To search this blog

Sunday, February 25, 2018

Sri Parthasarathi thavana Uthsavam (4) - 2018


At Thiruvallikkeni, today is day 4 of Thavana Uthsavam and this morning Sri Parthasarathi had purappadu to thavana uthsava bungalow.

இன்று திருவல்லிக்கேணி தவன உத்சவத்தில் நான்காம் நாள்.  இன்று காலை ஸ்ரீ பார்த்தசாரதிப்பெருமாள் தவன உத்சவ பங்களாவுக்கு எழுந்து அருளினார். ஒற்றை மாலையுடன் காட்சியளித்த அவனது அழகு அளப்பரியது.  கண்ட வினாடியே தேவர் தலைமன்னனாம் அமரர்கள் அதிபதி நம் உளம் கவர்ந்தான்.


மஹாபாரதம் ஒரு வாழ்வியல் இலக்கியம். பாரதப்போர் வெறும் யுத்த காலமல்ல.  சிந்து நாட்டு அரசன் மற்றும் கௌரவர்களின் தங்கை துச்சலையின் கணவன் ஜெயத்ரதன்  மிக்க வீரமானவன். இவனது தந்தை விருத்தக்ஷத்ரன் அவனக்காக்க வரம் பெற்றிருந்தான்.  அபிமன்யு   சக்கர வியூகத்தை  உடைத்து உல் நுழைந்து, எதிரிகளை பந்தாடிய போது  கௌரவர் பக்கல் உள்ள அணைத்து வீரர்களும் சிறுவனிடம் யூத தர்மங்களை கடந்து தாக்குகின்றனர்.   அபிமன்யுவைப் பின் தொடர்ந்த நான்கு பாண்டவர்களையும் ஜெயத்ரதன் முன்னேற விடாமல் தடுத்து விடுகிறான்.  கடும் போராட்டத்துக்குப் பிறகு, அபிமன்யு  வீழ்த்திக் கொல்லப்படுகிறான். அப்போரையும் தர்மமற்ற முறையில் அவன் கொல்லப்பட்டதையும் கேட்டு வெகுண்ட  அருச்சுனன் அடுத்த நாள் சூரியன் மறைவதற்குள் ஜயத்ரதனை கொல்வதாகவும் அவ்வாறு இயலாவிடில் தீப்புகுவதாகவும் சபதம் செய்கிறான். 

ஜயத்திரதனை  துரோணர், கர்ணன் உள்ளிட்ட அனைவரும் காப்பாற்ற முயற்சிக்கின்றனர்.  கதிரவன் மறையும் நேரம் நெருங்கியும் ஜயத்திரதனைக் காணாது பாண்டவர்கள் கலக்கமடைகின்றனர்.அப்போது கிருஷ்ணர் தனது சுதர்சன சக்கரத்தால் சூரியனைத் தற்காலிகமாக மறைக்க ஜயத்திரதன் வெற்றிக்களிப்புடன் வெளிப்படுகிறான். கிருஷ்ணர் சக்கரத்தை இப்போது விலக்கி கொள்ள பகல்பொழுது மீள்கிறது. சவ்யசாசி அர்ஜுனன்  விட்ட அம்பு ஜெயத்திரதன் தலையை கவ்வி தன்னுடன் மேலே எடுத்து செல்கிறது.  எல்லாம் வல்ல கண்ணன் இல்லாமல் அர்ஜுனனின் சபதம் தோற்றிருக்கும். 
திருமழிசைப்பிரான் தமது நான்முகன் திருவந்தாதியில் :

நிலைமன்னும் என்னெஞ்சம் அந்நான்று, தேவர்
தலைமன்னர் தாமே  மாற்றாக, - பலர்மன்னர்
போர்மாள வெங்கதிரோன் மாயப் பொழில்  மறைய
தேராழியால்    மறைத்தாரால்.

மஹாபாரதயுத்தம் நடந்த அக்காலத்தில்,  தேவாதிதேவனான கண்ணபிரான் தானே  பாண்டவர் பக்கலும் - அவர்தம் எதிரிகளுக்கு எதிரியாகவும் பல மன்னர்களை, குருக்ஷேத்திர யுத்த களத்திலே வதைக்க காரணமாய் இருந்தான்.  அர்ஜுனனுக்காக - ஒளிகொண்ட சூரியனையே அகாலத்தில்  அஸ்தமிக்கும் படியாகவும்,  பூ மண்டலம் முழுதும் இருள் மூடும்படியாகவும் - தேர் ஆழியால் (சக்கராயுதத்தினால்) மறைத்த ஸ்ரீ பார்த்தசாரதியான கண்ணபிரானையே எனது மனம் என்றென்றும் சலிப்பற்று நிலை நிற்கப் பெற்றது ~ என நமக்கு வழிகாட்டுகிறார் நம் திருமழிசைப்பிரான்.

In today’s purappadu it is Nanmukhan Thiruvanthathi and Sri Thirumazhisai Alwar guides us to reach to that Lord who by His divine act of holding high His Sudarshana chakra, caused temporary eclipse of Sun.  Enjoying the false sense of security concluding that the Sun has set for the day, Jayadrada came out.  Arjuna who had vowed to eliminate him before sunset, thereby utilized the opportunity to avenge the killing of his valiant son Abhimanyu. 





Thirumangai Mannan guides us to take refuge in that Lord who by His divine grace ensured victory of Pandavas thereby ensuring victory of good over evil. In today’s Thavana Uthsava purappadu, there is rendering of Nanmukhan thiruvanthathi.




Here are some photos of our Supreme Sri Parthasarathi taken during the morning purappadu to Thavana Uthsava bungalow.

adiyen Srinivasa dhasan.
25th Feb 2018.

No comments:

Post a Comment