To search this blog

Saturday, July 3, 2021

Thiruvallikkeni Yanai vahanam - "விறல் வேங்கடவனையே கண்டு வணங்கும் களிறு"

தமிழில் தவறு இல்லாமல் எழுதுபவர்கள் மிக குறைவாக உள்ளனர்.  உதாரணத்துக்கு – விரலா!   விறலா!  ! - நம் தமிழ் தலைவன் பேயாழ்வார்  "விறல் வேங்கடவனையே கண்டு வணங்கும் களிறு" என்கிறார் !

பிரமிக்க வைக்கும் திருவல்லிக்கேணி - இந்த படம் 2013ல் எடுக்கப்பட்டது.   ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் யானை வாகன புறப்பாடு. குழந்தைகள் கொண்டாடும் / விளையாடும் விதம் இங்கே : சின்னப்பசங்க பெருமாள் - அழகான யானை, அதன் வாயிலே இலைகள்; மிக அழகான பெருமாள், மிடுக்காக உடையணிந்து - மல்லிகை மாலை, பதக்கத்துடன் மாலை, குல்லாய் அணிந்து மிளிரும் ஒரு குழந்தை - பக்தி பரவசத்துடன் சேவிக்கும் திருவல்லிக்கேணிவாசிகள் ... எம்பெருமானே மற்றோன்றும் வேண்டோம் - இந்நிலை மறுபடி குறைவில்லாமல் தர வேண்டுகிறோம் !

I love elephants – anything and everything about elephants attract me .. .. Elephants today are confined to the African and Asian continents. But their extinct relatives once roamed far and wide across the planet. When they settled onto islands, some species’ evolutionary course changed direction in a dramatic fashion.  In a paper published earlier this month, scientists found clues to just how much island living can rapidly alter the evolution of these animals.

“Evolution on islands is a quite intriguing field of science, since it can be seen as an experiment of nature or evolution in action,” said Sina Baleka, the paper’s lead author and a paleogeneticist at McMaster University in Canada. She and her co-authors hope their findings can offer insights into how species living today are affected by geographic isolation on islands and in other habitats. Evidence of smaller versions of extinct elephants has been found worldwide. Fossils of elephant species on islands off California and Siberia as well as in the Mediterranean and Indonesia show that these giants became much, much smaller. In some cases, these dwarves evolved down to the size of a large horse.

But much remains to be learned about how many millenniums of evolution it may take for mammals as massive as elephants to shrink to a horse-like size. To make sense of this mystery, the scientists focused on fossils of a species of dwarf elephant from Sicily, the large island off the toe of Italy’s boot. The fossils were excavated in the late 19th century from the Puntali Cave, not far from the city of Palermo, and are believed to be 50,000 to 175,000 years old.

Moving away, despite the fact that they occupy similar ecological niches, the social structure of Asian elephants differs from that of their African savannah counterparts. This is perhaps due to their differing habitats. It is important to understand this and grasp the diversity of strategies that these endangered species might be adopting to survive.  Back home, in Tamil Nadu, the Forest department is setting up an interpretation centre at the government timber depot on Kotagiri Road in Mettupalayam to create awareness about elephants among children. The centre, named Vezham (elephant), would educate children in the region that is plagued by man–animal conflict. The facility, a first-of-its-kind in Tamil Nadu, will have life-size elephant statues. A life-size mammoth replica has already been installed.

Paintings of Asian and African elephants, tusks and skull replicas will also be on display. “It is an attempt to create scientific awareness about elephants among the young people. They have to understand the elephant’s role in biodiversity,” said additional principal chief conservator of forests. A butterfly park and a children’s park will also be set up near the facility.  The centre is expected to be ready in six months.

~ and to us, Triplicanites, the most beautiful and important attractive Vezham, the elephant is the golden hued one in sitting posture – the Yanai vahanam of Emperuman !திருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெறும் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் ப்ரம்மோத்சவத்தில் ஆறாம் நாள்  இரவு  கம்பீரமான  யானை வாகனம். திருவல்லிக்கேணி யானை வாஹனம் அமர்ந்த நிலையில், தங்க பூச்சுடன் ஜொலிக்கும். வாகனத்தின் மீது வெண்பட்டுடுத்தி, பெருமாள் பின்பு பட்டர் அமர்ந்து சாமரம் வீசி வருவது தனி சிறப்பு. யானை வாயில் வாழை மரங்கள் வைத்து, நிஜமான களிறு ஓடி வருவதைப் போல் இருக்கும்.   யானை வாகன புறப்பாட்டில் 'ஏசல்", "ஒய்யாளி"  என்று அழைக்கப்படும் சிறப்பு உண்டு.  

தமிழ் மொழியில் பல சொற்களுக்கு இரண்டு அல்லது மேற்பட்ட பொருள்கள் உண்டு.  வேழம் என்பது யானையைக் குறிக்கும்.  வேழம் என்பது கரும்பு, ஒரு புல்வகையும் கூட.   பாணன் மன்னனிடம் சென்று பாடி பரிசு பெற்று வந்து தம் மனைவியிடம் பெருமிதத்துடன், 'வேழம் கிடைத்தது' என்று சொல்ல,  புலமையும் நகைச்சுவையும் வாய்ந்த மனைவியோ - அதை கடித்து தின்பதற்கு  பற்கள்  வேண்டுமே என இயம்பினாராம். 

உடலறிவு மட்டும் கொண்ட உயிரினத்தை  இலக்கணப் புலவர் தொல்காப்பியர் புல் என்றும் மரம் என்றும் இரு வகையாகப் பாகுபடுத்தியுள்ளார்.  வேழம் தாவர இயலில் ஒருவகையான புல் (நாணற்புல்) ஆகும்.  புல் என்பது உள்ளீடு இல்லாமல் உள்ளே துளை கொண்ட தாவரம்.  வேழம்  எனும் சொல் வேழப்புல்லையும், அப்புல்லை விரும்பி உண்ணும் யானையையும் குறிக்கும். மருத நிலத்துக் கருப்பொருள்களில் ஒன்று வேழம் எனக் குறிக்கப்படும் வேழக் கரும்பு. இவ்வேழக் கரும்பு இடம் பெறும் பத்துப் பாடல்களின் தொகுதி- ஐங்குறுநூற்றில்  வேழப் பத்து என்று குறிக்கப்படுகிறது.

பண்டைத்தமிழ் அரசுகளில் யானைப் படை முதன்மையான பங்கு வகித்தது. படை யானைகளுக்குப் பெயரும் பட்டங்களும் வழங்கப்பட்டன. பெரும்பாலான தமிழகக் கோவில்களில் யானைகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும்.  பண்டைய காலத்தில் உருவான ஒவ்வொரு கலைப்படைப்பிலும் யானைகளைப் பார்க்கலாம். சிற்பங்களிலும் சரி, இலக்கியங்களிலும் சரி யானைகளுக்குத் தரப்பட்டுள்ள இடம் தனித்துவச் சிறப்புடைய ஒன்று.  யானை மீது அமர்வது உயர்வானதாக கருதப்பட்டது. 

திவ்ய பிரபந்தத்தில் யானை பல இடங்களில் குறிப்பிடப் படுகிறது.   நம்மைக் காக்கும் எம்பெருமான் , கஜேந்திராழ்வானை முதலை வாயினின்றும் விடுவித்துக் காத்தருளினமை ப்ரஸித்தம். இதையே பொய்கை ஆழ்வார் 'பிடிசேர் களிரளித்த பேராளா' என்கிறார். மூன்றாம் திருவந்தாதியில் பேயாழ்வார்,  திருவேங்கடத்தில், மேகங்களை தவறாகப் புரிந்து கொண்டு, தனது துதிக்கையை எடுத்துக் கொண்டு வேகமாயோடி குத்த ஓடுமாம் மத யானை -  அந்த யானை திருமலையில் உறைகின்ற வேங்கடவனை  என்றென்றும் துதித்து வணங்குமாம்.  

விரல் என்பது கைகளின் இறுதியிலும், கால்களின் இறுதியிலும் இருப்பவை. மனிதர்களின் கைகளில் ஐந்து விரல்கள் உள்ளன -விறல்   எனும் சொல்லுக்கு பல பொருட்கள் உண்டு : - வெற்றி; வீரம்;  வலி; பெருமை;  விசேடம் முதலியன சில.  பேயாழ்வார்  "விறல் வேங்கடவனையே கண்டு வணங்கும் களிறு" - என்கிறார்.

புகுமதத்தால் வாய்பூசிக் கீழ்தாழ்ந்து, அருவி

உகுமதத்தால் கால்கழுவிக் கையால், மிகுமதத்தேன்

விண்டமலர் கொண்டு விறல்வேங் கடவனையே,

கண்டு வணங்கும் களிறு. 

திருமலையில் மதயானைகள் தாமரைப் பூக்களைப் பறித்து அப்பன் திருவடிகளில் ஸமர்ப்பித்து வணங்குகிறபடியை ஒரு சமத்காரம் பொலியப் பேசுகிறார் நம் பேயாழ்வார். . எம்பெருமான் ஸந்நிதியில் தொண்டுசெய்யப் போமவர்கள் வாயைக் கொப்பளித்துக் கைகால்களை சுத்திசெய்து கொண்டு புஷ்பங்களை யெடுத்துக் கொண்டு போவது வழக்கம்.  திருமலையிலுள்ள அஃறிணைப் பொருள் கட்கும் இவ்வாசாரம் கோல்விழுக்காட்டிலே அமைந்திருக்கின்றது என்கிறார். 

திருமலையிலுள்ள) யானையானது மண்டையில் நின்றும் கபோலங்களில் நின்றும் வாயிலே புகுகின்ற மத ஜலத்தாலே வாய் கொப்பளித்து ஆசமனம் பண்ணி, மேலிருந்து கீழ்வரையில் அருவி போலே வந்து பெருகுகிற மத ஜலத்தாலே கால்களை சுத்தி செய்துகொண்டு, துதிக்கையால்  மிகுந்த மதத்தையுண்டுபண்ணக் கூடிய தேனையுடையதும் மலர்ந்ததுமான  புஷ்பத்தைக்கொண்டு பெருமிடுக்கனான திருமலையப்பனையே ஸேவித்து வணங்குகின்றது.  விறல் வேங்கடவன் –  திருமலையிலுள்ள திர்யக் ஜந்துக்களும் தன்னை வணங்குமாறு ஜ்ஞாநத்தைக் கொடுக்க சக்தனான திருவேங்கடமுடையான் என்ப. 

Here are some photo of Yanai vahana purappadu on day 6 of Sri Parthasarathi Perumal Brahmothsavam on 29.04.2013.

 

~adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
3rd July  2021
பாசுர விளக்கம் : ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி - ஒப்பற்ற ஸ்ரீவைணவ கலைக்களஞ்சியம் திராவிட வேதா இணையம்.  
1 comment: