To search this blog

Tuesday, August 18, 2020

waiting for the darshan of Sri Parthasarathi Perumal ~ ஆழியங்கையனே வாராய்

Our Emperuman Sri Parthasarathi is the incarnation of Lord Krishna.  We were blissfully having His darshan  on Rohini, Ekadasi, Pournami, Amavasai, Ekadasi, Thiruvonam and on various other festivals including Brahmothsavam, Theppothsavam,  Ekkadu Thangal thiruvooral uthsavam, Masimagam, Ratha Sapthami, Thavana uthsavam, Vasantha uthsavam, Kodai Uthsvam, Vijayadasami, Pavithrothsavam, Azhvar Acharyar sarrumurai and more ~ and suddenly due to dreaded Corona virus, we have not had His darshan for 5 months.



Once was talking to a small shop owner in the holy Gokul – the people there possess full and complete conviction that Lord Krishna walked on their streets, rested under the trees, took bath in Yamuna and Krishna pervades everywhere there.  The old man referred Mathura as Asura boomi and told that the cows in Gokul would give sweet milk.

அவர்களுக்கு கோகுலம் சிறப்பானது, இங்கே ஒவ்வொரு அடி மண்ணும் கண்ணன் கால் பதித்த இடம். இங்கு மாடுகள் கூட இனிமையான பாலை மட்டுமே அளிக்கும்.  யமுனா நதியை தாண்டிய கம்சன் ஆண்ட இடங்கள் அசுரர் பூமி.  அசுரர்கள் என்றால் கொடூரமான உருவத்துடன் வெறி பிடித்து அலைபவர்கள் மட்டுமே என்று நாம் எண்ணிவிடக் கூடாது. அசுரர்களின் தன்மையினை கிருஷ்ணர் தெளிவாக எடுத்துரைக்கின்றார். இந்தத் தன்மைகள் யாரிடம் உள்ளதோ அவர்கள் அசுரர்கள் என்று அறியப்படுகின்றனர். செய்யக்கூடியது எது, செய்யக்கூடாதது எது என்பதை அசுரர்கள் அறிவதில்லை. தூய்மையோ, முறையான நடத்தையோ, வாய்மையோ இவர்களிடம் காணப்படுவதில்லை. நீராடுதல், பற்களைத் துலக்குதல், தினமும் ஆடைகளை மாற்றுதல் போன்ற வெளிப்புறத் தூய்மை மட்டுமின்றி, இறைவனின் திருநாமங்களை உச்சரிப்பதால் பெறப்படும் உட்புறத் தூய்மையும் இவர்களிடம் இல்லை.  காமம், கோபம், பேராசை ஆகியவை ஒருவனை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் கதவுகள். இவை ஆத்மாவை அழிவுப் பாதையில் நடத்துவதால், ஒவ்வொரு அறிவுள்ள மனிதனும் இவற்றைத் துறக்க வேண்டும் என்று கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார். நரகத்தின் இந்த மூன்று கதவுகளிலிருந்து தப்பியவன் தன்னுணர்வைப் பெறுவதற்கு அனுகூலமான செயல்களைச் செய்து படிப்படியாக பரம இலக்கை அடையலாம்.


Now Ayodhya is a reality – with the boomi poojan – a beautiful Temple worthy would seen be a reality at the Janmasthan of Sree Rama.  On the significant day, celebrations and festivities were on at  Mathura also. In the wake of foundation stone laying ceremony of Ram Mandir, special pujas and offerings began at various mutts and temples in Varanasi, Mathura, Prayag, Chitrakoot and other places in Uttar Pradesh.  In Mathura, the birth place of Lord Krishna, similar pujas were  organized. The entire temple complex of Krishna Janmabhoomi was decked up and just like the pujas started two days ahead of bhumi pujan, in Ayodhya, rituals  also started in Mathura.

With the 'bhumi pujan' clearing the way for the construction of the grand Ram temple in Ayodhya, the Shri Krishna Janmabhoomi Nirman Nyas has now been set up in Mathura with 80 saints from 14 states as part of it. Acharya Devmurari Bapu, who heads the trust, said, "We got the Nyas registered on July 23 on the occasion of 'Haryali Teej' and there are 11 saints from Vrindavan who are part of the trust." The Acharya further said that a signature campaign will soon be launched to connect other saints and seers for the 'liberation' of the Krishna Janmabhoomi. "After the signature campaign, we will launch a nationwide movement on the issue. We had started the campaign in February, but we did not proceed further due to the lockdown," he said. The main dispute for the Krishna Janmabhoomi is the Shahi Idgah which is located adjacent to the Krishna Janmabhoomi Temple in Mathura.  The Trust is already laying claim to the four-and-a-half-acre land next to the mosque to use it as a 'Ranga Manch' (variety hall) for religious and cultural functions organised by it and the temple authorities.



ஸ்ரீகிருஷ்ணாவதாரம் ஒரு அற்புதம்.  எம்பெருமான் இடையனாக, பலப்பல கஷ்டங்களுக்கு நடுவே நாளொரு மேனியும் பொழுதொரு  அற்புத லீலைகளுமாய் திருவாய்ப்பாடியிலே வளர்ந்தான்.  யசோதாபிராட்டியும் மற்றைய ஆயரும் கொஞ்சி குலாவி பாலூட்டி சீராட்டி கண்ணனை வளர்த்தனர்.  கண்ணனும் பலராமனும்  “காடுகளூடுபோய்க் கன்றுகள் மேய்த்து மறியோடி“ என்கிறபடியே ஒன்றிரண்டு காடுகளன்றிக்கே, காடுகள்தோறும் திரள்திரளான கன்றுகளை மேய்த்து ஒரு மத்தகஜம் உலாவுமா போலே சென்று வந்தான்.  அத்தகைய மணிவண்ணன்,   யசோதை தன்கையிலும் தடி வைத்துக்கொண்டிருந்தாளாகையாலே அதனைக் கண்டு அஞ்சி ஓடிப்போய் விடுவனோ வென்று சங்கித்து, பிரானே! நான் அது செய்யகில்லேனென்கிறாள். என்கையில் கோலுள்ளது உண்மைதான், ஆனால் இது கொண்டு காரியங் கொள்ளும்படியான வன்மை எனக்கில்லை காண் என்கிறாள்.

இதோ கலியன் திருமங்கை மன்னனின் வார்த்தைகளில் ஒரு பாசுரம். : -

உந்தம் அடிகள் முனிவர் உன்னைநான் என்கையிற் கோலால்

நொந்திட மோதவுங்கில்லேன்  நுங்கள்தம்   ஆநிரையெல்லாம்

வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண

அந்தியம் போதங்கு நில்லேல்!  ஆழியங் கையனே வாராய்.


திருவாழியினால்   அழகு பெற்ற   திருக்கைகளை உடையவனே! எங்கள் கண்ணபிரானே !  நீ செய்கிற தீமைகளைக் கண்டால், உங்கள் பிதாவாகிய நந்தகோபர் சீற்றம் கொள்வார்.  [யசோதையாகிற] நானோ, என் கையிலுள்ள கொம்பினால் உன்னை நோகும்படி அடிக்கவும் மாட்டேன்,  உங்களுடைய பசுக்கூட்டங்களெல்லாம்  காடுகளில் மேய்ந்து திரிந்து,  மீண்டு வந்து ஊர்க்குள்  புகும்போது ஆகாசத்திலுள்ள தேவதைகள் கண் எச்சில் படுமாறு  காணும் மாலைப்பொழுதிலே  நாற்சந்தியிலே நிற்கவேண்டா, என்னருகே வந்திடாய் என யசோதை சீராட்டுகிறாள்.

அத்தகைய அழகிய மணிநிறக் கண்ணபிரான் அற்புத தலைப்பாகை, துரா, பதக்கங்கள், பச்சை கிளிகள், திருவாபரணங்கள் அணிந்து காட்சியளிக்கும் சில படங்கள் இங்கே.

Here are some photos of the beautifully ornate Sri Parthasarathi Perumal during Thavanothsavam on 17.3.2019

Adiyen Srinvasa dhasan [mamandur Veeravalli Srinivasan Sampathkumar]

18.08.2020.









1 comment: