To search this blog

Tuesday, July 20, 2021

Aadi Ekadasi 2021 ~ நன்கோதும் நால்வேதத்துள்ளான்

Today 20th July 2021 is Aadi Anusham and Ekadasi too – today is day 6 of Sri Alavanthar uthsavam.  Every Ekadasi there would be periya mada veethi purappadu of Sri Parthasarathi Perumal at Thiruvallikkeni – now, due to Covid 19 relaxed restrictions, there is no purappadu at Thiruvallikkeni divaydesam.



எம்பெருமானுடைய சிறப்புகளை மயிலை தமிழ்த்தலைவன் ஸ்ரீபேயாழ்வார் சிறப்புற உரைக்கிறார். ஸ்ரீமந்நாரணன்  மிகமிக உயர்ந்த வேதங்களாலே பிரதிபாதிக்கப்பட்டவன்; இனிமையிலே ‘தேன் தோற்றது‘ என்னும்படியான போக்யதையுடைய விலக்ஷண திவ்யமங்கள விக்ரஹமுடையன் -   எம்பெருமான், நுண்ணறிவினன் – நுட்பமான அறிவையுடையவன், அதாவது – அவனை அறிவது மிகவும் நுட்பமானது – அஸாத்யமானது என்றபடி. உரைக்கும் பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி பாசுரம் இங்கே:

நன்கோதும்  நால்வேதத்துள்ளான் நறவிரியும்

பொங்கோதருவிப் புனல்வண்ணன், - சங்கோதப்

பாற்கடலான் பாம்பணையின் மேலான், பயின்றுரைப்பார்

நூற்கடலான் நுண்ணறிவினான்.

நன்றாக ஓதப்படுகிற நான்கு வேதங்களாலும் பிரதிபாதிக்கப்படுபவனும்,   இனிய தேன் கூட தோற்கும்படியான போக்யதையையுடையதாய்,  கடல் போலவும் அருவிநீர் போலவுமுள்ளதான  திருமேனியை  உடையவனும், சங்குகளோடே கூடின அலைகளையுடைத்தான திருப்பாற்கடலில் கண்வளர்த்தருள்பவனும்   ஆங்கே அவ்விடத்தில் அநந்த  சயனத்தின் மேல் துயில்பவனும்  ஓதியுணர்த்துகின்ற வைதிகர்களின் கடல்போன்ற சாஸ்த்ரங்களால் பிரதபாதிக்கப்படுபவனுமான எம்பெருமான் - நுண் அறிவினான், தம் முயற்சியாலே அறிவார்க்கு  அறிய முடியாதவன். எம்பெருமான் மிகப்பெரியவன்.  எம்பெருமானின் அருளில்லாமல் அவனை அடையமுடியாது.. எனினும் அவன் திருவடி தாமரைகளிலே வீழ்ந்து அவனுக்கு கைங்கர்யம் செய்பவர்களுக்கு அவன் எளியனாய் அருகில் வந்து ஆட்கொண்டு சேவைசாதித்து, எல்லா நல்லனகளும் தந்தருள்கிறான்.





Reminiscing good olden days, here are some photos of Ekadasi on 17th Apr 2016 on which day, we had a great darshan of Kadalvannan Emperuman Sri Parthasarathi at Thiruvallikkeni during His periya mada veethi purappadu.

என்னே ஒரு திவ்யமான ஏகாதசி ! : திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி இராமாவதாரத்தில் 'சிற்றவை பணியால் முடி துறந்தவன் அன்றோ !' - அன்று கருங்கண்  தோகை மயில் பீலிஅழகான தண்டைதுரா  பதக்கங்கள்,  ஜாஜ்வல்யமான திருவாபரணங்கள்,  விருச்சிமணம்கமழும் மல்லிகைமதுரமான மகிஷம்பூ என மாலைகள் - என அற்புதமான சாற்றுப்படியுடன்  சேவை சாதித்தார்.  பக்தர்கள்  உஜ்வலமான நிறமும்சூரியன் போன்ற ப்ரகாசத்தையும் கொண்ட கடல் வண்ணன்‘  சிறப்பை காணும் பேறு பெற்றனர்.

~adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
20th   July  2021

பாசுர விளக்கம் : ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி - ஒப்பற்ற ஸ்ரீவைணவ கலைக்களஞ்சியம் திராவிட வேதா இணையம்.    











1 comment: