On day 5 of Sri Parthasarathi rbrahmothsavam – the most
beautiful Emperuman enraptured us in “Nachiyar Thirukkoalam” – dressed as
Ezhilmigu Thayar in a grand sitting posture.....Srimannarayana- the ever merciful Lord is always our
esteemed protector. He is our Rakshak. He is glorified in the Vedas as the
Supreme entity. He is "Veda Mudalvan". The sublime beauty and oozing
benevolence as exceptionally visible in the Thirumugam [face] of Perumal –
Nachiyar.
..... the beautiful women of Thiruvallikkeni were
circling around to have darshan of Him, look and envy the best of silk saree of
ink blue shade tastefully worn and one remarked on the ‘big
thirumangalyam’ that was adorning the Nachiyar, while others adored the little
parrot.
Srimannarayana- the ever merciful Lord is always our
esteemed protector. He is our Rakshaka. He is glorified in the Vedas as the
Supreme entity. He is "Veda Mudalvan". The sublime beauty and oozing
benevolence are exceptionally visible in the Thirumugam [face] of Perumal –
Nachiyar. Here are some photos taken during the morning purappadu.
பெருமாளின் அழகு சௌந்தர்யம் வார்த்தைகளால்
விவரிக்கமுடியாதது. கருத்துக்கு மிக எளியனான அப்பெருமாளின் கருணைமிகுந்த
திருக்கோலத்தை காண பக்தர்களுக்கு ஆசை வருவது இயல்பு. பெருமாள்
தனது வாத்சல்யம், சௌலப்யம் போன்ற கல்யாணகுணங்களை எல்லாம்
நமக்கு அருளி, மிகஅழகாக குத்துக்காலிட்டு அமர்ந்து
அபயஹஸ்தத்துடன் காட்சிதரும் எழில்மிகு திருக்கோலமே நாச்சியார்திருக்கோலம்
திருவல்லிக்கேணியில் எல்லா பெரிய உத்சவங்களிலும் ஐந்தாம்நாள்
ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செய்த 'திருவிருத்தம்' சேவிக்கப்பெறுகிறது.
ருக்வேதசாரமான திருவிருத்தம் 100 பாடல்கள் கொண்ட அந்தாதி; கட்டளைக் கலித்துறைப்பாடல்களால்
ஆனது. நம்மாழ்வார் 'பராங்குசநாயகியாய்' தம்மை பாவித்து பாடிய பாடல்கள் இதில் உள்ளன. எம்பெருமானுடைய திருக்கண்கள்;
திருக்கைகள்; திருவடி என்னுமுறுப்புகள்
ஸாக்ஷாத் தாமரைமலர்களே; திருமேனி நிறமோவெனில், ஒரு அஞ்சனமாமலை போன்றுள்ளது; ஞானத்தில் மேம்பட்ட
பரமபதத்து நித்யஸூரிகளும் விவரிக்க முடியாத
அதிரூபசௌந்தர்யம் எம்பெருமானது
திருமேனியழகு. ஐந்தாம்நாள் காலை பக்தர்களுக்கு அருள்பாலித்த
நாச்சியார் திருக்கோலம் இங்கே:
Adiyen Srinivasa dhasan
No comments:
Post a Comment