To search this blog

Sunday, February 18, 2018

Sri Thelliya Singar purappadu to Theppam 2018


Sri Thelliya Singar purappadu to Theppam 2018

At Thiruvallikkeni after 3 days of theppam for Sri Parthasarathi, today 18th Feb 2018 – it was theppothsavam for Sri Thelliya Singar.  Here are some photos of Sri Azhagiya Singar purappadu from His sannathi to Thirukulam.


ஸ்ரீ நரஸிம்ஹம்  என்றாலே சீற்றம் ~ பல இடங்களிலே ப்ரஹலாதனுக்காக கோபம் கொண்டவர்  உக்ரமூர்த்தியாக சேவை சாதிக்கிறார். திரு அல்லிக்கேணி விஷயம் வேறு ! இங்கே மூலவர் யோகநிஷ்டையில் யோக நரசிம்மர்.  உத்சவர் - அற்புத அழகு மிளிரும் அழகிய சிங்கர்.   இரணியனை இருகூறாக பிளந்த உருவம் சாந்த சொரூபியாகுமா என ஐயுற வேண்டா !!  இதோ நமக்கு திருமழிசைப்பிரான் அருளமுது :

இவையா பிலவாய் திறந்தெரி கான்ற*
இவையா எரிவட்டக் கண்கள் – இவையா*
எரிபொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்*
அரிபொங்கிக் காட்டும் அழகு.



இமையோர் பெருமான் என நித்யஸூரிகளுக்கு நிர்வாஹகனான ஸர்வேச்வரன் குறித்து ஆழ்வார் வினவுகிறார்.  நெருப்பை உமிழ்ந்த பாழி போன்ற பெரியவாய்  இவையா ? ; இவையா  கொள்ளிவட்டம் போலே உருண்டு சிவந்து ஜ்வலிக்கிற திருக்கண்கள் ??  இதுவா - அக்னிபோல  கிளர்ந்து தோன்றின திருமேனி ~ இதுவா அவனது திருமேனி அழகு !!!  என்ன அற்புதம் !

நரஸிம்ஹமூர்த்தி இவ்வளவு பயங்கரமான வடிவு பெற்றிருந்தாலும் இது சத்துருக்களுக்குப் பயங்கரமேயன்றி அன்பர்கட்குப் பரம போக்யமேயாதலால் “அரிபொங்கிக் காட்டும் அழகு“ என்று அழகிலே முடிக்கப்பட்டதென்க. [சுவாமி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யர் விளக்கம்]

Sri Azhagiya Singar was exceptionally attractive – oozing beauty.  Is He not the Lord whose anger ensured that in protection of His baktha Prahalada, the powerful Hiranya was shredded by the finger nails; in His anger, His red eyes shone like hot embers, fire came through his gaping mouth, He resembled a ferocious mighty lion. What a beautiful form it was! – at Thiruvallikkeni,  He is the most beautiful Azhagiya Singar – He is always beautiful and pleasant – for His anger is only directed at those enemies of His devotees.

Please note these are pre-theppam i.e., Sri Azhagiya Singar purappadu from sannathi to Kairavini Thirukulam for ascending theppam ~ photos of theppam and subsequent purappadu will be posted separately. 

Adiyen Srinivasa dhasan [Thiruvallikkeni S. Sampathkumar]










No comments:

Post a Comment