To search this blog

Wednesday, July 21, 2021

Sirupuliyur Thalasayanam ~ Sri Krupa Samuthira Perumal Thirukovil

திருமங்கை ஆழ்வார் தமது உள்ளன்பு நன்கு விளங்க எம்பெருமானை  பெரிய காளமேகம் போன்ற திருவுருவத்தை டையவனே! " அருமா கடல் அமுதே" என மங்களாசாசனம் பண்ணின பெருமாளை சேவித்து இருக்கீறீர்களா ? கொல்லுமாங்குடி என்ற ஊர் தெரியுமா ?  .. .. புலிக்கால் முனிவர் (வியாக்ரபாதர்) அறிவீரா ?

 


“It would not be an exaggeration to say human race in general is facing an existential crisis”   thundered the Court once ! – yet Covid 19 is not the first epidemic to attack mankind – it is neither the worst nor likely to be the last !

People are reminded of historical happenings ! – mankind has suffered diseases and have lost millions. Around 430 B.C., not long after a war between Athens and Sparta began, an epidemic ravaged the people of Athens and lasted for five years. Some estimates put the death toll as high as 100,000 people.   The Black Death, also known as the Pestilence and the Great Mortality, was the most fatal pandemic recorded in human history, resulting in the deaths of up to 75–200 million people in Eurasia and North Africa, peaking in Europe from 1347 to 1351. Plague, the disease caused by the bacterium Yersinia pestis, was the cause; the Black Death was the beginning of the second plague pandemic… .. there were more and then in the  last century, humanity suffered and survived ‘spanish flu’ !!

இந்த கடின காலத்தில் உலகமே - நாடுகளும் மக்களும் இன்னமும் மரண பயத்துடன் கொரோனா தீநுண்மியுடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.   அனுதினமும் புது கவலைகள் .. .. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்கள் திண்டாட்டம் வருத்தம் அளிக்கிறது.    கொரோனாவோ வேறு கொடிய நோய்களோ, மனிதனை தாக்கும் எந்த கொடியவையோ ! - மரண பயமோ, முடக்கும் தீச்செயல்களோ - அனைத்துக்கும் அருமருந்து எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் ஒருவன் மட்டுமே.   அவனே அருமருந்து !  ... .. அவனே அம்ருதம்.  அவனே க்ருபாகடாக்ஷத்தால் சாகரம் போன்று மிகப்பெரியவன்.

உயிரிகளுக்கு உன்னதமான ரசம் - 'அம்ருதம்'  இது மரணமே இல்லமால்  அமரத்துவத்தை தர வல்லது. இதற்கு அமுதம், அமிழ்தம், தேவாமிர்தம், தேவருணவு என்று பல்வேறு பெயர்கள் உண்டு.  மரணமில்லாப் பெருவாழ்வு தரும் அமிர்தத்தை அடைய வேண்டிப் பாற்கடலைக் கடைய தேவர்களும் அசுரர்களும் கூடி முடிவெடுத்தார்கள். வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் மந்திரமலையை மத்தாகவும் கொண்டு திருப்பாற்கடலைக் கடைய முடிவெடுத்தார்கள்.

மலைக்கு அடியில் ஆதாரமாக ஸ்ரீமன் நாராயணனே கூர்மாவதாரம் எடுத்து மலையைத் தாங்கிக்கொண்டார். அசுரர்கள் பாம்பின் வாலைப் பிடிப்பது தங்களுக்குக் கௌரவக் குறைச்சல் என்று தலையைத்தான் பிடித்துக்கொள்வோம் என்றனர். கடையத் தொடங்கியபோது வாசுகியிடமிருந்து வெளிப்பட்ட தீ ஜுவாலைகள் அசுரரைப் பொசுக்கின. வலி தாங்காமல் வாசுகியின் வாயிலிருந்து ஆலகால விஷம் வெளிப்பட்டது.  தொடர்ந்து பாற்கடலைக் கடைய காமதேனு, வெண்குதிரை, ஐராவதம் என்னும் வெள்ளை நிற யானை, பாரிஜாத மரம் அனைத்தும் வெளிப்பட்டன.  கடைசியாக அமிர்தம் வந்தது “கடல் அமுது”

In Greek mythology – ‘ambrosia’ - is the food of the Greek gods, often depicted as conferring longevity or immortality upon whoever consumed it.  It was brought to the gods in Olympus by doves and served by either Hebe or Ganymede at the heavenly feast.  An elixir is a sweet liquid used for medical purposes, to be taken orally and intended to cure one's illness.   The Epic of Gilgamesh is an epic poem from ancient Mesopotamia, regarded as among  the earliest surviving notable literature.    In the second half of the epic, distress causes Gilgamesh to undertake a long and perilous journey to discover the secret of eternal life.  Amirtham, Amrut, Amrit, Sudha and more    literally means "immortality" and is often referred to in ancient Indian texts as nectar, ambrosia  and carries the same meaning.  Its first occurrence is in the Rigveda, where it is considered one of several synonyms for soma, the drink of the devas.  

புலிகால் முனிவர் என்பவர் மத்யந்தனர் என்பவரின் மகனும், சிறந்த சிவ பக்தனும் ஆவார். இவருடைய இயற்பெயர் மழன் என்பதாகும். சமஸ்கிருதத்தில் வியாக்ரம் என்பது புலியைக் குறிப்பதனால் வியாக்ரபாதர் என்று அழைக்கப்பட்டார்.   திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில்,  திருவாரூர் / நன்னிலம்  மாவட்டத்தில் மயிலாடுதுறை – திருவாரூர் செல்லும் இருப்புப்பாதையில், கொல்லுமாங்குடி தொடருந்து நிலையத்திலிருந்து 2 மைல் தொலைவில் உள்ள திருச்சிறுபுலியூர் எனும் கிராமத்தில் அமைந்த 108 திவ்ய தேசம்.    சிதம்பரம் நடராசர் அருளியபடி வியாக்கிரபாதர், திருச்சிறுபுலியூர் ஸ்தலசயனப்பெருமாளை வணங்கி மோட்சம் பெற்றதால் இத்தலத்திற்கு திருச்சிறுபுலியூர் எனப் பெயராயிற்று.

தெற்கு நோக்கி காட்சி தரும் கோயிலின் மூலவர் பெயர் ஸ்தலசயனப்பெருமாள். தாயார் பெயர் திருமாமகள் நாச்சியார். உற்சவர்  கிருபா சமுத்திரப் பெருமாள் (அருள்மாகடல்) – உற்சவ தாயார்  தயாநாயகி. தீர்த்தக் குளம் - மானஸ புஷக்ரிணி. விமானம் - நந்தவர்த்தன விமானம். கருவறையில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வியாசர், வியாக்கிரபாதர், கங்கையுடன் காட்சியளிக்கிறார். 


திருமங்கையாழ்வார் இத்தலத்தை தனது திருமொழியில் 10 பாசுரங்களால் மங்களசாசனம் செய்துள்ளார்.   திருமங்கை ஆழ்வாருக்காக பெருமாள் மிகச் சிறிய வடிவில் புஜங்கசயனத்தில் பள்ளி கொண்டுள்ளார். சயன திருக்கோலத்தில் சிறிய திருவுருவத்தில் [பாலசயனம்] மூலவர் சேவை சாதிக்கின்றார்.  எம்பெருமான் மிகச் சிறிய உருவமாயிருந்ததைக் கண்டு திருமங்கையாழ்வார் தமக்குள் குறைபட உமது குறை தீர நமது மிகப்பெரிய உருவை திருக்கண்ணமங்கையில் காணும் என்று பெருமாள் அருளிச்செய்த ஸ்தலம்.  திருக்கோவிலின் மூல கோபுரம் முன்பு அழகாக நம் ஆசார்யர் மணவாள மாமுனிகள் சன்னதி, தனிக்கோவில் போல உள்ளது.  சில வருஷங்கள் முன் வரை ஐப்பசி மாதம் மணவாள மாமுனிகள்  விழா மிக சிறப்புற நடைபெற்றதாம்.  மாமுனிகளுக்கு தெப்போத்சவமும், பிரத்யேக  ரதோத்ஸவமும் நடைபெற்று வந்ததாம் !!எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனே மருத்துவன் ! ~ அவனே அருமருந்து ! அவனை கடலமுதம் ! - இதோ இங்கே கலியனின் 'அருமா கடலமுதே - உனதடியே சரண்" எனும் பெரிய திருமொழி பாசுரம் :

கருமாமுகிலுருவா! கனலுருவா! புனலுருவா,

பெருமால்  வரையுருவா! பிறவுருவா! நினதுருவா,

திருமாமகள் மருவும்  சிறுபுலியூர்ச்சலசயனத்து,

அருமா  கடலமுதே!   உனதடியே  சரணாமே.

 

திருமங்கை மன்னன்  தமது உள்ளன்பு நன்கு விளங்க எம்பெருமானை விளிக்கின்றார் :  கறுத்துப் பெருத்த மேகம் போன்ற வடிவையுடையவனே!  அன்பில்லாதார்க்கு அணுகவொண்ணாதபடி  நெருப்பைப்போலும் உருவமுடையவனே!;   குளிர்ந்த நீர்போலே குளிர்ந்த வடிவையுடையவனே!; மிகவும் பெரிய மலைபோன்ற உருவத்தையுடையவனே!;  மற்றுமுள்ள  எல்லா பொருள்களையும் வடிவாகவுடையவனே!  அஸாதாரணமான திவ்யமங்கள  விக்ரஹத்தையுடையவனே! - பெரிய பிராட்டியார் பொருந்தி வாழ்கிற சிறுபுலியூர் சலசயனத்து "அருமா கடல் அமுதே" - சிறுபுலியூர் எனும் திவ்யக்ஷேத்ரத்திலே சயனத்திருக்கோலத்திலே சேவை சாதிக்கின்ற பெறுதற்கரிய சிறந்த கடலமுதம் போன்றவனே! உனது திருவடிகளே அடியோங்களுக்கு சிறந்த   புகலிடமாம். There is more than a tinge of melancholy, as I write this – this divaydesam glorified by Kaliyan continued its glory and   was so prominent among the temples in the erstwhile Chozha kingdom.  There was a big agraharam, many sampradhayic archakas, learned divyaprabandham and Vedic vidwans.  By some accounts, it had more than 350 acres of land belonging to temple – so rice was available aplenty.  Not any longer, the temple lands and fields have been encroached by non-believers and the administration is not capable of reclaiming them.  Most of the traditional residents left the divyadesam seeking greener pastures aka employment and food elsewhere .. .. now we can only speak of our pristine vedic past and ancient glory – as not many are prepared to reside in village and do kainkaryam

We fall at the feet of those kainkaryabarars who still continue kainkaryam at such divyadesams and there are some who habitually visit these glorious temples serving Him.   Meantime, we while away our time speaking a lot, posting on social media and doing nothing for our religious places [more lamentation of self than on anyone !]

~adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
21st    July  2021

பாசுர விளக்கம் : ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி - ஒப்பற்ற ஸ்ரீவைணவ கலைக்களஞ்சியம் திராவிட வேதா இணையம்.    

Special thanks to Sri Kasthuri Rangan swami for the beautiful photos of Sri Krupasamudra Perumal. 
1 comment: