAga
dEvagAndhAri (tALa Adi), Sri Thiyagaraja swamigal quotes various instances when the Lord
responded to the prayer of His devotees and pleads for mercy asking why He is neglecting him.
క్షీర సాగర శయన నన్ను : చింతల పెట్ట వలెనా రామ
వారణ రాజును బ్రోవను వేగమే : వచ్చినది విన్నానురా రామ
ksheerasaagara Sayana! Nannu : chinthala
betta valaenaa? raama! (ksheera)
vaaraNa raajunu broavunu vaegamae:
vachchinadi vinnaanuraa; raama!
Lord, reclining in the ocean of milk! O Rama!
Should you keep me immersed in sorrow? Did you not rush to the succour to
elephant king Gajendra? I have heard of how you protected the honour of
Draupadi by supplying clothes. I have also heard that you were responsible for
the release of Bhakta Ramadasa from incarceration. For the sake of lotus-eyed
Sita, you crossed the ocean and earned fame for yourself. One who possesses
Taraka as name! Lord! Deign to accept and grace me.
Malayalam movie Sopanam directed by Jayaraj, starring J. V. Somayajulu, Manoj K. Jayan, Chippy in lead roles was released in 1993. Scripted by Kaithapram Damodaran Namboothiri, this film tells the story of a singer who loves his teacher's daughter. S. P. Venkatesh (Sangeetharajan) did the musical score – here is the keerthana sung in the movie by K Jesudoss.
https://www.youtube.com/watch?v=ALqweK8DfUg
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
11th July 2021.
Very nice narrations with beautiful pictures!
ReplyDelete