To search this blog

Tuesday, July 6, 2021

Aani Kruthigai 2021 - செய்ந்நன்றி குன்றேன்மின் .. .. ...அண்டனையே ஏத்தீர்களே.!

Today is Aani 22 – July 6 Tues _ Kruthigai, masa thirunakshathiram of Kaliyan.



யுகங்கள் மாற மாற பாவிகள் அதிகரிக்கின்றனர் - அவர்தம் பாவங்களும் கூடுகின்றன.  அனைத்துக்கும் அழிவு ஏற்படும் - அது ஒரு பிரளய ரூபத்தில் வரும்.  பிரளயம் என்பது அழிவாகும். பூலோகம் வெள்ளத்தினால் அழியுமெனவும், பூலோகம் முதலிய பதினான்கு உலகங்களை உடைய அண்டங்கள் அழிக்கப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது. பல இந்து நூல்கள் பூலோகப் பிரளயம் என்பது சதுர் யுகங்களின் இறுதியான கலியுகம் முடிவுரும் பொழுது ஏற்படும் என தெரிவிக்கின்றன. அப்பொழுது திருமால் கல்கி அவதாரம் எடுத்து உலகில் பாவம் செய்தவர்களை கொல்வதாகவும், அதன் பிறகு பெரு வெள்ளம் ஏற்பட்டு பூலோகம் அழியும் என்றும் கூறப்படுகிறது. 

மனிதர்கள் வாழும் காலங்கள் -  நான்கு யுகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.  அவை கிருதயுகம், திரேதா யுகம், துவாபரயுகம், கலி யுகம்  என்பன.   கிருத  யுகத்தில் மக்கள் அனைவரும் அறநெறியுடன் வாழ்ந்தார்கள்.   இந்த யுகமானது 17,28,000 வருடங்கள் கொண்டது.   நான்கு யுகங்களும் சோ்ந்தது ஒரு ‘மகா யுகம்’ அல்லது ‘சதுா்யுகம்.’ 12 மகா யுகங்களைக் கொண்டது, ஒரு மனுவந்தரம். 14 மனுவந்தரங்களைக் கொண்டது ஒரு கல்பம். இப்படியாக 30 கல்பங்கள் இருக்கின்றன. தற்போது நடந்து கொண்டிருப்பது 2-வது கல்பமான ‘ஸ்வேத வராக கல்பம்’ ஆகும்.



A deluge is a large downpour of rain, often a flood. In geomorphology, an outburst flood—a type of megaflood—is a high-magnitude, low-frequency catastrophic flood involving the sudden release of a large quantity of water. During the last deglaciation, numerous glacial lake outburst floods were caused by the collapse of either ice sheets or glaciers that formed the dams of proglacial lakes.  

                    Scientists discover that a violent storm is heading toward New York City and begin the warning process throughout the city. They believe that something is wrong with the natural barometer patterns and that an unprecedented event is imminent. A sudden eclipse of the sun verifies their notions and it seems that global destruction is near. Telegraphs from Rome and London explain days of unending earthquakes and state "The End of the World is at Hand." Tremendous earthquakes hit the Pacific Coast, killing millions, and it is reported that the entire western coast of the US has been demolished. The earthquakes have also caused major tsunamis in the oceans and disaster is just moments away.

…. the foregoing is the plot of ‘ Deluge ’ American apocalyptic science fiction film, directed by Felix E. Feist and released by RKO Radio Pictures in 1933. The film was loosely based on the 1928 novel of the same name by S. Fowler Wright, with the setting changed from England to the United States. It follows a small group of survivors after a series of unexplained natural disasters erupt around the world and destroy human civilization, including a massive tsunami which inundates New York City.

Flooding deluge and conclusion of World  are common across a wide range of cultures, extending back into Bronze Age and Neolithic prehistory. These accounts mostly  depict a flood, sometimes global in scale, usually sent by a deity or deities to destroy civilization as an act of divine retribution.

பிரளயத்தில் பெரு வெள்ளம் உண்டாகி, இவ்வுலகையே ஆழி சூழ்ந்து, உலகம் அழிவுறும்.  மனிதர்கள் முதல் எல்லா ஜீவராசிகளும் அழிவர்.  எவற்றையுமே உலகில் கனவொண்ணமால் சமுத்திரம்  அனைத்தையும் கபளீகரித்த மஹாப் பிரளய வெள்ளம் பரந்த காலத்திலே “அருளார்திருச்சக்கரத்தால் அகல்விசும்பும் நிலனும், இருளார் வினைகெடச்செங்கோல் நடாவுதிர்” என்கிறபடியே ரக்ஷணபாரிஹரமான திருவாழியாழ்வானையுடையனான எம்பெருமானது திருவயிற்றிலே. ஸகல பதார்த்தங்களும் அடங்கியிருந்து ரக்ஷை பெற்றிருக்கும்.  அப்படி அனைத்து  உயிர்களையும் நின்றும் காப்பாற்றியருளும்  சார்வல்லபனான ஸ்ரீமன் நாரணனையே பணிந்து போற்றுவோம்.  மற்றை தேவர்களை ஏற்றி ஒரு பலனுமில்லை என்கிறார் நம் திருமங்கை மன்னன். இதோ இங்கே கலியனின்  திருமொழி பாசுரம் ஒன்று : 




மைந்நின்ற கருங்கடல்வாயுலகின்றி வானவரும் யாமுமெல்லாம்,

நெய்ந்நின்ற சக்கரத்தன் திருவயிற்றில் நெடுங்காலம் கிடந்ததோரீர்,

எந்நன்றி செய்தாரா ஏதிலோர் தெய்வத்தை யேத்துகின்றீர்?

செய்ந்நன்றி குன்றேன்மின் தொண்டர்காள் அண்டனையே ஏத்தீர்களே. 

வாழ்க்கையில் சரியான முடிவுகள் எடுக்காமல், தகுதியற்றவிடத்திலே  ஆட்பட்டு தொண்டு செய்யும் மானிடர்களை விளித்து கலியன் உரைக்கிறார் :   மைமாறாதே நின்றாப்போலே கறுத்திருந்துள்ள கடலிடத்து  இவ்வுலகம் ஒன்றுமேயில்லாமால் தேவர்களும் மனிதர்களான நாமும் ஆகிய  எல்லாப்பொருள்களும் நெய்யிட்டு விளங்காநின்ற திருவாழியையுடையனான எம்பெருமானுடைய திருவயிற்றில் ஊழிக்காலத்தில் வெகுகாலம் கிடந்து  அடங்கியிருந்தமைஅறிய மாட்டீர்களா !  நமக்கு வாழ்விலும், மறுவாழ்விலும்,  என்னவுபகாரம் பண்ணினார்களாகக் கொண்டு விரோதிகளின் தேவதாந்தரங்களை துதிக்கின்றீர்கள்? நமக்கு சிறந்த தேவனான எம்பெருமான் ஸ்ரீமந்நாரணன்  செய்தநன்றியை மறவாதீர்கள், அந்த ஸர்வேச்வரனையே, அவனை மாத்திரமே  துதியுங்கோள் என அறுதியிட்டு உரைக்கின்றார் திருமங்கை ஆழ்வார். 

Kaliyan’s thiruvavathara thirunakshathiram is ‘Karthigaiyil Karthigai’ – here are some photos of Kaliyan sarrumurai purappadu at Thiruvallikkeni divaydesam on 2nd Dec 2017.

adiyen Srinivasa dhasan
Mamandur veeravalli Srinivasan Sampathkumar
6th  July 2021 










No comments:

Post a Comment