To search this blog

Monday, August 17, 2020

Thiruvallikkeni Sri Parthasarathi Chandra Prabhai : கைத்தலம் நோவாமே அம்புலீ கடிதோடி வா.

Europa's surface is mostly water ice, and there is evidence that it may be covering an ocean of water or slushy ice beneath. Europa is thought to have twice as much water as does Earth. This place  intrigues astrobiologists because of its potential for having a "habitable zone." Life forms have been found thriving near subterranean volcanoes on Earth and in other extreme locations that may be analogues to what may exist on Europa. ~  wonder what is this about !!   


சந்திரன் குளிர்ச்சியானவன்; சந்திரனுக்கு நிலா, அம்புலி, வெண்மதி,   என பெயர்கள் உண்டு. முழுமதி மிகவும் சந்தோஷத்தை தர வல்லது.  நிலவை  நோக்கி  கைநீட்டி, தன் குழந்தையுடன் விளையாட வருமாறு அம்புலியை அழைக்கும் பருவம் - அம்புலிப்பருவம். புவியிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிவதாலும் முறைதவறா பிறை சுழற்சியாலும், தொன்மைக்காலத்திலிருந்தே மனித  சமுகத்தின் பண்பாட்டுக் கூறுகளில்,   குளிர்ச்சியான சந்திரன்  மிகுந்த தாக்கமேற்படுத்தி உள்ளது. பூமியின் ஈர்ப்புச் சக்தி காரணமாக, பூமியைச் சந்திரன் சுற்றிவருகிறது. மனிதன் உயரே அனுப்பியுள்ள எண்ணற்ற செயற்கைக்கோள்களும் இதே காரணத்தால் பூமியைச் சுற்றிவருகின்றன. சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் வியாழன்தான் மிகப் பெரியது. எனவே, அது மற்ற கிரகங்களைவிட அதிக ஈர்ப்பு சக்தி கொண்டது. 


A team of researchers from the Indian Institute of Science (IISc) and the Indian Space Research Organisation (ISRO) has developed a sustainable process for making brick-like structures on the moon, according to IISc. It exploits lunar soil, and uses bacteria and guar beans to consolidate the soil into possible load-bearing structures, Bengaluru-based IISc said in a statement. "These space bricks could eventually be used to assemble structures for habitation on the moons surface, the researchers suggest," it said. "It is really exciting because it brings two different fields biology and mechanical engineering together," says IISc.

Space exploration has grown exponentially in the last century. Chandrayaan 2 had recently captured an image of a crater on Moon. ISRO released the image on August 12, naming the crater after Indian astrophysicist Vikram Sarabhai on the occasion his birth centenary.  The image of Sarabhai Crater was captured by the Terrain Mapping Camera – 2 (TMC-2) onboard ISRO’s Chandrayaan – 2 on July 30, 2020.  The Sarabhai Crater is located on Mare Serenitatis in the northeast quadrant of the Moon. Mare Serenitatis, which hosts the Sarabhai crater is one of the lunar mare region on the Moon. The region has vast lava plains creating a near flat surface. The Sarabhai Crater is around 250 to 300 kilometres east of the landing site of Apollo 17 and Luna 21 missions. The average depth of the Sarabhai crater is calculated to be 1.7 km from the raised crater rim and the average slope of the crater walls is in the range 25-30°.  

Moon  has attracted humanity through centuries – in mythology, history and in life.  The Moon (or Luna) is the Earth’s only natural satellite and was formed 4.6 billion years ago around some 30–50 million years after the formation of the solar system. The Moon does not shine with its own light. It simply reflects light coming from the Sun.  The Moon is in synchronous rotation with Earth meaning the same side is always facing the Earth.  From Earth, it might look like the Moon is changing shape each night – from a tiny sliver to a half moon to a full moon and back again. What’s actually happening is that from our spot on Earth, we see different parts of the Moon lit up by the Sun as the Moon travels in its orbit.

Man has always had the unsatiable urge to explore moon. The first unmanned mission to the Moon was in 1959 by the Soviet Lunar Program with the first manned landing being Apollo 11 in 1969.  It’s no wonder that we are fascinated.   India too is heading to explore and land in moon.   




Jupiter has 53 named moons. Others are awaiting official names. Combined, scientists now think Jupiter has 79 moons. There are many interesting moons orbiting the planet, but the ones of most scientific interest are the first four moons discovered beyond Earth—the Galilean satellites.  The planet Jupiter's four largest moons are called the Galilean satellites after Italian astronomer Galileo Galilei, who first observed them in 1610. The German astronomer Simon Marius claimed to have seen the moons around the same time, but he did not publish his observations and so Galileo is given the credit for their discovery. These large moons, named Io, Europa, Ganymede, and Callisto, are each distinctive worlds. You read about Europa, the moon of Jupiter at the start of the post.   





நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்பட வைத்தாங்கே : பாரதியார் வரிகள். பெரியாழ்வார் கண்ணனை வளர்க்கும் பருவத்தில், தனது 'பெரியாழ்வார் திருமொழியில் 'பத்து பாடல்களில், சந்திரனை வளரும் அழகு கண்ணனுடன்’ விளையாட அழைக்கிறார். மேகத்தில் மறையாமல் விளையாட வரச் சொல்லி  "மஞ்சில் மறையாதே மாமதீ மகிழ்ந்தோடி வா" என்கிறார்.   முன்னொரு காலத்தில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு கிண்ணத்தில் சோறு பிசைந்து கொண்டு, குழந்தையை தன் இடுப்பில் தூக்கி, நல்ல கதைகளையும், இனிய பாடல்களையும் பாடி உணவு ஊட்டுவார்.  மாடங்களில் இருந்தோ, வீதி தனிலோ, மாடியில் இருந்தோ, மாடு போன்றவற்றையும், அழகான வெண்ணிலாவையும் காண்பித்து உணவு ஊட்டுவார்கள்.  விஷ்ணுசித்தனான பெரியாழ்வார் கண்ணனது ஒவ்வொரு பருவத்தையும் அனுபவித்து பாசுரங்கள் அருளியுள்ளார்.  வளரும் கண்ணனுக்கு யசோதை நிலவை அழைக்கும் ஒரு பாசுரம் இங்கே :

சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும்

எத்தனை செய்யிலும் என்மகன் முகம் நேரொவ்வாய்

வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற

கைத்தலம் நோவாமே அம்புலீ   கடிதோடி   வா.  

சந்திரன் குளிர்ச்சியும் அழகும் மிக்கவன்.  மாமதி!  மகிழ்ந்தோடிவா’’ என்று அழைக்கச் செய்தேயும் சந்திரன் ஓடிவரக் காணாமையாலே ‘அழகில் தன்னோடொப்பார் ஒருவருமில்லை’ என்கிற கர்வத்தினால் இவன் வாராமலரிருக்கிறான் என்று கொண்டு அந்தச் செருக்கு அடங்கப் பேசுகிறாள், யசோதா. .  சந்திரா! நீ இப்போது  நாள்தோறும் தேய்வதும் வளர்வதுமாய் இருக்கின்றாய்; களங்கமுடையனாயும் இருக்கின்றாய்;  நீ எவ்வளவு செயற்கை அழகு செய்துகொண்டு விளங்கினாலும் அற்புத  குழந்தை கண்ணனது திருமுகத்திற்குச் சிறிதும் ஒப்பாக மாட்டாய்.  ஆகையாலே நாமே அழகிற் சிறந்துள்ளோம் என்கிற செருக்கை ஒழித்து உன்னைக் காட்டிலும் மிக அழகிய முகமண்டலத்தை உடையவனான இவன் உன்னைக் கைகளால் அழைப்பதைப் பரம பாக்யமாக அநுஸந்தித்து விரைந்து ஓடிவா; வாராவிட்டால் வெகுகாலமாக உன்னை அழைக்கிற இக்குழந்தைக்குக் கைநோவு ஒன்றே மிகும்; இவ்வபசாரத்தை நீ அடைந்திடாதே என்றவாறு, அம்புலியை உடனே வந்திடுமாறு அழைக்கிறார் நம் பெரியாழ்வார்.   

திருவல்லிக்கேணி பிரம்மோத்சவத்தில் நான்காம் நாள் காலை சூர்யப்பிரபை.  மாலை சந்திரப்ரபை வாகனங்கள்.   

Moon has enamoured mankind for ages – in our literature and in Divyaprabhandnam too, there is mention of moon in many a places.  Moon is characterised as a cool, pleasant one.  During the brahmothsavam at Thiruvallikkeni divyadesam, there will be Surya prabhai purappadu in the morning and in the evening it the  cool Chandra prabhai.  Here are some photos of Sri Parthasarathi Chandra prabhai purappadu of 25.4.2016.  

adiyen Srinivasa dhasan (Mamandur Veeravalli Srinivasan Sampathkumar)

17.08.2020.

பாசுர விளக்கம் : கட்டற்ற சம்பிரதாய கலை  களஞ்சியம் : திராவிட வேதா இணையம்.







 

  

1 comment: