To search this blog

Tuesday, March 9, 2021

Sri Azhagiya Singar : Lakshmi Narasimha thirukolam 2021 : வகைசேர்ந்த நன்னெஞ்சும் நாவுடைய வாயும்

நல்ல வழிபோகத் தேடலாகாதா?  நல்ல காலத்திலும் கடின காலத்திலும் நாம் என்ன செய்ய வேண்டும் ? - எப்போதும் எழும் கேள்விகள் அல்லவா ?    பக்தி எவ்வளவு எளியது ? - எம்பெருமானை அடைய என்ன செய்ய வேண்டும் ?   

இந்த நிலையற்ற மானுட பிறவியில் எவ்வளோவோ கஷ்டங்கள், அவலங்கள், பயங்கள் !!  .. ..மனிதர்கள் அனுதினமும் பயத்தில் இறக்கிறார்கள் - கடந்த கால கசப்பான நினைவுகளும், நிகழ்கால அவலங்களும், எதிர்காலத்தை பற்றிய கற்பனை பயங்களும் ஒன்றுகூடி அலைக்கழிக்கின்றன.  



                  நாம், நம் குடும்பத்தினர், நம்மினம், நம்மக்கள், நம்மூர் எனவும் இவ்வுலகமே ஒருநாள் அழியும் எனவும் பயம். பூமியின் மீது வால்நட்சத்திரம் மோதினால் உலகம் அழியும் என்கிறார்கள். சூரியமண்டலத்திற்கு வெளியே 'ஊர்ட்மேகம்' என்ற பகுதியில் நூற்றுக்கணக்கான வால்நட்சத்திரங்கள் உள்ளன. அவற்றின் சுற்றுப்பாதையில் சூரியனை சந்திக்க வரும் போது பூமியில் மோதினால் பெரிய அளவில் அழிவு ஏற்பட்டு மனித இனம் அழியலாம்.   கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகளில், 24 மணி நேரத்தில் 1100 கோடி டன் உருகி கடல் நீர்மட்டம் அதிகமாகியுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.                பிரளயம் என்பது உலக  அழிவாகும். பூலோகம் வெள்ளத்தினால் அழியுமெனவும், பூலோகம் முதலிய பதினான்கு உலகங்களை உடைய அண்டங்கள் அழிக்கப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது.  பூலோகப் பிரளயம் என்பது சதுர் யுகங்களின் இறுதியான கலியுகம் முடிவுரும் பொழுது ஏற்படும் என தெரிவிக்கின்றன. அப்பொழுது திருமால் கல்கி அவதாரம் எடுத்து உலகில் பாவம் செய்தவர்களை கொல்வதாகவும், அதன் பிறகு பெரு வெள்ளம் ஏற்பட்டு பூலோகம் அழியும் என்றும் கூறப்படுகிறது.  

உலக சரித்திரத்தின் பக்கங்கள் மனிதர்கள் சந்தித்துள்ள பேரழிவுகளை விவரிக்கின்றன.  வெள்ளம், வறட்சி, பஞ்சம், பிணி, கொள்ளை நோய், போர்கள் என பல மனித இனத்தை சிதைத்துள்ளன.  கடந்த சில  ஆண்டுகளில், நாம் ஆறு குறிப்பிடத்தக்க ஆபத்துகளை சந்தித்திருக்கிறோம் - சார்ஸ், மெர்ஸ், எபோலா, ஏவியான் இன்புளூயன்ஸா மற்றும் பன்றிக் காய்ச்சல் - ஆகியவற்றை சந்தித்துள்ளோம்.   நோய்த்தொற்று (Infection) என்பது ஒட்டுண்ணி இனங்கள் ஓம்புயிர் ஒன்றைத் தாக்குவதைக் குறிக்கும். ஓம்புயிரிலுள்ள மூல வளங்களைப் பயன்படுத்தி, இந்த ஒட்டுண்ணி இனமானது தன்னைத்தான் இனம்பெருக்கிக் கொள்வதுடன், ஓம்புயிரில் பொதுவாக நோயை நச்சுக்களை ஏற்படுத்தும்.  சென்ற வருஷம் முதல் கொரோனா தீநுண்மி பரவலால் உலக மக்கள் பெருங்கஷ்டத்தை அனுபவித்துள்ளனர்.   கொரோனா நோய்  பரவியது.  மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டார்கள். (பலர் கேட்கவில்லை); அலுவலங்கள், கடை கண்ணிகள், அங்காடிகள், தொழில் நிலையங்கள் மூடப்பட்டன.  நாம் வணங்கும் திருக்கோவில்களுக்கு மூடப்பட்டன.  நமக்கு இறைவனை தொழவும் அனுமதி இல்லை. கொடிய பஞ்சங்கள், போர்க்காலங்களிலும் கூட திருக்கோவில்கள் இவ்வளவு நாட்கள் மூடப்பட்டதாக தெரியவில்லை.    இப்போது வந்துள்ள தடுப்பூசிகள் மனதைரியத்தை தருகின்றன.  

After an year + of Covid 19 turmoil, the World is trying to limp back to normalcy as the vaccines are giving great hope.  People should be more cautious as they appear to have thrown care to wind and act as if Covid was never there. 

Globally, the multi-branded biggest vaccination campaign in history is underway. More than 312 million doses have been administered across 116 countries, according to data collected by Bloomberg. The latest rate amounts to roughly 8.08 million doses a day. In the U.S., more Americans have now received at least one dose than have tested positive for the virus since the pandemic began. So far, 92.1 million doses have been given.  The first stage of the U.S. rollout fell short of federal projections as vaccinations proceeded unevenly across the states. After focusing first on  hospitals and other institutional health-care settings, the next phase of vaccinations will draw more on pharmacies and health clinics—places where vaccines are more traditionally administered—and will broaden the pool of people eligible to get the shots. Some states are turning sport stadiums and theme parks into mass vaccination centers.

Back home in our own country, as many as 20,19,723 Covid-19 vaccine shots were administered to beneficiaries in India between Monday and Tuesday, the health ministry has said.  This is the most number of vaccinations that have been carried out in the country in 24 hours. India’s Covid-19 vaccination drive has jumped nearly four-fold after the country opened it up to more people and got a crucial public endorsement from the inoculation of Nation’s Prime Minister Shri Narendra Modiji.    Union Health Minister Harsh Vardhan on Sunday said the country is in the end game of the COVID-19 pandemic and to succeed at this stage politics should be kept out of the Covid-19 vaccination drive. The Health Minister urged the people to trust the science behind the covid-19 vaccines, and asked the citizens of the country to ensure that their near and dear ones to get vaccinated on time. He said," We need to follow 3 steps: Keep politics out of the COVID-19 vaccination drive, Trust the science behind COVID-19 Vaccines, and ensure our near & dear ones get vaccinated on time."  "We are 14 months into what is the biggest health crisis in our lifetime and almost 2 months into the world's largest COVID-19 vaccination drive.  The health minister said unlike most other countries, we have a steady supply of COVID-19 vaccines that are safe with proven immunogenicity and efficacy. Based on the initial results, and these "Made in India" vaccines have shown some of the lowest adverse events following immunization (AEFI) anywhere in the world, the minister added.  The minister said today children in the entire world need to be vaccinated against Poliomyelitis only because Pakistan and Afghanistan failed to eradicate this disease from their respective countries, although Polio stands eradicated from the rest of the world.

           Let us pray our Emperuman that the greatest health crisis ends sooner and the World returns to normalcy. Let us all get inoculated and continue our faith in Emperuman by doing kainkaryams at every Divyadesam, at every place of HIS – Srivaishnavism is simple, it teaches the Bakthi markam, the simple renunciation and surrender to His Lotus Feet – falling at the feet of Sriman Narayana let us pray for the welfare and benefit of us all.

சுமார் 20 அ 25 வருடங்கள் முன்பு திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி திருக்கோவிலில் தினமும் காலை, ஒரு வயதான மூதாட்டி வருவார்; கோலங்கள் போடுவார்.  தன்னை மறந்து, ஒரே சில வரிகளையே திரும்ப திரும்ப கத்தி பாடுவார்.  தள்ளாடும் வயது, சற்று சாய்ந்து சாய்ந்த நடை. கணீர் குரல் -:  

கிருஷ்ணானந்த முகுந்த முராரே !   வாமன மாதவ கோவிந்தா !

ஸ்ரீதர கேசவ ராகவ விஷ்ணோ! .... லக்ஷ்மிநாயக நரசிம்ஹா!  

~ இதை பாடிக்கொண்டே திருக்கோவிலை வளம் வருவார்.   நரசிம்ஹர் - அளந்திட்ட தூணை அவன் தட்ட, அதை பிளந்து கொண்டு வந்து உகிரால் இரணியனை அழித்தவர். உக்கிரமானவர்.  திருவல்லிக்கேணியிலே அவர் யோக நரசிம்மராயும், உத்சவர் தெள்ளியசிங்கராயும் காட்சி அளிக்கிறார்.  ஸ்ரீஅழகியசிங்கர், ஸ்ரீ பார்த்தசாரதி இருவருக்கும் 10 நாள் பிரம்மோத்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.  சிறுசிறு வித்தியாசங்கள் உண்டு.  எட்டாம்நாள் காலை ஸ்ரீபார்த்தசாரதி வெண்ணெய்தாழிக்கண்ணன் திருக்கோலம்.  அழகியசிங்கருக்கோ ஸ்ரீலட்சுமி நாயக  நரசிம்மன் திருக்கோலம்.  





ஸ்ரீவைணவனின்  வாழ்க்கை மிக எளிதானது.  எளிமையாய் இரு ! மற்றோர் அனைவரிடமும் அன்பு கொள்.  திருக்கோவில்களுக்கு செல் ! எல்லாவிதமான கைங்கர்யங்களும் செய் ! பிறர் மனம் புண்பட நடக்காதே ! பகவத் பாகவத அபச்சாரங்கள், நிந்தனைகள் செய்யாதே ! எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனனை போற்றி புகழ் பாடு.  எம்பெருமானுடைய  கல்யாண குணங்களிலும் திவ்யசரிதைகளிலும்  பொருந்தி நின்ற நல்ல மனமும்,  அவனது  குண விசேஷணங்களை  பேசிப் புகழ்ந்து கொண்டிருக்கிற நாவோடு கூடின வாக்கும் வாய்ப்பதுவும், அவனடியார்க்கு அன்பு செய்வதுவும் நம்மை பண்படுத்தி மேம்படுத்தும். 

At Thiruvallikkeni, now the special Brahmothsavam of Sri Azhagiya Singar is on and today (9.3.2021) is day 8.  In the morning it was  purappadu in ‘Sri Lakshmi Narasimha thirukolam’ in pallakku.  அழகியசிங்கருக்கு  ஸ்ரீலட்சுமி நாயக  நரசிம்மன் திருக்கோலம்.  அதீத அழகு பொருந்திய சாந்த ஸ்வரூபி - தெள்ளிய சிங்கர்.    வடிவழகிய பெருமாள் 8ம் நாள் காலை - "ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ஹராக' உபய நாச்சிமாருடன் அற்புத தரிசனம் அளிக்கிறார்.  பல்லக்கில், சௌந்தர்யமாக காலை மடித்து அமர்ந்து, ஒரு கை அபய ஹஸ்தமாகவும், மற்றொன்று நாச்சிமாரை அரவணைத்தும் அற்புதமாக எழுந்து அருளி இருக்கும் திருக்கோலம் மிக அற்புதமானது.  இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின் அற்புத வரிகள் - 'இயற்பா பெரிய திருவந்தாதியில்'

 

வகைசேர்ந்த   நன்னெஞ்சும் நாவுடைய வாயும்,

மிகவாய்ந்து வீழா எனிலும்,-  மிக  வாய்ந்து

மாலைத்தாம்   வாழ்த்தாதிருப்பர் இதுவன்றே,

மேலைத்தாம் செய்யும் வினை.

 

ஞானத்திற்கு  மார்க்கமாக ஏற்பட்டிருக்கிற நல்ல நெஞ்சும்,  எம்பெருமானையே நினைத்து உருகி அவனையே சேர்ந்து  அநுபவிக்காவிட்டாலும், சேதநராயப் பிறந்திருக்கிற தாங்கள் நன்றாக ஆராய்ச்சி பண்ணி எம்பெருமானைப் சிறப்பாக  பேசுவதற்கு உறுப்பான நாவோடு கூடிய வாக்கும், எம்பெருமானை வாழ்த்தாமல் சும்மா இருப்பவர்கள் , மேலுள்ள காலமும் கெட்டுப் போவதற்காகத் தாங்கள் செய்து கொள்ளுகிற பாவமன்றோ இது ! ~ இதை பொல்லாத மானுடம் உணர்ந்து தங்களை திருத்திக்கொள்ளுதலே நலம். 

For us Pirattiyar is all  divine grace and kind to devotees of Sriman Narayana.  Emperuman is absolute, matchless and blemishless in all aspects.  Piratti complements HIM ~ she is always associated with Emperuman.  It is only She who can direct us towards the blessings of Emperuman.  At Thiruvallikkeni, Lord Narasimha is in the most pleasing form – He is Thelliya Singar, known as  Azhagiya Singar. On day 8 it is  Lakshmi Narasimha Thirukolam, the most beautiful Perumal having  Lakshmi Pirattiyar closest to Him -  the greatest darshan a baktha could have.  Here are some photos taken during this morning purappadu.

 

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
9.3.2021





















  

2 comments:

  1. I am amazed to see the time you take to write the blog (almost close to an Upanyasakar). Good ones. Political names need not have come in the articles. Whoever at the helm would have done it. I saw many similar photos but of great details and quality. You seem to have special access and skill to take some of the shots !

    ReplyDelete
  2. Very nice writing. Super photos. Very glad to have darsan of Sri Lakshminarasimhar in different Angeles. Nice

    ReplyDelete