To search this blog

Sunday, July 4, 2021

Aani Ekadasi - Sri Parthasarathi - காப்பு மறந்தறியேன் கண்ணனேயென்றிருப்பன்

மெய்யாலுமா, மெய்யாலுமா என்று பலரும் கேட்டுக் கொண்டிருந்தது மெய்யாலுமே நிரூபணமாகிவிட்டது.   மெய்யாலுமே  !!  .. .. இந்த சொல்லாடலை கேட்டு இருக்கிறீர்களா ? - நிச்சமயாக மெய்யாலுமே தமிழ்தான் !!ஐம்புலன்களை உடையது நம் உடம்பு. 'மெய், வாய்,  செவி, மூக்கு, கண்,’ என அந்த ஐம்புலன்கள் வகைப்படுத்தப் படுகின்றன.  இந்த ஐம்புலன்களைப் பற்றியும் பேசுகிறது  திருக்குறள்.

'பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறி நின்றார் நீடு வாழ்வார்.’

ஐம்பொறிகளால் ஏற்படும் ஆசைகளை விட்டுவிட்டு பொய்யில்லாத ஒழுக்க நெறியில் நிற்பவர்கள் நீண்ட ஆயுளைப் பெற்று வாழ்வார்கள் - என்பது இக்குறளின் பொருள். 

மெய் என்னும் சொல் உண்மை, உடம்பு, என்னும் இரண்டு பொருள்களைக் குறிப்பது.  இக்காலத்தில் இச்சொல் தமிழ் பேச்சுவழக்கில் பொிதும் மறைந்துவிட்டது.  அரசனுக்குத் தீங்கு நேராதபடி அவனைக்காவல் புாிந்த வீரா்களுக்கு மெய்க்காவலா் என்னும் பெயா் இருந்தது. மெய்யைக் (உடம்பை) காவல் புாிந்ததால் இவா்களுக்கு இப்பெயா் ஏற்பட்டது.  தன்னைத்தானே மறந்திருக்கும் நிலையைத் தமிழில் மெய்மறத்தல் என்று கூறுவா்.

Yoga, Meditation are all exercises in keeping oneself relaxed and free from anxiety. Stress and anxiety causes many problems.  Generally, when people are relaxed, one would be able to sleep well, sleep without disturbance.  – yet there would be dreams.  Rapid Eye Movement (REM) is one of five stages the brain goes through while we sleep. We enter this dream phase within 90 minutes of drifting off and it repeats every 90 minutes throughout the night. But why do we dream? What possible purpose can it serve? “We dream because it's part of our emotional and psychological processing, and how we lay down new memories and learnings !”  .. .. and in life one needs clarity, realization and purpose !

In our philosophy, Emperuman is Supreme, the great benevolent Supreme master who takes care of us all.  He is one capable of ‘Yoga Nidhra’ – ie., providing care and comfort to all His followers, even when He is asleep.  

Yoga nidra is a state of consciousness between waking and sleeping, like the "going-to-sleep" stage, typically induced by a guided meditation. There is evidence that yoga nidra helps relieve stress. An ancient technique from India, mentioned in the Upanishads and Vedic scriptures and utilised by the Rishis, the Indian sages, it has now spread worldwide and is also being applied by the US Army to assist soldiers to recover from post-traumatic stress disorder.

The term lucid dream was coined by Dutch author and psychiatrist Frederik van Eeden in his 1913 article A Study of Dreams, though descriptions of dreamers being aware that they are dreaming predate the article. Van Eeden studied his own dreams between 1898 and 1912, recording the ones he deemed most important in a dream diary. 352 of these dreams are categorized as lucid.

Meaning of Lucid would be :  easily understood; completely intelligible or comprehensible.  Lucid explanations are characterized by clear perception or understanding; rational or sane.  A lucid dream is a type of dream where the dreamer becomes aware that they are dreaming. During a lucid dream, the dreamer may gain some amount of control over the dream characters, narrative, and environment; however, this is not actually necessary for a dream to be described as lucid. Lucid dreaming has been studied and reported for many years. Prominent figures from ancient to modern times have been fascinated by lucid dreams and have sought ways to better understand their causes and purpose. This is no post on dreams but on clarity and purpose in life. 

இன்று திருமழியாழ்வாரின் நான்முகன் திருவந்தாதி பாசுரம்.  காப்புமறந்தறியேன் என்பதற்கு இருவகையாகப் பொருள் கொள்ள இடமுண்டு. எம்பெருமான் தம்மைக்  காத்தருளினதை மறக்கமாட்டேன் என்றும், தாம்  எம்பெருமானுக்குக் காப்பிடுவதை (மங்களாசாஸநம் பண்ணுவதை) மறக்கமாட்டேன் என்றும்.  நம்மை  என்றென்றும் காக்கும் எம்பெருமான் ஸ்ரீமந்நாராணனோடு  நமக்குண்டான  ஒழிக்க இயலாத  உறவையும் , அவ்விறைவனின் அரிய பெரிய திருக்குணங்களையும் உள்ளபடி உணருமவர்கள்  ஸ்ரீமன் நாரணனை  எப்போதும் விடமாட்டார்கள் என அவர்தம் பெருமையை உரைக்கின்றார் மழிசைப்பிரான்.


காப்பு மறந்தறியேன் கண்ணனே யென்றிருப்பன்

ஆப்பங் கொழியவும் பல்லுயிர்க்கும், - ஆக்கை

கொடுத்தளித்த கோனே குணப்பரனே, உன்னை

விடத்துணியார் மெய்தெளிந்தார் தாம்.

முன்னொரு நாளில் மஹாப்ரளயத்தில், உலகமே அழிந்தபோது, பல்லுயிர்களை ரக்ஷித்து, தான் ஆலிலையில் யோகநித்திரை செய்த பெருமான்  - எல்லா ஆத்மாக்களுக்கும்  மெய் எனப்படும் சரீரங்கள் அழிந்து போயிருந்தாலும்  மறுபடியும் ஆக்கையை  கொடுத்து அருள்செய்த எம்பெருமானே - நீ எங்களுக்கு  செய்தருளும் ) ரக்ஷை தன்னை ஒருநாளும் மறக்கமாட்டேன்.  நடப்பவை, நடந்தவை, நடக்க இருப்பவை அனைத்துமே கண்ணன் செயல்,  எல்லாம் கண்ணனே என்று உறுதிகொண்டிருப்பேன்.  திருக்குணங்களினால்  சிறந்த பெருமானே!  உள்ளபடி அவ்வெம்பெருமானின் ஸ்வரூபத்தைத்  தெளிவாக அறிந்தவர்கள் அவனை   விட மாட்டார்கள், என அறுதியிட்டு உரைக்கிறார் திருமழிசை ஆழ்வார். 

Reminiscing the glorious past -  20th June 2017  was  ‘Aani  Ekadasi’.    Sri Parthasarathi Perumal had grand purappadu with most beautiful floral garlands outsmarting the dazzling ornaments.  Here are some photos of that purappadu.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
4th July 2021. 

 

  

1 comment: