To search this blog

Tuesday, July 13, 2021

Thiruvallikkeni Kodai 5 - 2021 : தெய்வ மன்னீர கண்ணோவிச் செழுங்கயலே.

எம்பெருமானுடைய அர்ச்சாவதார திருமேனிகள் அற்புதமானவை ! நம்மை ஈர்த்து ஆட்கொண்டு மறுபடி, மறுபடி அந்த லீலாவிபூதியில் ஆழுமாறு அழைக்க வல்லன.  எம்பெருமானைக் கண்ட கண்கள் மற்றோரு எந்த அழகையும் ரசிக்க மாட்டா !  ... அவனிடத்தில் ஈடுபாடு கொண்ட பக்தர்கள், அவனை மற்று அல்லால் வேறு எவரையும் தொழ மாட்டார்கள்.  திருவல்லிக்கேணி போன்ற திவ்யதேசங்களில் வாசம் செய்யும் பலன் - இத்தகைய எம்பெருமானின் க்ருபா கடாக்ஷத்தை தடையற அனுபவிக்கலாம் = அவர்தம் திருவீதி புறப்பாடுகளில் ! 



Today 14th July 2021 is Pooram  nakshathiram – that of Kothaipiratti Andal  and would have been day 5 of the Kodai utsavam – chinna mada   veethi – through Gate aam - Kulakkarai purappadu for Sri Parthasarathi  Perumal and rendering of Thiruvirutham of Swami Nammalwar.



Due to corona there is no thiruveethi purappadu, though we are able to have darshan of Emperuman inside the temple.  Obvious Q – is when would Covid end and when would there be purappadu again ? – and would people be more responsible this time. 

பரமபதத்தில் அளவு கடந்த இன்பமநுபவிக்கும் நித்யமுக்தராலும்  ஆசைப்பட்டு நாடுதற்குத் தகுந்தவை எம்பெருமானின் திருவுருவங்கள் .. .. அவைதாம் கிடைக்கப்பெற்ற நாம் எவ்வளவு பாக்கியம் செய்தவர்கள்.  கோடை உத்சவத்தில் ஐந்தாம் நாள் வீதியில் திருவிருத்தம் சேவிக்கப்பெறுகிறது.  இதோ இங்கே சுவாமி நம்மாழ்வாரின் ஒரு அற்புத திருவிருத்த பாசுரம் :-  

ஈர்வனவேலும்  அஞ்சேலும், உயிர்மேல் மிளிர்ந்திவையோ

பேர்வனவோவல்ல  தெய்வநல்வேள்கணை, பேரொளியே

சோர்வன நீலச் சுடர்விடும் மேனியம்மான்  விசும்பூர்

தேர்வன, தெய்வ மன்னீரகண்ணோ  விச்செழுங்கயலே. 

வேல்கள் கொடிய ஆயுதங்கள் - பகைவர் தம் நெஞ்சை பிளக்க வல்லன; அவை மிக கூர்மையானவை.  அத்தகைய கூரிய  வேல்கள் போலவும் அழகிய சேல்மீன்கள்போலவும் உள்ளனவான - இவை  எனது  உயிரை வசப்படுத்தும் பொருட்டு அதன் மேற்பாய்ந்து  அதைவிட்டு நீங்குவன அல்ல. !!  தெய்வத்தன்மையையுடைய அழகிய  மன்மதனுடைய அம்புகளினுடைய சிறந்த ஒளியையே  தாம் வெளியிடுவன; நீலமணியினுடைய சுடர் ஒளியை வீசுகின்ற  திருமேனியையுடையனான எம்பெருமானது திருநாடாகிய பரமபத்தை தனக்கு, ஒப்பாகத் தேடுந் தன்மையுடையன - கொழுத்த கயல் மீன்களென்று சொல்லத்தக்க இவை = மோஹினியென்னும் பெண் தெய்வத்தையொத்த உமது  கண்களோ? - என நாயிகா பாவத்தில் வினவுகிறார் நம்மாழ்வார்.

Reminiscing good olden days, here are some photos of Kodai uthsavam day 5 at Thiruvallikkeni divaydesam on 1-7-2014.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
14.7.2021
  













  

No comments:

Post a Comment